The Untold Story of 90’s Memories Recap

1990களில் இருந்த விளையாட்டு மற்றும் பயன்பாட்டு முறையை பற்றி தற்போது பார்க்கலாம். நாம என்னதான் முற்போக்குத்தனமாக சிந்தித்தாலும், 90’s களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், பிற்போக்குத்தனமாக இருப்பது எவ்வளவு அழகானது சுவாரஸ்யமானது என்று. அவ்வாறாக மறைந்து போன சில தகவல்களை உங்களிடம் பகிர விரும்புகிறேன். தொடர்ந்து படியுங்கள்.

Food Of 90’s

Part 1

எங்க ஊரில் பள்ளி பக்கத்தில் ஒரு தாத்தா கடை ஒன்னு நடத்தி வந்தார். அங்க 50 பைசா, 25 பைசா நாளனா, எட்டணா என்ற நாணயங்களுக்கு தின்பண்டம் கிடைக்கும்.

எங்கள் வீட்டில் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற விதம் கொடுப்பார்கள் அப்பா.

இந்த ஒரு ரூபாய்க்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் அந்த ஒரு ரூபாயில் தின்பண்டம் வாங்கி அருந்திய நாட்கள் மிகவும் அரிதானது.

அந்த நாட்களை நினைத்து பார்க்கையில் அது எவ்வளவு அழகான நாட்கள் என்பது இப்பொழுது தான் புரிகிறது.

வெயில் காலம் வந்து விட்டால் போதும், ஐஸ் வண்டிக்காரர் வந்துவிடுவார். அவர் எழுப்பக்கூடிய சத்தம் இன்று வரை என் மனதில் ஒலித்து கொண்டே இருக்கிறதே தவிர என்னை இன்றும் விட்டு போகவில்லை.

அந்த ஐஸ் வண்டியின் சத்தம் கேட்டால் போதும், தொலைக்காட்சி பார்ப்பதை கூட நிறுத்திவிட்டு ஐஸ் வாங்க சென்று விடுவோம்.

அதுவும் ஐஸ், காசு கொடுத்து வாங்க மாட்டோம், பழைய பேப்பர் அல்லது ஆங்காங்கே கிடைக்கக்கூடிய இரும்புகளை சேகரித்து வைத்து வாங்குவோம்.

அப்பா வாங்கிக் கொண்டு வரக்கூடிய ரஸ்னா பாக்கெட்டில், சுவை இருக்கோ இல்லையோ அதை வாங்கி குடித்த அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் பொழுது இன்றும் இனிக்கிறது.

இப்பொழுது இருக்கக்கூடிய உணவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அப்பொழுது இருந்த உணவு வகைகள் மிகவும் சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தன.

கம்மஞ்சோறு, சோள சோறு, கேழ்வரகு சோறு மற்றும் திணை வகைகளை கொண்டு சமைக்கப்படும் உணவுகள் அனைத்தும் மனிதனுக்கு ஆயுள் சக்தியை அதிகப்படுத்தியதாக நான் பார்க்கிறேன்.

இந்த காலங்களில் உள்ள சமைக்கப்பட்ட, பொறிக்கப்பட்ட, வருக்கப்பட்ட உணவுகள் மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்தும் உணவுகளை உண்ணுகிறீர்கள்.

உணவு மனிதனுக்கு நல்லதை ஏற்படுத்துவதை விட, கெடுதல் தான் அதிகம் ஏற்படுத்துகிறது. “உணவே மருந்து” என்ற காலம் சென்று, மருந்தே உணவு என்ற காலம் வந்துவிட்டது.

Part 2

எந்த ஒரு அரிசி அரைக்க வேண்டும் என்றாலும் அல்லது புளியிலிருந்து கொட்டையை எடுக்க வேண்டும் என்றாலும் கைகளை பயன்படுத்தி உண்டு வந்தோம். ஆனால்,

எந்திரம் வந்தவுடன் அந்த பழக்கங்கள் குறைந்து கொண்டே செல்கிறது என்பதை கவனித்தீர்களா?.

ஒரு செயலுக்கு எந்திரம் வந்துவிட்டது என்பதனால் கைகளில் செய்வது நிறுத்தக்கூடாது என்பது உங்களுக்கு தெரிய மாட்டேங்குது.

மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் ஒரு இயந்திரம் செய்கிறது என்றால் அது மனித குலத்திற்கு பெரிதும் ஆபத்து என்பதை அவ்வப்போது மறந்து விடுகிறீர்கள்.

இவ்வாறு சிறிய சிறிய விஷயங்களில் ஆரம்பித்து நம்முடைய முன்னோர்கள் கற்றுக் கொடுத்த அனைத்து விஷயங்களும் மறைந்து கொண்டே போகிறது.

சமைப்பதற்கு முதலில் அடுப்பு, விறகு, கட்டை போன்றவை தேவைப்பட்டு வந்தது, இப்பொழுது சிலிண்டர் கேஸ் வந்துவிட்ட காரணத்தால் அடுப்பில் சமைப்பது என்பது அழிந்து கொண்டே வருகிறது.

சில சமயங்களில் அடுப்பில் சமைத்த உணவுகள் கூட அதிக அளவில் கெட்டுப் போகாமல் இருந்தன. ஆனால், இப்பொழுது சமைக்க கூடிய உணவுகள் ஒரு நாளில் கெட்டுப் போகின்றன. என்ன காரணம் என்று நீங்கள் தான் கூற வேண்டும்!.

இப்பொழுது படிக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்து விடுகின்றன. ஆனால், நாங்கள் படிக்கும் பொழுது தட்டு மட்டுமே எடுத்துச் செல்வோம்.

பள்ளியில் வழங்கக்கூடிய இலவச சத்துணவு திட்டத்தின் மூலம் சாப்பிட்டு வந்தோம். சத்துணவு சாப்பிட்ட அனுபவம் உண்டா உங்களுக்கு?

சாலையின் இருப்புறங்களில் இருக்கக்கூடிய செடி கொடிகளில் உள்ள நுனிப்பழம், நாவல்பழம், கோவாப்பழம் இவைதான் எங்களுக்கு அன்று தீனி. இவைகளை மட்டுமே சாப்பிட்டு அன்று நாங்கள் காலத்தை நகர்த்தினோம்.

சில சமயங்களில் ஆரஞ்சு மிட்டாய் மற்றும் ஃபாண்டா, மிராண்டா போன்ற குளிர்பானங்களை கூட அருந்த வாய்ப்பு கிடைத்தது.

சில இடங்களில் இன்றளவும் இருக்கக்கூடிய தேன் மிட்டாய், கடலை மிட்டாய் என்பது அன்று எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு தின்பண்டமாக இருந்தது.

Gaming Of 90’s

பள்ளிகளில் நடத்தக்கூடிய பெரும்பான்மையான போட்டிகளை விட பள்ளிகளுக்கு வெளியில் நடக்கக்கூடிய விளையாட்டுகள் இன்று வரை ஞாபகம் இருக்கிறது. ஒரு சிறிய பட்டத்தை செய்து அதை பறக்க வைக்க, நாங்கள் படும் பாடு பெரும் பாடு.

அந்தப் பட்டத்தை பறக்க வைத்தது எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால், அதை நினைத்து பார்க்கும் பொழுது தான் அது எங்களுக்கு ஒரு ஏக்கத்தை கொடுக்கிறது.

பம்பரம், சோடா கின்னி, கண்ணாம்பூச்சி, நாடு கிழித்தல், ஓடி ஓடி ஒன்னு, கல்லை தூக்கி தூரம் எரிதல், கிட்டி பில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அனைத்து விளையாட்டுகளையும் தொலைத்த தலைமுறை இனி வரக்கூடிய தலைமுறை.

சாமி சிலை செய்து வழிபட்ட குழந்தைகளும் நம்ம தான், சாமியே வேண்டாம் என்று கூறக்கூடிய தலைமுறையும் நம்ம தான், கூட்டாஞ்சோறு ஆக்கி குழம்பு வைத்த கடைசி தலைமுறையும் நம்மதான், திருவிழாவில் இருக்கக்கூடிய சொப்பு சாமான்களை வாங்கிய கடைசி தலைமுறையும் நம்ம தான்.

பட்டங்களை வாங்கி பறக்கவிட்ட காலங்கள் போயி, பறவைகள் பறப்பதைக் கூட பார்க்க முடியாமல் போன தலைமுறை நம்முடைய தலைமுறையாக தான் இருக்க முடியும்.

கடைசியாக நடந்த போராட்டம் ஜல்லிக்கட்டு ஞாபகம் இருக்கா? அந்த விளையாட்டை கூட முடக்க பார்த்தார்கள் உங்களுடைய எல்லா ஆதரவு மட்டுமே அந்த விளையாட்டை இன்றும் நடைபெற இருககிறது.

பள்ளிப் பருவ நாட்களில், பள்ளிக்குச் செல்லும் பொழுது எங்காவது வைக்கோல் குவிக்கப்பட்டு இருந்தால் போதும், பள்ளி எப்பொழுது முடியும் என காத்திருந்து அந்த வைக்கோலில் ஏறி குதித்த அனுபவம் எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது.

களிமண்களில், மாட்டு வண்டி, அடுப்பு, உரல், இடுக்கை போன்றவற்றை செய்து விளையாண்ட அனுபவம் உங்களுக்கு உள்ளதா? அல்லது ஞாபகம் இருக்கிறதா? அது எவ்வளவு இனிமையான நாட்கள் என உங்களால் உணர முடிகிறதா?.

இப்பொழுது கடைகளில் பல வண்ணங்களில் கிடைக்க கூடிய Glay கிடைத்தாலும், அப்பொழுது கிடைத்த களிமண்களுக்கு இந்த Glay ஒருபோதும் ஈடாகாது.

நுங்கு வண்டி ஓட்டியது உண்டா? நாங்கள் ஒட்டியுள்ளோம். இரு நுங்குகளுக்கு இடையில் ஒரு குச்சி வைத்து அடித்து, அதை இன்னொரு குச்சியின் மூலம் தள்ளிக் கொண்டு போகும் சுவாரஸ்யம் அவ்வளவு எளிதில் எங்கும் கிடைத்து விடாது.

பள்ளியில் நடத்தக்கூடிய சாக்கு ஓட்டத்தை விட தெருக்களில் நடக்கக்கூடிய சாக்கு ஓட்டம் ஆச்சரியத்திற்குரியது. காரணம் என்னவென்றால்,

அந்த சாக்கு ஓட்டத்தில் எந்த ஒரு மனக்கசப்பும் இருக்காது. வெளியில் சாக்கு ஓட்டம், வீடு வந்தால் பாண்டி, வளையல், பல்லாங்குழி, தாயம் என்ற விளையாட்டிற்கு பஞ்சமே கிடையாது.

பள்ளி முடிந்து வீட்டுக்கும் வரும்பொழுது ஆபியம் மணியாபியம் என்ற விளையாட்டு, வீடு வந்தால் ஒண்டி கோள் எடுத்து பறவைகளை வேட்டையாடுவதும் பழக்கமாகக் கொண்டிருந்தோம், இவை அனைத்தும் இப்பொழுது எங்கோ ஓரிடத்தில் தான் இருக்கிறது.

Innocent Of 90’s

கிராமப்புறங்களில் தொலைக்காட்சி அறை என்ற ஒன்று இருக்கும். தினமும் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் பொழுதும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து ரசித்து மகிழ்வார்கள்.

அதிலும் குறிப்பாக, ஒளியும் ஒலியும் பொதிகை நேரலை மற்றும் வானொலியில் கேட்கக்கூடிய அனைத்து பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு அழகான வாழ்வியலை கொடுக்கிறது.

இன்றும் வனப்பகுதியில் கிடைக்கக்கூடிய குண்டுமணி அன்று பெரிதும் சிறுவர்கள் விரும்பியதாக இருக்கிறது. இது காடுகளில் அதிகம் இருக்கின்றன. ஆனால், அந்த காலங்களில் அது அவ்வளவு எளிதாக கிடைத்ததில்லை.

மழை பெய்தால் போதும் ஆங்காங்கே தேங்கி கிடக்க கூடிய நீரில் மீன்கள் என நினைத்து தலை பிரட்டையை வளர்த்த கடைசி தலைமுறை நம்முடைய தலைமுறையாக தான் இருக்க முடியும்.

இந்த தலை பிரட்டையானது முதலில் மீன்கள் போன்ற தோற்றத்துடன் இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல கால் கை முளைத்து முழு தவளையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருக்கக்கூடிய பானையில் ஒலிபெருக்கியை வைத்து பாடல் கேட்ட தலைமுறை நம்முடைய தலைமுறையாக தான் இருக்க முடியும். மற்றும் குச்சி கிளாசில் தேநீர் அருந்திய கடைசி தலைமுறையும் நம்முடைய தலைமுறைதான்.

என்னைக்காவது கேசட் போட்டு பாட்டு கேட்டு இருக்கீங்களா? அல்லது ஆண்டனா வச்ச டிவியில நிகழ்ச்சி பார்த்து இருக்கீங்களா? அல்லது தேய்ந்து போன சிடியில படம் பார்த்து இருக்கீங்களா? இது எல்லாம் முற்றிலுமாக முடக்கப்பட்டு விட்டது.

அந்த காலங்களில் எங்களுக்கு சைக்கிள் எல்லாம் கிடையாது. ஒருத்தர் வச்சிருக்க கூடிய சைக்கிள் தான் மாத்தி மாத்தி ஒட்டிகணும்.  இப்படி ஓட்டி சைக்கிள் கத்துக்கிட்டோம்.

இன்னும் சிலர் சைக்கிளை வாடகைக்கு வாங்கி சைக்கிள் கற்றுக் கொண்டனர் . ஒருவேளை சைக்கிள் டயர் வீணாகிவிட்டது என்றால் தூக்கி போட மாட்டோம். மாறாக, அவற்றை சேகரித்து டயர் பந்தயம் வைப்போம்.

CD கேசட் மூலம் படம் பார்த்து பார்த்து CD தேய்ந்து போயிருக்கும், இருந்தாலும் அதன் மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து மீண்டும் அந்த கேசட்டை போட்டு படம் பார்க்கும் நாட்களை எண்ணி வருந்துகிறோம்.

கலர் கோழி குஞ்சுகள் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும், அவை ஒரு வாரங்களில் இருந்து விடும் என்பது தெரிந்தும் அதை வாங்கி வளர்த்து, அதை காகம், பருந்திடும் பறிகொடுத்து அழுத நாட்கள் மிகவும் அழகானது.

மழையில் நனைந்து இருப்பீர்கள். ஆனால், மழையில் கப்பல் செய்து விட்டு மகிழ்ந்ததுண்டா… அதுமட்டுமல்லாமல் அடுத்த நாள் காலை காய்ச்சல் வரும் என தெரிந்தும் அந்தக் கப்பலை விட்டு மகிழ்ந்தோம்.

Conclusion

1990 நடந்ததை நினைத்து நினைத்து இன்று வருந்துகிறோம். ஆனால், அன்று நடந்த பொழுது வருந்திருக்க மாட்டோம். இப்பொழுது இருக்கக்கூடிய தலைமுறையும் அப்படித்தான். வரும் காலங்களில் இப்பொழுது நடந்ததை பற்றி எண்ணி வருந்துவர்.

காலங்கள் செல்லச் செல்ல புதிய புதிய தொழில்நுட்பம் வர வர ஒன்றுக்கு மாறாக மற்றொன்று இருக்கத்தான் செய்கிறது. அதனால்,

காலத்திற்கு தகுந்தார் போல் தங்களை மாற்றிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல, புதியது வந்தவுடன் பழையவற்றை மறந்து விடாதீர்கள். நன்றி…

மேலும் படிக்க: 2000 Years Ago Tamil Culture

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *