What Is Corruption In Tamil

அன்றாட வாழ்வில் நம் மூலமாகவும் அல்லது நம்மை அறியாமலும் இந்த ஊழல் Corruption நம்மோடு தான் இருக்கிறது. நீங்கள் ஏதோ ஒரு வகையில் ஊழலை சந்திக்க நேரிடும், ஊழல் நேரடியாக உங்களை தாக்கினாலும் உங்களால் திருப்பி தாக்க இயலாது. காரணம், ஊழல் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

ஊழலை நீங்கள் ஒழிக்க விரும்பினால் அது உங்களை சார்ந்தது மட்டுமல்ல மக்களை சார்ந்தது. நீங்கள் ஒருவர் நினைப்பது மட்டும் சரியாக இருக்காது, ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

The Start Of Corruption

ஊழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று கேட்டால் அது ஒருவரின் சுயநலத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று கூறலாம். ஒருவர் ஒரு தொழிலை சேவையாக பார்க்காமல் தொழிலாக பார்த்தார் என்றால் அங்கு ஊழல் உருவாகும். எடுத்துக்காட்டாக அரசியல்.

அரசியலில் உள்ள ஒரு தலைவர் அரசியல் என்ற ஒரு சேவையை, சேவையாக பார்க்காமல் ஒரு தொழிலாக பார்த்தார் என்றால் அங்கு ஊழல் கண்டிப்பாக நடக்கும்.

ஒரு தலைவர் சரியாக இருந்தால் அவர்களுக்கு கீழ் உள்ள தொண்டர்களும் சரியாக வேலை செய்வார்கள். ஒருவேளை தலைவர் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் கீழுள்ள தொண்டர்கள் இரண்டு மடங்காக ஊழல் செய்வார்கள்.

அரசியல் பின்புலம் உள்ள ஒரு நபர் தவறு செய்கிறார் என்றால், அந்தத் தவறை சரிசய்ய வேண்டும் என அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் நினைக்கும் பொழுது அது அங்கு நடக்காமல் போகிறது, எங்கிருந்துதான் ஊழல் ஆரம்பிக்கிறது.

தவறு செய்யாமல் நேர் வழியாக நடக்கும் ஒரு நபரை இந்த சமுதாயம் அவருக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தை பயன்படுத்து முடியாமல் போகும் பொழுது அவர் அவருக்கான சட்டத்தை அவரே எடுத்துக் கொள்கிறார், எங்கிருந்துதான் ஊழல் ஆரம்பிக்கிறது.

The Story Of Corruption

அரசியல் பின்புலம் உள்ள ஒரு முதலாளி, அரசியல் பின்புறம் அற்ற ஒரு தொழிலாளி, கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கட்டத்தில் வேலை பிடிக்காமல் தொழிலாளி நின்று விடுகிறார் என்று எடுத்துக் கொள்வோம்.

அவருக்குத் தேவையான அந்த 15 நாள் சம்பளம் தொழிலாளி முதலாளியிடம் கேட்கப்படும் பொழுது முதலாளி தர மறுக்கிறார். அந்தப் 15 நாள் சம்பளம் ஆயிரம் ரூபாய் என எடுத்துக் கொள்வோம்.

முதலாளிக்கு வேண்டுமானால் அது வெறும் ஆயிரம் ரூபாயாக இருக்கலாம். ஆனால், தொழிலாளிக்கு அந்த ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய மதிப்பு. முதலாளி தர மறுக்கிறார் என்ற போது தொழிலாளியின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும், ஊழல்.

இங்கு ஊழலை வெறும் ஊழலாக மட்டும் பார்க்காமல் அது கொலை, மிரட்டல், கடத்தல், திருட்டு போன்ற என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சரி அந்த தொழிலாளி நேர்மையான வழியில் அந்த ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வாங்க நினைத்தால் சட்டத்திற்கு செல்ல வேண்டும்.

காவல்துறையில் அவர் மீது புகார் கொடுத்தார் அரசியல் பின்புலம் உள்ள அந்த முதலாளி எவ்வாறு காவல்துறை அவரை பிடிக்கும். பிடிக்க வேண்டிய காவல்துறை பிடிக்காமல் போவது என்பது எங்கு ஊழலாக கருதப்படுகிறது.

ஒருவேளை காவல்துறை அவர் மீது போடப்பட்டிருந்த புகாரை பெற்றுக் கொண்டால், சட்டத்திற்கு தண்டனை கொடுக்கக் கூடிய அந்த வழிமுறையின் செலவுகள் ஆயிரத்தை தாண்டும்.

தொழிலாளி ஆயிரம் ரூபாய் பணத்தை பெற ஐந்தாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியதாக இருக்கும். இது சட்டத்தின் ஊழலாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு பொருளின் விலை அதிகரிக்கும் பொழுது ஒரு சாமானிய மக்களின் பிரச்சனை பெரிதாக பார்க்கப்படுவதில்லை இங்கு.

எவ்வளவு ரூபாய் பணம் அல்லது பொருளின் விலை அதிகரிக்க ஒரு சாமானிய மக்களின் பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது சாதாரணமாக தான் பார்க்கப்படும், இந்த சட்டத்தின் கீழ்.

Law Of Corruption

ஒவ்வொரு காவல்துறைக்கும் அவர்களுக்கான உரிமை கண்டிப்பாக கொடுக்கப்படும் மக்கள் மத்தியில். ஆனால் ஒரு சில காவலர்கள் அவர்களது உரிமையை மீறி மக்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள்.

இது மனித உரிமை மீறல் சட்டத்தின் கீழ் வரும் என்ற போதிலும் சட்டம் பணம் அதிகம் கொடுக்க நபர்களுக்காகவே இங்கு உள்ளது.

இவ்வாறு சட்டம் பணக்காரர்களுக்கானது என்பதால் சிறு மற்றும் குறு தொழில் செய்யும் பாமர மக்கள் பிரச்சனை கவலைக்கிடமாகவே உள்ளது, இன்று வரை.

ஒருவர் மற்றொருவரை ஏமாற்றினால் சட்டத்தின் கீழ் அவர் தண்டிக்கப்படுவார் எனினும் பணம் வைத்திருக்கக் கூடிய அந்த முதலாளி பணத்தை சரியாக பயன்படுத்தி தான் தவறு செய்யவில்லை என எளிதாக புரிய வைத்துவிட முடியும்.

ஒரு படித்த இளைஞர்களுக்கு இவ்வாறு நடக்கிறது எனில், சட்டம் அவர் பார்வையில் இருக்கிறதே தவிர அவர் கூட இல்லை என்பது சமுதாயத்தின் சீர்கேடாக பார்க்கப்படுகிறது.

படிக்காத முதலாளி சரியாகவும் படித்த இளைஞர் தவறாகவும் நடக்கும் கட்டாயம் இப்பொழுது பெரிதளவு பார்க்கப்படுகிறது.

ஒரு தவறு செய்யக்கூடிய ஒருவர் தான் தவறு செய்யவில்லை என பொய் சொல்லும் பொழுது, அவருக்கான தண்டனை கிடைக்க மறுக்க படுகிறது. சரி இப்பொழுது தொழிலாளியின் நிலையை அறிவோம்.

தனக்கு நீதி கிடைக்காத பொழுது ஒரு தொழிலாளி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு வருவார். ஆயிரம் ரூபாய் கிடைக்காத அந்த தொழிலாளி அடுத்து எடுக்கும் நிலை திருட்டு.

அவர் திருடுவதற்கு அந்த முதலாளி பெரிதும் காரணம். தொழிலாளி, முதலாளியிடம் மட்டும் திருடுவதை விட மற்றவர் இடத்திலும் திருட நினைப்பது சட்டத்தின் சீர்கேடாக பார்க்கப்படுகிறது.

Politics Importance

இந்த இடத்தில் தலைவர் சரியாக இருந்திருந்தால் தலைவர்களுக்கு கீழ் உள்ள தொண்டர்கள் மற்றும் காவலர்கள் சரியாக நடந்து கொண்டிருப்பார்கள் அந்த தொழிலாளி இடத்தில், அவருக்கான சரியான நீதியும் கிடைத்திருக்கும் முதலாளி காண தண்டனையும் கிடைத்திருக்கும்.

ஒரு தலைவர் ஏன் ஊழல் செய்ய வேண்டும்?.. விலைப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வாக கூட இருக்கலாம்.

ஒரு தலைவர் ஊழல் செய்கிறார்கள் என்றால் ஊழல் செய்வது தவறு என்று நாங்கள் கூறவில்லை.  மாறாக அவர் தகுதிக்கு மீறி ஊழல் செய்வதை தான் நாங்கள் ஊழல் என்று கூறுகிறோம்.

ஒருவர் பசிக்கிறது என்றால், அவர் வயிறு நிரம்பும் வரை மட்டுமே சாப்பிட இயலும். அதற்கு மேல் அவர் சாப்பிட்டால் அவர் இறந்து விடுவார்.

ஊழல் செய்யும் பொழுதும் அப்படித்தான் உங்கள் தேவைக்கு எடுத்துக் கொள்வதை விட தேவைக்கு அதிகமாக எடுப்பது இங்கு ஊழலாக பார்க்கப்படுகிறது.

ஒருவர் அவர் தான் செய்யும் தொழிலுக்கு சம்பளத்தை மட்டும் வாங்காமல் அதற்கு மாறாக ஒரு சில சதவீதம் சம்பளத்தை சேர்த்து எடுத்துக் கொண்டால் அது ஊழலாக பார்க்கப்படுகிறது.

இந்த ஊழல் நம்முடன் இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என நான் மட்டும் நினைத்தால் போதாது, எல்லா மக்களும் நினைக்க வேண்டும்.

எவ்வாறு இந்த ஊழலை நிறுத்துவது?…

How To Stop This Corruption

First Five Step

ஒரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தலைமுறை பட்டதாரியும் கண்டிப்பாக அவர்களின் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்.

அவ்வாறு படிக்க வைத்தால் மட்டுமே ஊழல் என்றால் என்ன அதை எவ்வாறு சரி செய்யலாம் என்ற ஒரு மனநிலைக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள்.

அண்டை மாநிலமான கேரளா அவர்கள் 90 விழுக்காடு கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அங்கு ஊழல் மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் படிப்பு என்பது இந்த ஊழலுக்கு ஒரு முடிவு கட்டும் என நம்பப்படுகிறது.

அரசாங்கத்தில் நமக்கான சேவையை பெற நினைக்கும் பொழுது, பதவியில் இருக்கும் சிலர்கள் அவர்கள் அறிவுறுத்தலின் படி சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டி இருக்கும்.

அவ்வாறு பின்பற்றினால் தான் நமக்கான சேவையை நாம் பெற முடியும் என்ற ஒன்று இன்று வரை உள்ளது.

இந்த வழிமுறையின் மூலமாக பதவியில் இருப்பவர்கள் ஊழல் செய்கிறார்கள். இந்த வழிமுறைகளை முடிந்தவரை எவ்வாறு குறைக்கப்படுகிறது அவ்வாறு ஊழல் குறைக்கப்படும்.

இப்பொழுது உள்ள அரசியல்வாதிகளின் மேல் அதிகளவு புகார்கள் உள்ளது. நீங்கள் ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் அவர்கள் மீது எந்த ஒரு புகார்களும் இல்லாதவாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு தலைமுறையினரும் இவ்வாறு புகார் இல்லாத ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொழுது அங்கு கண்டிப்பாக ஒரு மாற்றம் நிகழும்.

எந்திர மயமாக்குதல். அதாவது நமக்கான சேவை அரசாங்க இடத்தில் மட்டும் கிடைக்காத மாதிரி இல்லாமல் பொதுவழி தலங்களில் கிடைக்கும் படி இருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது அரசாங்கம் நம்முடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. பணப்பரிவர்த்தனையும் அரசாங்க இடத்தில் தவறுதலாக போய் சேராது.

Next Five Step

1988 களில் கொண்டுவரப்பட்ட இந்த ஊழல் சட்டமானது இன்று வரையில் இருக்கிறதே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை. காரணம் சட்டம் பணம் இருப்பவர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது.

பணம் கொடுத்து எந்த பதவியில் உள்ளவரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணம் பணம் வைத்து உள்ளவர்களுக்கு வந்து விட்டது.

ஊழல் பதவியில் உள்ள பதவியாளர்கள் தங்கள் சட்டத்தை சரியாகவும் கடுமையாகவும் பயன்படுத்தினால் மட்டுமே இந்த ஊழலை குறைக்க முடியும்.

அரசாங்கத்தை வேலை பார்க்கக் கூடிய அல்லது அரசாங்கத்திடம் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் மற்றும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

அரசியல்வாதியாக இருக்கட்டும் அல்லது அரசு வேலை செய்யக்கூடிய ஊழியர்களாக இருக்கட்டும், தங்கள் வேலைக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

ஒருவர் ஒரு சேவைக்காக உங்களிடத்தில் வருகிறார்கள் என்றால் அவருக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அதை செய்வதற்கான வழியை அவர்களிடத்தில் காட்ட வேண்டும்.

மாறாக அவர்களே நாளை, வா நாளை வா என்று மன உளைச்சலுக்கு ஆளக்கப்படும் பொழுது அவர்களிடத்தில் உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போகிறது.

எல்லா அரசியல் ஊழியர்களும் இவ்வாறாக இல்லை ஒரு சில நல்ல உள்ளம் கொண்ட அரசு ஊழியர்களும் உள்ளார்கள்.

அரசியலில் ஊழல் செய்யக்கூடிய அவர்களுக்கு எங்களுடைய பதில் கோபத்தை தான் வர வைக்கும். உங்களுக்கு கோபம் வருகிறதா?

Conclusion

சமீபத்தில் நடக்கப்பட்ட ஆய்வுகளின் படி தமிழ்நாட்டில் ஊழல் என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

நிலம், பட்டா, சொத்து போன்ற துறைகளில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படுகிறது என கூறப்படுகிறது.

ஊழல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் சீர்குலைக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை இதனை முழுமையாக ஒழிப்பதற்கு அரசாங்கமும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க: Explain Social Media Society

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *