Porn Addiction In Tamil

பொதுவாகவே இப்பொழுது இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் பேரழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளனர். காரணம் என்னவென்றால், பள்ளி மாணவர்கள் பாலியல் Porn Addiction சம்பந்தமாக தெரிந்து கொள்ள அல்லது கற்க ஆர்வமுடன் உள்ளனர்.

இது தவறு என்று நான் கூறவில்லை. காரணம் அது அவர்களின் அறிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். பள்ளி மாணவர்கள் பாலியல் சம்பந்தமான விஷயங்களை பற்றி அதிகமாக தேடுகின்றனர்.

பள்ளி மாணவர்கள் அனைவரின் கையிலும் தொலைபேசி என்ற சாதனம் வந்துவிட்டது. எனவே, இதன் மூலமாக பாலியல் சம்பந்தமான படம் அல்லது செய்தி இவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. இதிலிருந்து மாணவர்கள் வெளிவரவில்லை என்றால் அடுத்த சந்ததியினரை இது கேள்விக் குறியாக்கி விடும்.

Porn Addiction Survey

இளைஞர்கள் அதிகமாக பாலியல் வீடியோக்கள் பார்ப்பதன் மூலம் சீரழிந்து கொண்டிருக்கின்றன. இது எங்கிருந்தது ஆரம்பிக்கப்பட்டது என்று கேட்கப்படும் பொழுது ஒருவர் நண்பர்கள் மூலம் தெரிய வந்தது எனவும் கூறினார்கள்.

மற்றவர் தொலைபேசியின் மூலம் தெரிய வந்தது எனவும் இன்னும் சிலர் பேசிக் கொண்டிருப்பதை கவனித்ததன் மூலமாகவும் எனக்கு தெரிய வந்தது எனக் கூறினார்கள்.

2k தலைமுறையின் குழந்தைகளிடம் கேட்கும் பொழுது இது பாலியல் விளம்பரத்தின் மூலம் தெரிய வந்தது என கூறினார். அது அவர்களின் தொலைபேசியின் வாயிலாக வந்தது எனவும் கூறினர்.

தொலைபேசியின் வாயிலாக காட்டப்படும் பாலியல் விளம்பரங்களை பற்றி பள்ளிகளில் பேசுவதன் காரணமாக, இதைப் பற்றி அறியாத மாணவர்கள் கூட அறிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

இது பள்ளி மாணவர்கள் இடையே ஒரு தொடர்ச்சியான தீய பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. பாலியல் விளம்பரங்களை பார்ப்பது தவறில்லை மற்றும் அதை பற்றி தேடுவது கூட தவறில்லை. ஆனால், அதற்கு அடிமையாகி விடுவது ரொம்பவும் தவறு.

அதுவும் இந்த சிறுவயதில் அடிமையாகுவது என்பது மிகவும் தவறாக பார்க்கப்படுகிறது.

How Brain React Porn Addict

ஒவ்வொருவருக்கும் தண்ணீர், காற்று எவ்வாறு முக்கியமோ அதே போல இந்த பாலியல் செயல்களும் முக்கியம்.

ஆபாச படங்களை பார்ப்பதன் மூலம் மூளையில் அதிகப்படியான டோப்பமைன் என்ற வேதி பொருள் சுரக்கிறது. இது படங்களைப் பார்ப்பதன் மூலமாக மட்டுமல்லாமல் சில வெற்றியை நாம் ஈட்டும் பொழுதும் இந்த டோப்பமைன் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது.

நாம் ஒரு வெற்றியை கொண்டாடும் பொழுது சுரக்கின்ற வேதிப்பொருளின் அளவைவிட ஆபாச படம் பார்ப்பதன் மூலமாக சுரக்கும் வேதிப்பொருலின் அளவு அதிகமாகும்.

இந்த அதிகபடியான டோப்பமைன் மூளையில் சுரந்து கொண்டே இருக்கும் போது Gray Matter என்ற பகுதி சுருங்க ஆரம்பிக்கும்.

What Is Matter

மேட்டர் என்பது மூளையின் அளவை குறிக்கக்கூடிய ஒன்றாகும். இது இரண்டு வகைப்படும் ஒன்று ஒயிட் மேட்டர், இரண்டாவது க்ரே மேட்டர்.

ஒரு மூளையின் வெளிப்பகுதியானது க்ரே மேட்டரில் கொண்டிருக்கும். மூளையின் 40% பகுதி க்ரே மேட்டராகும்.

இந்த க்ரே மேட்டர் ஆனது நீங்கள் செய்யக்கூடிய வேலையை கண்ட்ரோல் செய்வதும், சரியான தேர்வுகளை தேர்ந்தெடுக்கவும் மற்றும் உங்களின் ஞாபக திறன் போன்றவற்றை கொண்ட அமைப்பாக இருக்கும்.

இது பன்ற ஆபாச படங்களை பார்ப்பதன் மூலம் மூளையில் உள்ள க்ரே மேட்டர் சுருங்குகிறது இதன் காரணமாக உங்களால் ஒரு வேலையை சரியாக செய்து முடிக்க முடியாது.

இந்த க்ரே மேட்டர் ஆனது 20 வயது முடியும் பொழுது தன் ஒருவருக்கு முழுவதுமாக வளர்ந்து இருக்கும். ஆனால், பள்ளி மாணவர்களுக்கு இது வளர ஆரம்பித்து இருக்காது.

க்ரே மேட்டர் வளர ஆரம்பிக்கும் முன்னரே சுருங்க ஆரம்பிப்பது என்பது எவ்வளவு மோசமான நிலை என்பதை நீங்கள் அறிய வேண்டும் .

நீங்கள் ஒரு போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும்போது உங்கள் மூளையில் இதே வேலையை தான் செய்கிறது. ஆபாசப்படம் பார்ப்பதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும் ஒன்றுதான்.

குடிப்பழக்கத்தில் இருந்து எவ்வாறு வெளியே வர முடியாமல் நிறைய மக்கள் இருக்கின்றன. அதேபோல்,  இந்த ஆபாச படமும் ஒருவித போதை தான். இதிலிருந்தும் அவ்வளவு எளிதாக வெளியில் வந்து விட முடியாது.

Care Of Addiction

ஒரு போதை பழக்கத்திற்கு அடிமையான ஒரு நபரை பார்த்து கண்டிக்க கூடிய இந்த சமூகம், ஒரு ஆபாச படம் பார்க்கும் நபரை விட்டு விடுகிறது.

உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் ஆபாச படம் பார்க்கிறார்கள் என்றால் தயவு செய்து அவர்களை திருத்தி நல்-வழிக்கு கொண்டு வாருங்கள்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஒருவரை திருத்தக் கூடிய நீங்கள் ஆபாச படம் பார்க்கும் அந்த நபரை திருத்த தவறி விடுகிறீர்கள். இது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது.

மக்கள் ஏன் இதை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்றால், தொலைபேசியில் நீங்கள் பார்க்கக்கூடிய சின்ன சின்ன வீடியோக்கள் அல்லது அரைகுறைவாக காட்டப்படும் வீடியோக்கள் தான் இதை பொதுமை படுத்துகின்றன.

ஒரு சமூகம் ஆபாச வீடியோக்களை பொதுமைப் படுத்துகிறது என்றால், அந்த சமூகம் சரியான வழியில் சீர் கெட்டு போகிறது என்று அர்த்தம்.

இது உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துவது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மூளை ரீதியான பிரச்சனைகளை கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் தருவது நல்லது ஆகும். எவ்வாறு இதிலிருந்து வெளியே வருவது தொடர்ந்து படியுங்கள்.

How To Quit Porn Addiction

ஆபாச படம் அடிமை பழக்கம் என்பது எல்லோருக்கும் வரக்கூடிய சாதாரண ஒன்று என்று பொதுமைப்படுத்த நான் விரும்பவில்லை. மாறாக, அதிலிருந்து எவ்வாறு வெளியே வருவது பற்றி கூறுகிறேன்.

உங்களுக்கு பிடித்த செயலை தொடர்ச்சியாக செய்யும் பொழுது உங்கள் மூளையில் உள்ள நரம்புகள் இணைப்பு அதிகமாகி கொண்டே போகும். இந்த பிணைப்பின் காரணமாக நரம்புகள் அதிக வலுப்பெறும்.

தொடர்ச்சியாக செய்யக்கூடிய வேலையை நிறுத்தி விட்டீர்கள் என்றால் இந்த பிணைப்பு வலு இழந்து தொடர்பு துண்டிக்கப்படும்.

ஆபாச படம் பார்ப்பதை நீங்கள் விட்டு விட்டீர்கள் என்றால் முன்னரே பினைக்கப்பட்ட நரம்புகள் வலு இழந்து காலப்போக்கில் அதன் இணைப்பு துண்டிக்கப்படும். ஆபாச படம் பழக்கத்தை நிறுத்துவது என்பது கடினம்.

அவ்வாறு நிறுத்திவிட்டால் இதன் விளைவுகளாக மன உளைச்சல், மன அழுத்தம், கோபம் போன்ற பல மூளை சம்பந்தப்பட்ட காரணிகளுக்கு காரணமாகி விடுவீர்கள்.

ஒரு போதைப் பழக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஒரு நபரை உடனடியாக குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாது. ஆபாச படம் பழக்கத்தை விட வேண்டும் என்றால் இன்னொரு பழக்கத்தை உள்ளே கொண்டு வர வேண்டும்.

தொடர்ச்சியாக அப்படி கொண்டு வரக்கூடிய அந்த விஷயம் அல்லது அந்த செயல் உங்கள் வாழ்க்கையில் நல்லதை கொண்டு வரும்படி இருக்க வேண்டும்.

ஒரு வேலை தீய செயலாக இருக்குமேயானால் உங்களை எவராலும் காப்பாற்ற இயலாது. சில நபரிடம் எவ்வாறு இதிலிருந்து வெளிவந்தீர்கள் என்று கேட்கும் பொழுது அவர்கள் கூறியது,

  • ஒன்று நான் கடவுளுக்கு மாலையிட்டது எனவும்,
  • இரண்டாவது நான் உடற்பயிற்சியை மேற்கொண்டதாகவும்,
  • மூன்றாவது நான் படிப்பதில் ஆர்வம் காட்டியதனால் எனவும்,
  • நான்காவது நான் ஒரு குடும்பப் பொறுப்புகளுக்குள் சென்றதால் இந்த பழக்கத்திலிருந்து வெளிவந்தேன் எனவும் கூறினார்கள்.

நாங்கள் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மூலம் எவ்வாறு இந்த பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்றால் பாலியல் பாடங்களை பள்ளிகளில் நடத்த வேண்டும் என பலரும் கூறினர்.

அறிவியல் பாடத்தில் ஒரு தலைப்பாக இதைக் கொண்டு வரலாம் என சிலர் கூறினார்.

ஒரு சில நபர்கள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இதைப் பற்றி பேசுவதை தவிர்க்கின்றனர் இதனால் கூட பள்ளி மாணவர்களுக்கு இதன் மேல் ஆர்வம் வருகிறது என கூறினர்.

என் தரப்பில் இருந்து ஒன்று கூற விரும்புகிறேன். இந்த விதமான பாலியல் படிப்புகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றால், நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் அல்லது அரசாங்கத்திடம் முறையிட வேண்டும்.

Conclusion

ஆபாச படம் பார்ப்பது தவறு இல்லை அது அவரவர்களின் உரிமையாகும். இதில் யாரும் தலையிட முடியாது.

அதேபோல ஒரு சில மாணவர்களின் வாழ்க்கையை இந்த ஆபாச படமானது சீரழிக்கும் என்றால் அதில் தலையிட வேண்டாம் என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஆபாச படம் பார்ப்பது தவறு இல்லை என்றாலும் அதற்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் நல்லது.

இங்கு சரி தவறு என்று எதுவும் கிடையாது அது ஒருவருக்கு பிரச்சனையா இல்லையா என்பதுதான் முக்கியம். சிறிய வயதில் ஆபாச படம் பார்க்கும் மாணவர்கள் மீது தான் எங்களின் கவலை.

சிறுவயதில் மாணவர்கள் ஆபாச படம் பார்ப்பதை பற்றி விவரிக்க இங்கு யாரும் முன் வரவில்லை முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

நன்றி…

மேலும் படிக்க: Fevicol Story In Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *