Hello, எல்லாரும் நல்லா இருக்கீங்களா இன்னைக்கு நம்ம என்ன பாக்க போறோம் அப்படின்னா ஒரு நடுத்தர வர்க்கத்தில்( Middle Class )பிறந்த ஆண் மகனுக்கு நடக்கக்கூடிய விளைவுகளை பற்றி பார்க்கலாம்.
பொதுவாகவே அதிக பணம் இருக்கவங்க நல்லா தான் இருக்காங்க, அதே போல பணம் இல்லாதவங்க நல்லா தான் இருக்காங்க. அது எப்படி பணம் இல்லாதவங்க நல்லா இருக்க முடியும் என்ற கேள்வி நீங்க கேட்கலாம்!
Introduction
ஒரு ஏழையா, அவங்க பணத்தின் மீது எந்த வித கவலையும் அவர்களுக்கு கிடையாது. ஏனென்றால், அவர்களுக்கு தெரியும் நாம் நினைத்துக் கூட அந்த வாழ்க்கையை வாழ முடியாது என்று, அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால்,
இந்த நடுத்தர வர்க்கத்துக்கு, இந்த சமுதாயம் ஒரு சவாலாகவே இருக்கிறது. வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கிறது.
ஆனால், உயர்வதற்கான வழி இவர்களிடத்தில் இல்லை மற்றும் பட்டியல் இனத்து மக்களாக மாறவும் இவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
அதை தவிர்க்க ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டு இருக்க வேண்டியது நிலைமையும் இவர்களுக்கு தான் உண்டு.
ஒரு நடுத்தர வர்க்கத்து ஆண் மகனுக்கு ஒரு பேரிடர் இழப்பு அல்லது பண நெருக்கடி இருக்கிறார் என்றால் அவர்களிடத்தில் அந்த நெருக்கடியை சமாளிக்க எந்த வித பணமும் இருக்காது.
கடன் வாங்கி செலவழிக்க கூடிய தைரியமும் அவர்களிடத்தில் இருக்காது.
காரணம் கடன் வாங்கி செலவு செய்தால் அந்தக் கடன் பின்பு அவரை பாதிக்கும் என்பதனால், கடன் வாங்குவதற்கு கூட அவர்களிடத்தில் தைரியம் இருக்காது.
நடுத்தர வர்க்கத்து ஆண் பிள்ளைகள் பெரும்பாலானோர் முதல் பட்டதாரிகளாக இருக்கின்றன. அவர்களதுடைய தலைமுறையில் இவர்தான் முதல் பட்டதாரியாக இருக்க முடிகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு பெரிதாக பின்புலம் ஒன்று என்று இருக்க வாய்ப்பு இல்லை.
இவர்களின் முன்னேற்று பாதைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று கேட்டால் எடுத்துள்ளது. ஆனால், அது அவர்களிடத்தில் சென்று சேரவில்லை என்பதே உண்மை.
A Truth Story
படித்த மற்றும் பணம் பின்புலம் உள்ள ஒருவர் செய்யும் வேலையை நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் செய்வதற்கு 30 நாட்கள் அதிகம் எடுக்குமேயானால், அந்த 30 நாட்களும் அவர் படும் வேதனை பெரிதளவும் பேசப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
பணம் ஒருவரது வாழ்க்கையில் முக்கியம் தான் என்று நினைக்க கூடிய ஒருவர், பணம் இல்லை எனறால் வாழ்க்கையே இல்லை என நினைக்கும் நடுத்தர வர்க்கத்து ஆண்களுக்கு என்ன உதவி செய்துள்ளீர்கள்? என நினைத்து பாருங்கள்.
ஒவ்வொரு குடும்பத் தலைவர்களும் அவர்களது குடும்பம் நன்றாக இருக்க போராடிக் கொண்டுதான் உள்ளனர்.
இந்தக் குடும்பத் தலைவர்கள் ஒரு 500 ரூபாய் சம்பளத்திற்கு 12 மணி நேரம் உழைத்தால் மட்டுமே அது அவர்களுக்கு கிடைக்கிறது.
ஆனால் Instagramல் வீடியோ பதிவிடும் ஒருவர் இந்த நடுத்தர வர்க்கத்தின் மாத சம்பளத்தை ஒரு நாளில் பெற்று விடுகிறார்.
ஒரு நடிகராக இதை அவர் ஏற்றுக் கொண்டாலும், ஒரு நடுத்தர வர்க்கத்தின் ஆணாக என்னால், இதை ஏற்றுக்கள்ள முடியவில்லை.
ஒரு நடுத்தர வர்க்கத்து ஆண் இவ்வளவு நாளாக சிறிது சிறிதாக படித்து, ஒரு நல்ல இடத்திற்கு வந்தால் கூட அவருக்கு மாத சம்பளமாக 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால்,
உடைகளை அரைகுறையாக காட்டி வீடியோ போடும் ஒரு பெண் இந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை மிகவும் சுலபமாக சம்பாதித்து விடுகிறார்.
இதை பார்த்த அந்த நடுத்தர வர்க்கதது ஆண், இந்த நிலையை எவ்வாறு அவர் கையாளுவார், இந்த சமுதாயம் அவரை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறதா.
My Life My Rules
Instagramல் வீடியோ பதிவிடுவது உங்களுடைய தனிப்பட்ட உரிமை அதில் நாங்கள் தலையிடவில்லை. மாறாக, நீங்கள் இந்த சமூகத்தை எவ்வாறு சீர்குலைத்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் செய்யக்கூடிய செயல் அடுத்த தலைமுறையை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் செய்யக்கூடிய செயல் அடுத்து சந்ததியினரை நல்வழிப்படுத்துதல் மற்றும் சீர்படுத்துதல் போன்றவாறு இருக்க வேண்டும்.
நீங்கள் அரைகுறையாக காட்டி வீடியோ போடக்கூடிய ஒவ்வொருவரும் இந்த சமுதாய சீர்கேட்டிற்கு காரணமாவீர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இவ்வாறு வீடியோ போடுவதற்கான காரணம் என்ன பணம்.
நடுத்தர வர்க்கத்து ஆண் பிள்ளைகள் மிகவும் பாவப்பட்டவர்கள், அவர்களுக்கென்று எந்த ஒன்றும் இருக்காது. அவர்களின் வாழ்க்கை அவர்களை சுற்றியுள்ளவர்களின் நிலையை சார்ந்ததே ஆகும்.
அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் சரியாக மற்றும் நல்ல முறையில் நடந்து கொண்டால் அவர்களும் நன்றாக இருப்பார்கள்.
Middle Class Story
ஒரு கற்பனை கதை. இந்த கதையில் இருக்கக்கூடிய ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர். இவருக்கு ஒரு தங்கை உண்டு மற்றும் பெற்றோர்கள்.
இவன் இந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரி. இந்த நிலையில் உள்ள ஒரு ஆண் முதன்முதலாக வேலைக்குச் சென்று பத்தாயிரம் ரூபாய் பணத்தை வீட்டிற்கு கொண்டு வருகிறான்.
இந்தப் பணம் அந்த குடும்பத்திற்கு போதுமானதாக இருக்கிறது எனினும் சமூகத்தின் விலை உயர்வால் அல்லது பொருட்கள் மற்றும் இதர தேவையான பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக இந்த பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பத்தாமல் போகிறது.
இந்தப் பத்தாயிரம் ரூபாய் பணம் பத்தாமல் போனதற்கு அவர் காரணம் இல்லை அல்லவா. இந்த விலை ஏற்றத்தின் காரணமாக இந்த குடும்பம் ஒரு சமநிலை தவறுகிறது.
இது அவர்களின் தவறல்ல எனிலும் அவரின் இந்த நிலைக்கு காரணமாக இருந்த இந்த சமூகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, இவர்களை போன்ற குடும்பத்திற்கு.
தொடர்ந்து பேசுவோம், அவரின் தங்கைக்கு திருமண செலவிற்காக சிறிது சிறிதாக சேர்த்த ரூபாய் ஒரு லட்ச ரூபாய் பத்தாமல் போனது.
அவனின் தங்கை திருமணத்திற்கு போதுமான சம்பளம் இல்லாததால் அவனின் தங்கை திருமணம் அவளுக்கு பிடித்தவாறு அமையாமல் போனது காரணம் பணம்.
“பணம் பத்தும் செய்யும்” என்று சொல்வார்கள். ஆனால், இந்த கதையில் 11 ஆக ஒன்று செய்தது என்ன தெரியுமா?, உறவினர்கள். உறவினர்கள் கைக்கூட்டி சிரிக்கும் அளவிற்கு அந்த திருமணம் நடந்தது. இது அந்த குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது.
ஒரு நடுத்தர வர்கத்து குடும்பம் பெரிதலும் பாதிப்பு இல்லாமல் இருக்கிறது என்பது உண்மைதான் ஆனாலும் அது சிறிது சிறிதாக அதன் நிலையை இழக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா.
இவ்வாறாக ஒவ்வொரு குடும்பமும் தனது நிலையை குறைத்துக் கொண்டே போகிறது எங்களின் நிலையை விட எங்களுக்கு கீழ் உள்ள அவர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கை முறை இதைவிட மிகவும் மோசமாக இருக்கும்.
Middle Class Work
இது என்னோட வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவம், நான் வந்து ஒரு எலக்ட்ரிக்கல் Work பண்ணுவேன், அப்போ நான் நிறைய வீடுகளுக்கு சென்று எலக்ட்ரிக்கல் Work செய்வது வழக்கம்.
அவ்வாறு செய்ய ஒரு வீட்டிற்கு செல்லும் போது, அங்கு டீ கொடுத்தாங்க நானும் Tea-ய வாங்கி குடிச்சிட்டேன்.
ஆனா, டீ குடிச்சதுக்கு அப்புறமா தான் தெரியும் வந்தது அந்த டீ கொடுத்ததற்கான காரணமே எங்கள அவங்க அதிகமா வேலை வாங்கணும் அப்படிங்குறதுக்காக தான்.
அவர்கள் வேலை வாங்கியது கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை. மாறாக, அவர்கள் என்னையே வீட்டில் விடவில்லை.
காரணம், நான் பட்டியலினத்து பையன் என்பதால். எவ்வளவுதான் “என் உரிமை என் சுதந்திரம்” என்று பேசினாலும் கூட ஒவ்வொரு பணக்கார வீடுகளிலும் இந்த சமநிலை தவறுகிறது.
அதே போன்று இன்னொரு பணக்கார வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் ஒரு செய்ய போயிருந்தேன். அப்பொழுது அங்கு இருந்த பெண்மணி ஒரு ஆசிரியர்.
அவர்கள் எங்களிடத்தில் பழகிய விதமும் சரி, பேசிய விதமும் சரி ஒரு குறை கூட சொல்ல முடியாது என்ற அளவு இருந்தது.
சாப்பிடுவதற்கு பணம், நாங்கள் செய்யக்கூடிய வேலையை அவர்களும் எந்த பாரபட்சம் பார்க்காமல் அவரும் சேர்ந்து வேலை செய்தார். இதை பார்க்கும் பொழுது மனம் நெகிழ்ந்து போனது.
நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? நாம் ஏன் மற்றவரை சாப்பிட்டாயா என்று கேட்கக் கூடாது என்று.
இங்கு பலருடைய பிரச்சனையும் இதுதான். மற்றவரை சாப்பிட்டாயா என்று கேட்டால் அவர் சாப்பிடவில்லை என்றால் சாப்பாட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும், என்ற ஒரு காரணத்தால் இங்கு ஒருவரை ஒருவர் சாப்பிட்டாயா என்று கேட்க மறுக்கின்றனர்.
எதற்காக இதைக் கூற வந்தேன் என்றால்,
Middle Class Food
ஒரு கணம் இரவு 9 மணி இருக்கும் சாப்பிடுவதற்காக வெளியில் செல்லும் பொழுது, அங்கு ஒரு கடையும் திறக்கவில்லை. அன்று என்ன செய்வதென்று தெரியாமல் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து விட்டேன்.
பசி மிகவும் அதிகமாக இருந்தது, தின்பண்டம் வாங்கி சாப்பிட்டால் அது அன்று இரவு பத்தாமல் போக வாய்ப்பு உள்ளது. அதனால் காத்திருந்தேன் அடுத்து என்ன செய்யலாம் என்று.
வெகு நேரம் ஆகியும் எந்த முடிவும் எடுக்காமல் எழுந்து என்னுடைய அறைக்கு செல்ல ஆரம்பித்தேன். போகும் வழியில், ஒருவர் கடையை மூடிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது ஏதாவது வாங்கித் தின்போம் என இருந்த பைசா செலவழிக்க தொடங்கினேன்.
அப்பொழுது அவர் கம்மங்கூழ் மட்டும்தான் உள்ளது என கூறினார். சரி என்று முடிவெடுத்து ஒரு சோம்பு கம்மங்கூழ் கேட்டு வாங்கி குடித்தேன்.
சாப்பிட்டு முடித்தவுடன் பணத்தை நீட்டும் பொழுது அவர் பணம் தேவையில்லை என கூறி உள்ளே சென்று விட்டார்.
ஒரு நடுத்தர வர்க்கத்து பையனுக்கு ஒரு நேரம் பசி ஆறுகிறது என்றால், அதுவும் இலவசமாக பசி ஆறுகிறது என்றால் அது அவனுக்கு கிடைத்த பாக்கியம் என்றே கூறலாம். ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்திற்கு பசி ஒரு சாபக்கேடு என தெரியும்.
இருந்தும் ஒரு சிலர் உணவுகளை வீணடிக்கிறார்கள், அது அவர்களுக்கு முக்கியமில்லாததாக இருந்தாலும் கூட, என்றோ ஒருவருக்கு முக்கியமாக கூட இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
Conclution
ஒரு முதலீட்டுடன் ஒரு தொழில் ஆரம்பிக்கப்படும் பொழுது, அதற்கான முதலீடு என்ற ஒன்று இந்த நடுத்தர வர்க்கத்து இளைஞர்களுக்கு ஒரு கற்பனையாகவே இருக்கிறது. இவர்களால் எந்த ஒரு தொழிலும் ஆரம்பிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
சிறுக சிறுக சேமித்து அதை ஒரு தொழிலில் முதலீடு செய்வது என்பது அவர்களுக்கு ஒரு பெரிய போராட்டமாக கருதப்படுகிறது.
இவர் ஒரு முதலீடு செய்ய நினைக்கிறார் என்றால் அது லாபமாக இருந்தால் பரவாயில்லை, ஒருவேளை நஷ்டமாக இருந்து விட்டால், இவ்வளவு காலம் உழைப்பு ஒரு நாளில் வீணடிக்கப்படும்.
எனவே, “இருப்பதை வைத்து சிறப்பாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்” வெற்றி உங்களுக்கு காத்திருக்கிறது, நன்றி.
மேலும் படிக்க: What Is Corruption In Tamil