இந்தக் குழந்தையின் பெயர் பாரி( Paari ). இந்தக் குழந்தையின் பின்னணி என்ன மற்றும் இந்த குழந்தையினால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி பின்வருமாறு காணலாம். தொடர்ந்து கதையை படியுங்கள்.
Paari History
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த அந்த கிராம மக்கள், தங்களுடைய உணவு பழக்கங்கள், சந்தோஷம், நிம்மதி போன்றவற்றை இழந்து இருந்தார்கள்.
இந்த கிராம மக்கள் அவர்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்து, ஒரு தங்கத்திலான சூலத்தை செய்து குடமுழுக்கு நடைபெற இருந்தது. இந்த நிலையில் இவர்களை ஆட்சி செய்த ஆங்கிலேய வம்ச இளவரசரை அழைத்து அந்த திரிசூலத்தை கோவிலுக்கு கொடுக்கும்படியாக இருந்தது.
திரிசூலத்தை கோவிலுக்கு கொண்டு செல்லும் நேரத்தில், அந்தக் கோவிலின் பூசாரிக்கு அருள் வந்து அழுக்கு படிந்த கைக்காரர்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்றும், வேல் மச்சம் உள்ள ஒருவனால் மட்டுமே உங்களுக்கான விடிவுகாலம் என்றும் அருள் வாக்கு கூறிவிட்டது.
மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளவரசர் அந்த திரிசூலத்தை தனது கோட்டைக்கு எடுத்துச் சென்று விட்டார். அதே சமயம் அந்த வேல் மச்சத்தை உடைய குழந்தை பிறந்தால் உடனே அழிக்கும்படி உத்தரவிட்டு விட்டார்.
ஒவ்வொரு பெண்ணிற்கும் குழந்தை பிறக்கின்ற தருவாயில் அது என்ன குழந்தை எங்கு மச்சம் உள்ளது என்பதை ஆராய்ந்து அந்த குழந்தையை கொன்று விடுவார்கள்.
அந்த கிராமத்தில் பிறந்த ஒரு பெண்மணிக்கு இரட்டை குழந்தை அதில் ஒரு குழந்தைக்கு வேல் மச்சம் இருந்தது.
இந்தக் குழந்தை இங்கிருந்தால் கொன்று விடுபவர்கள் என அந்த குழந்தையை அந்த பூசாரியிடம் கொடுத்து வேறு எங்கேயாவது கொண்டு சேர்த்து விடு என கூறிய அந்த ஊர் மக்கள், சில தங்க காசுகளை கொடுத்து வைத்து அழைத்து வைத்தனர்.
அந்த பூசாரி கொடுத்த நாணயத்திற்கு மது வாங்கி குடித்து கோவிலில் இறந்து விட்டார்.
கோவிலில் குழந்தை அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டது அந்த வழியாக சென்ற பெண் அந்த குழந்தையை தூக்குகிறார்.
அந்தக் குழந்தையை தூக்கி வந்த பெரியவர், குடிபோதையில் இறந்து கிடக்கிறார். இந்தக் குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பெண்மணி தனக்கு குழந்தை இல்லாததனால் கடவுள் கொடுத்ததாக அந்த குழந்தையை தன் வீட்டிற்கு தூக்கிச் செல்கிறாள்.
Paari Habits
ஆரம்பத்தில் தெரியவில்லை, குழந்தை வளர வளர அது முகத்தில் சிரிப்பே பார்த்ததில்லை எவரும். இந்த குழந்தை எப்பொழுதும் மௌனமாகவே இருக்கும்.
மருத்துவரை அணுகுகிறாள் அம்மா, மருத்துவரும் குழந்தைக்கு பாதிப்பு பெரிதளவு இல்லை எனிலும் குழந்தையை அதிகமாக சிரிக்க வைத்தால் வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
இந்தக் குழந்தை வீட்டிற்கு வந்தது மனைவியின் கணவருக்கு பிடிக்கவில்லை அந்த குழந்தை அப்பா என்று அழைத்தால் கூட அவர் வெறுத்து விலகி வடுவார்.
இதன் காரணமாகவே அந்த குழந்தை பெரிதும் வருத்தத்துடன் தனிமையிலேயே இருக்கும். பள்ளி மாணவர்களுடன் கூட நெருக்கம் இல்லை எல்லா மாணவர்களுடனும் சண்டை, ஆசிரியர்கள் அவன் அம்மாவை அழைத்து பேசினார்கள்.
அவர்கள் கூறியது போலவே அவனே அவனுக்கு பிடித்த துறையில் சேர்க்க நினைத்தால். அவன் சண்டையின் காரணமாக அவனை ஒரு கராத்தே பள்ளியில் சேர்த்தால் அந்த அம்மா.
காலங்கள் சென்றன, வளர்ப்புத்தாய் மரணத்தின் கடைசியில் அந்த பையனிடம் கூறுகிறார். “நான் உன் அம்மா இல்லை, நீ கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட பையன்” என்று.
இதைக் கேட்டு அவன் தன் யார் என்று புரிந்து கொள்கிறான். பாரியின் அம்மா இறந்து போகிறாள். இறக்கும் முன் ஒன்று கூறுகிறார். “நீ சிரிச்சா அழகா இருப்ப பாரி” என்று.
பாரியின் அப்பா மறுமணம் செய்து கொள்கிறார். மறுமணம் ஆகி இப்பொழுது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையை முழுவதும் பாரி தான் பார்த்துக் கொள்கிறான்.
காலப்போக்கில் இவன் சிரிப்பு இவனிடம் இல்லாமலேயே போனது. சண்டை, சலசலப்பு, கைகலப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு, ஊரில் பெரிய ரவுடியாக இருந்து வந்தான். 15 வருடம் கலித்து,
Paari Lover
அந்த ஊருக்கு புதிதாக வந்த கால்நடை மருத்துவரை ஒரு சமயம் பார்க்க செல்கிறான். பார்த்த இடத்தில் இருவருக்கும் காதல் வயப்பட்டது.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்தனர். அப்பொழுது காதலி பாரியிடம் இந்த தொழிலை விட்டு விடு என கூறுகிறாள்.
பாரியும் இந்த தொழிலை முழுவதுமாக விட்டு விட்டு வருகிறேன் என பதில் கூறுகிறான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
அந்த சமயத்தில் வளர்ப்பு அப்பா அவனிடம் கொள்ளையடித்த பணம் எங்கே என கேட்கிறார். கூற முடியாது என பாரிக் கூறுகிறான். இருவருக்கும் இடையே வாக்குவாதம் வளர்ந்து கொண்டே போகிறது.
பாரின் அப்பா காதலியை கொல்ல நினைக்கும் பொழுது, பாரி அப்பாவின் கையை வெட்டி விடுகிறார். கல்யாணம் நின்று விட்டது. பாரி காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார்.
காதலி கண் காணாத இடத்திற்குச் சென்று விட்டாள். பாரியின் நண்பர்கள் மூலம் தனது காதலியை தேடச் சொல்கிறான். நண்பர்கள் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.
நாட்கள் இவ்வாறு சென்று கொண்டே உள்ளது. இதே சமயம் அவன் தனக்கு பாதுகாப்பான தற்காப்புக் கலையை கற்றுக் கொள்கிறான்.
ஐந்து வருடம் கழித்து ஒரு நாள், தனது நண்பர்கள் அவளை கண்டுபிடித்து விட்டதாக கூறுகிறார்கள். அதே சமயம் காவல்துறை உனக்கு ஒருவேளை உள்ளது அதை சரியாக செய்தால் உனக்கு பணம் கிடைக்கும் என கூறுகிறார்.
காவல் துறை அதிகாரி கூறியதை சரியாக பயன்படுத்தி தப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறான்.
காவல் துறை அதிகாரி கூறியிருந்த அந்த வேலையை செய்யாமல் வேலை செய்ய வந்த ஆட்களை தாக்கி அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டான்.
இதை சரியாக பயன்படுத்திய பாரி காவல் நிலையத்திலிருந்து தப்பித்து வெளியில் வருகிறார்.
Paari Meets Lover
தனது காதலி இருக்கும் இடத்திற்கு படகில் பயணிக்கிறான்.
அவன் காதலி இருப்பது ஒரு தீவு. அந்த தீவில் ஒரு கிராமத்தில் அவள் வசித்து வருகிறாள். பாரி தான் ஒரு நகைச்சுவை நாயகன் என்று கூறிக்கொண்டு அந்த கிராமத்தில் உள்ளே நுழைகிறான்.
நகைச்சுவை செய்து கொண்டிருக்கும் பொழுது தனது காதலியை எதார்த்தமாக பார்க்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து நிற்கின்றனர்.
காதலி பாரியை பார்த்ததும் அங்கிருந்து சென்று விட்டாள். காதலி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தனது காதலை பற்றி பேச நினைக்கிறான் பாரி. அதற்கு காதலி மறுப்பு தெரிவிக்கிறாள்.
இருப்பினும் ஒவ்வொரு முறையும் காதலியை ஏதோ ஒரு வகையில் சந்தித்து பேச நினைக்கிறான் பாரி. அவன் செய்த நல்ல காரியங்களை கூறி அவள் மனதில் இடம் பிடிக்கிறான்.
அவள் மனதிலும் ஆசை இருக்கிறது ஆனால், அதை அவள் வெளியே காட்டிக் கொள்வதில்லை என்பதை பாரி உணர்கிறான். இச்சமயம் தனது காதலே அவன் வெளிப்படுத்துகிறான்.
அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று வருகின்றனர். முதன் முதலில் பாரின் முகத்தில் சிரிப்பு தோன்றுகிறது.
அப்பொழுது அவள் இருக்கும் அந்த கிராமத்தின் சூழ்நிலைகளை பற்றி பாரிடம் கூறுகிறாள். இந்த கிராமம் ஒரு அடிமைத்தனத்தின் உச்சகட்டமாக இருந்து வருகிறது இன்று வரை மற்றும் மறுத்து பேசுபவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் அவள் அவனிடம் கூறுகிறாள்.
அவன் இருக்கின்ற காதல் மயக்கத்தில் அவள் கூறுவதைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை, பாரியின் நினைவு முழுவதும் அவளுடன் தனிமையில் இருப்பது மட்டுமே.
Lover Tell Some Story
காதலி பாரியிடம் “இந்த மக்கள் சிரிக்கவே மாட்டேங்கிறாங்க” இவங்களை சிரிக்க வை அதான் உன்னோட கடமை என்று பாரி இடம் கூறுகிறாள்.
பாரியும் அந்த மக்களை சிரிக்க வைப்பதற்காக கோமாளி வேடம் அணிந்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறான். இருப்பினும் அந்த கிராம மக்கள் சிரிக்க விருப்பமில்லாமல் இருக்கின்றனர்.
இந்த சமயம் ஆங்கிலேய வம்சத்தில் வந்த கடைசித் தலைமுறையின் வாரிசு பாரியை சந்திக்கிறான். அவள் பாரியின் முழு விவரத்தையும் கூறி காதலியுடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து செல்கிறான்.
பாரியின் காதலி அழுது கொண்டு, “நீ எனக்கு சரியானவன் இல்லை” என கூறி அவன் கையில் இருந்த பரிசை உடைத்து விட்டு, பாரியின் காதலி அங்கிருந்து சென்று விடுகிறாள்.
மன உளைச்சலுக்கு ஆளான பாரி கரையோரத்தில் அமர்ந்து மது அருந்து கொண்டு புலம்பி கொண்டு இருக்கிறான்.
அங்கு வந்த கிராம மக்கள், பாரியின் வேல் சின்னத்தை பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் அவரை கூட்டிச் சென்று, பாரி யார் எங்கிருந்து வந்தார் என்கின்ற முழு விவரத்தையும் அந்த ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.
நம்மை காக்க வந்த கடவுள் என அந்த ஊர் மக்கள் பாரியை முழுவதுமாக நம்புகின்றனர். தனது ஊர் பொதுமக்களுக்கு இவ்வாறு நடந்து இருப்பதை நினைத்து வருந்துகிறான் பாரி.
இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய வம்சத்தின் கடைசி வாரிசை நோக்கி செல்கிறான்.
Paari Fight
தனது வயிற்றில் இருக்கின்ற வேல் சின்னத்தை அவனிடம் காட்டுகிறான்.
இவ்வளவு நாளாக அவ்வாறு ஒரு குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக அவ்வாறு ஒன்று இல்லை என்பதை நம்பியவன், இப்பொழுது முழுவதுமாக பூசாரிக்குரியதை நம்புகிறான்.
இவ்வளவு நாள் விழிப்புடன் இருந்தவை அனைத்தும் முற்றிலும் வீணாகி விட்டதே என்ற கோபத்துடன் தனது எதிரியை முதன் முதலில் பார்க்கின்றான்.
அவனுக்கு கோவம் வருகிறது. தன்னை அழிக்க வந்தவன் உயிருடன் இருக்கக் கூடாது என்பதற்காக அவனை தீர்த்து கட்ட நினைக்கிறான்.
இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி கொண்டே போகிறது. பாரி தனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட தற்காப்பு கலையை பயன்படுத்தி எதிரியை வீழ்த்துகிறான்.
எதிரி இறந்த நிலையில் தனது கிராம மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட திரிசூலத்தை மீண்டும் கோவிலுக்கு சென்று அங்கு வைக்கிறான்.
கிராம மக்கள் அவரின் செயலை கண்டு நெகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர். இந்த செயலை பார்த்துக் கொண்டிருந்த காதலி அவனிடம் வந்து சேர்கறாள்.
பாரியின் இந்த செயலை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊர் மக்கள் முதன் முதலாக மகிழ்ச்சி பொங்கி சிரிக்கின்றன.
பாரிக்கும் பாரியின் காதலிக்கும் அன்று திருமணம் மீண்டும் அரங்கேறி இருந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
நன்றி…
மேலும் படிக்க: Beer Is A Traditional Food in Tamil