அரசியல்( Politics ) அன்று முதல் இன்று வரை நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்முடன் தான் இருக்கிறது என்பதை, ஒவ்வொருவரும் மறந்து விடுகிறோம். நாம் செலுத்தக்கூடிய ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை.
நீங்கள் உங்களுடைய ஜனநாயக கடமையை சரியாக செய்யுங்கள். ஒவ்வொரு கட்சியில் இருந்தும் அவர்களின் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது, அது பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது…
- தமிழக வெற்றி கழகம்
- நாம் தமிழர் கட்சி
- அனைத்து இந்திய அண்ணா திமுக
- விடுதலை சிறுத்தை கட்சி
Tamilaga Vetri Kalagam
Our Website – TVK
புதிதாக கட்சி தொடங்கப்பட்ட தளபதி விஜய் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.
தமிழக வெற்றி கழகத்திலிருந்து அந்த கட்சியின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை 24.6.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி மற்றும் அன்பு கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் விழாக்களும் உரிய அனுமதியுடன் மிகுந்த கண்ணியத்துடனும் மற்றும் கட்டுப்பாட்டுடனும் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை எந்த சூழலிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக ஏற்படுத்தும் வகையில் பேனர்களையோ விளம்பரப் பதாகைகளையோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை.
நம் வெற்றி தலைவர் அவர்களும் பேனர்கள் மற்றும் விளம்பர பதவிகள் வைப்பதை விரும்புவதோ அல்லது ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே,
கழகத் தலைவர்கள் அவர்களின் உத்தரவின் படி மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக் கழகம் மற்றும் சார்பு அணிகல் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்க கூடாது.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து கழக வழக்கறிஞர் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று, கழக நிர்வாகிகள் தோழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
Naam Tamilar Katchi
Our Website NTK
நாம் தமிழர் கட்சியில் இருந்து புதிதாக ஒரு அறிக்கை வந்துள்ளது. இந்த அறிக்கை 24.6.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும், காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடு நிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்பும், வழக்கு விசாரணையில் இன்றும் நிறைவடையாதது ஏமாற்றமும் மனவேதனையும் அளிக்கிறது.
விசாரணையை விரைந்து முடிக்காமல் இந்திய ஒன்றிய அரசின் குற்றப்புலனாய்வுத்துறை தொடர்ந்து கலங்கடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையால் படுகொலை நிகழ்த்தப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் CBCID முதலில் விசாரிக்க தொடங்கிய நிலையில், பின்பு இந்திய ஒன்றிய அரசின் CBI விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இப்படுகொலை தொடர்பாக அன்றைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் துணை ஆய்வாளர் உட்பட ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில், ஒவ்வொரு முறையும் CBI கால அவகாசம் கோரித்ததன் விளைவாக படுகொலை நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வழக்கு விசாரணை முடிவடையல்லை.
அதிகாரத்தில் உள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டு நாட்டையே உலுக்கிய மிகக் கொடூர படுகொலை நிகழ்வான சாத்தான்குளம் படுகொலையின் வழக்கு விசாரணையே இத்தனை ஆண்டுகள் காலதாமதம் எனில், வெளியே தெரியாத சாமானியர்களின் கொலை வழக்குகளில் நீதி கிடைக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ, என்று எண்ணத் தோன்றுகிறது.
கொலை செய்யப்பட்டவர்கள் யார்? எங்கே கொலை செய்யப்பட்டார்கள்? எப்படி கொலை செய்யப்பட்டார்கள்? ஏன் கொலை செய்யப்பட்டார்கள்? கொலை செய்தவர்கள் யார்? என்ற அனைத்தும் தெள்ளத் தெளிவாக தெரிந்திருந்தும் அதற்கான சாட்சிகள் அனைத்தும் இருந்தும் ஐந்தாண்டு ஆகியும் விசாரணை நிறைவடையாதது ஏன்?.
Sathankulam Issue
யாரைக் காப்பாற்ற, யாருடைய உத்தரவின் பேரில் CBI இப்படி காலதாமதம் செய்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு முடிய ஐந்தாண்டுகள், பெண்ணிக்ஸ் ஜெயராஜ் படுகொலை வழக்கில் ஐந்து ஆண்டுகள் என நாடறிந்த வழக்குகளில், கீழமை நீதிமன்றங்களில் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆகிறது எனில், உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யப்பட்டு இறுதி தீர்ப்பு கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?.
தாமதித்து வழங்கப்படும் நீதி, அநீதிக்கு சமம் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நீதிமன்றங்களும் எப்போது உணரப்போகிறார்கள்?.
குற்றவாளிகளே மரணித்துப் போகும் வரை, குற்ற வழக்குகளில் விசாரணை இழுத்தடிப்பது என்பது இந்த நாட்டின் மட்டுமே நிகழும் மிகப்பெரிய சாபக்கேடாகும்.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை பெற்று தந்து, ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு உரிய நீதியை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என்று நாம் தமிழர் கட்சி சார்பாக அறிக்கை வெளியாகி உள்ளது.
All India Anna Dravida Munnetra Kalagam
Our Website – ADMK
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை 25.6.25 அன்று வெளியாகி உள்ளது. இந்த அறிக்கை பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது என்றும், ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியிருக்கிறது என்றும்,
ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல், சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு திரு. ஸ்டாலின் தனது X வலைதளப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் பொம்மை முதலமைச்சரே…
கடந்த நான்காண்டுகளாக உங்களது ஏமாற்று மாடல் ஆட்சியில், ஆயிரக் கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு, பதிவுக் கட்டணங்கள் உயர்வு என்று அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா?
Question For DMK
உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?
தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது ‘சாத்தான் வேதம் ஒதுவது போல்’ உள்ளது என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Viduthalai Siruthai Katchi
Our Website – VCK
விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை 26.5.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில், அடையாறு ஆற்றங்கரை யோரம்
அமைந்திருக்கும் மூகாம்பிகா நகர், காயிதேமில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகரிலுள்ள
குடியிருப்புகளை அகற்றும் பணிநடைப்பெற்று வரும் சூழலில் அங்கு வாழும் மக்கள்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை போராடி வரும் அம்மக்களை தலைவர் அவர்கள் சந்தித்து நிலவரத்தை கேட்டறிந்தார். 1987 வரையில் பட்டா வழங்கப்படக்கூடிய, மக்கள் வீடுகளை கட்ட உகந்த இடமாக
அறிவிக்கப்பட்டிருந்த இப்பகுதிகள், 1987க்கு பிறகு குடியிருப்புக்கு உகந்த பகுதியில்லை
என்று ஆவணங்களில் மாற்றப்பட்டிருப்பதாக அங்கே வாழும் மக்கள் ஆவணங்களுடன்
தலைவரிடத்தில் எடுத்துரைத்தார்கள்.
அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தலைவர் அவர்கள், இப்பகுதிகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
கிட்டத்தட்ட ஆற்றிலிருந்து 200 அடி தள்ளி அமைந்துள்ள இப்பகுதிகளால் ஆற்றின் போக்குவரத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லாத சூழலில், இப்பகுதிகளை இடிக்க முற்படுவது ஏற்புடையதல்ல என்று தலைவர் அவர்கள் தனது கருத்தினை பதிவு செய்தார்.
மேலும் இப்பகுதிகளில் வாழும் மக்களின் குரலை, அதிலிருக்கும் உண்மைகளை எடுத்துரைக்க தலைமை செயலகம் செல்லவிருப்பதாகவும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தலைமை செயலகத்திற்கு புறப்பட்ட தலைவர் அவர்கள், தலைமை
செயலாளர் மற்றும் நகர்புறத்துறை செயலாளர் அவர்களை நேரடியாக சந்தித்து மக்கள்
தரப்பு கோரிக்கைகளை எடுத்து வைத்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறி எதுவும் செய்ய இயலவில்லை என்று தலைமை செயலாளர் தெரிவித்த நிலையில், நிலவரத்தின் முக்கியத்துவத்தை கணக்கில் கொண்டு,
இப்பிரச்சினையை முதலமைச்சரிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அவர்களிடத்தில் கோரிக்கை வைத்ததாக தலைமை செயலகம் வாசலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தலைவர் அவர்கள் விளக்கினார்.
Conclusion
ஒவ்வொரு ஆட்சியிலும் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டு தான் உள்ளது. இதற்கு என்ன தான் தீர்வு?…
ஒவ்வொரு தனிநபரும் தன்னுடைய சமுதாய பணியை சரியாக செய்ய வேண்டும். அதாவது, ஓட்டு போடும் பொழுது எந்தவித பணமும் பெறாமல் உங்களுடைய வாக்கை செலுத்துங்கள், அது உங்களுக்கான வாக்காகவும் இருக்கும் உங்கள் நாட்டிற்கான நலனுக்காகவும் இருக்கும்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு ஓட்டு செலுத்தும் பொழுது, பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டம் உங்களை ஆண்டு கொண்டுள்ளது. எனவே பணத்தை பெறாமல், இந்த முறை வாக்களியுங்கள்.
நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் உங்களுடையது மட்டுமல்லாமல், உங்களை சுற்றி உள்ளவர்களையும் அது பாதிக்கும். எனவே, வாக்கு செலுத்தும் பொழுது உங்களைப் பற்றி மட்டும் யோசிக்காமல் உங்களை சுற்றி உள்ளவர்களை பற்றியும் சிறிது யோசித்துப் பாருங்கள்.
நன்றி…!
மேலும் படிக்க: Untold Story Of Paari In Tamil