How To Make Money On YouTube

     யூடியூப் Youtube மூலமாக பணம் சம்பாதிப்பது மிகவும் எளிது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களது திறமையை வெளிக் கொண்டு வரவும், அவர்களுக்கான ஒரு வருங்காலத்தை சிறப்பாக அமைக்கவும் Youtube பெரும்பங்கு வகிக்கிறது. Youtube தொழில் எவ்வாறு ஆரம்பிப்பது, எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவது போன்ற அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து தெரிந்து கொள்ளவும்.

What Is Niche

நீச் என்பது உங்க சேனல் புதிய தனித்துவத்தை பெற்றிருப்பது ஆகும். அதாவது மற்ற சேனல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழுது, உங்க சேனல் ஒரு தனித்துவத்தை பெற்றிருக்க வேண்டும். இவ்வாறாக சேனல் தனித்துவத்தை பெற்றிருக்கும் பொழுது அதிகமாக முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

How To Create YouTube Channel 

புதிதாக Youtube சேனல் ஆரம்பிக்கும் நண்பர்களே, முதலில் நீங்கள் google அக்கவுண்ட் ஓபன் செய்யுங்கள். 

இரண்டாவதாக அந்த கூகுள் அக்கவுண்ட்டை யூட்யூபில் லாகின் செய்யுங்கள்

அவ்வாறாக லாகின் செய்யும்போது உங்களுடைய சேனல் பெயர் கேட்கப்படும். உங்க சேனலின் பெயர் உங்களுடைய நீச்க்கு தகுந்தவாறு இருக்க வேண்டும்.

பெயர் கொடுத்த பிறகு கடைசியாக கிரியேட் google அக்கவுண்ட் என்ற பட்டனை அழுத்தவும்.

இப்பொழுது உங்களுக்கான யூடியூப் சேனல் தயாராகிவிட்டது, இனி நீங்கள் வீடியோ அப்லோடு செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய தருணம். 

How To Create Video 

உங்களுக்கு பிடித்த தலைப்பில் ஒரு வீடியோவை தயார் செய்யுங்கள். அந்த வீடியோவானது உங்களுக்கு பிடித்த வகையில் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பிடித்தவாறு இருக்க வேண்டும்.

நீங்கள் தயார் செய்யக் கூடிய வீடியோ ஆனது எளிதில் மக்களுக்கு புரியும்படி இருக்க வேண்டும். 

வீடியோவின் டியூரேஷன் ஆனது எட்டு நிமிடத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். உங்கள் வீடியோவானது எட்டு நிமிடத்திற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த வீடியோவில் அதிகப்படியான விளம்பரங்களை போட முடியும். 

தயார் செய்யக்கூடிய வீடியோவில் மொழியானது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. நீங்கள் எந்த மொழியோ அந்த மொழியில் உள்ள வாடிக்கையாளர்களை கவர்வது மிகவும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக அந்த வீடியோவில் மனிதனின் உழைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அதாவது முகம் காட்டாமல் எடுக்கப்படும் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்க இயலாது. 

How To Upload Video In YouTube 

உருவாக்கப்பட்ட வீடியோவானது Youtube இல் எவ்வாறு பதிவேற்றம் செய்வது?..

நீங்கள் உருவாக்கிய வீடியோவை Youtube ஆப் அல்லது Youtube ஸ்டூடியோ மூலம் அப்லோடு செய்யலாம். Youtube பக்கத்துக்கு சென்று அதில் அப்லோடு பட்டனை கிளிக் செய்யவும். 

நீங்கள் உருவாக்கிய வீடியோவை தேர்ந்தெடுத்து ஓகே செய்யவும். இப்பொழுது வீடியோ அப்லோட் ஆகிறது. வீடியோ அப்லோட் ஆகும் வரை காத்திருக்கவும். 

What Is Copyright 

Copyright என்பது மற்றவர்களால் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை, நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் சேனலில் பதிவேற்றுவது Copyright எனப்படும். 

இவ்வாறு Copyright செய்வதால் ஏற்படும் பிரச்சனைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

What Is Copyright Strike 

Copyright Strike என்பது உங்கள் சேனலுக்கு கொடுக்கப்படும் Warning ஆகும். இந்த Warning காலாவதி காலம், 90 நாட்களாகும். 

உங்களுக்கு மூன்று Warning கொடுக்கப்படும். மூன்றாவது Warning-யில் உங்கள் சேனல் முற்றிலும் முடக்கப்படும். 

புதியதாக சேனல் ஆரம்பிக்கும் நண்பர்கள் Copyright வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

What Is Copyright Claim

காப்பி ரைட் கிளைம் உங்கள் வீடியோவுக்கு வந்திருந்தால் அந்த வீடியோவுக்கு கிடைக்கப்படும் வருமானம் மட்டும் அந்தக் Copyright ஓனருக்கு செல்லும். 

இது பொதுவாக பாடல் மற்றும் மியூசிக் போன்றவற்றிற்கு இந்த Copyright Claim-மானது வரும். 

ஒருவேளை Copyright கிளைம் உங்கள் வீடியோவுக்கு வருகிறது என்றால், பணம் சம்பாதிப்பது கூட நின்றுவிடும்.

Youtube Policy

எந்த வகையிலும் மற்றவர் உருவாக்கிய வீடியோ அல்லது ஆடியோவை பயன்படுத்த முடியாது எனிலும், இந்த Fair Use Policy மூலம் பயன்படுத்த முடியும். 

அதாவது, பதிவிறக்கம் செய்து அப்படியே பதிவேற்றம் செய்யாமல், ஒரு ஐந்து வினாடி மட்டும் உங்கள் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இது காப்பிரைட் கிளைம் மற்றும் காப்பிரைட் ஸ்ட்ரைக்கில் வராது.

பதிவேற்றம் செய்யப்படும் வீடியோவானது மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. 

கவர்ச்சியான மற்றும் அருவருப்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புதல் கூடாது. 

வீடியோ பதிவேற்றம் செய்யப்படும் பொழுது அது பெரியவர்களுக்கானதா சிறியவர்களுக்கானதா என்பதை குறிப்பிட வேண்டும்.  மற்றும் அந்த வீடியோவானது உங்களால் உருவாக்கப்பட்டதா அல்லது AI மூலமாக உருவாக்கப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

New Update 

முதலில் Shorts Duration 30 நிமிடமாக இருந்தது ஆனால் இப்பொழுது மூன்று நிமிடம் வரை அதிகப்படுத்தி உள்ளனர். 

முதலில் முகத்தை காட்டாமல் வீடியோ போடுபவர்களுக்கு பணம் கிடைத்தது ஆனால் இப்பொழுது கிடைக்கவில்லை. இதனால் அதிகப்படியான Youtubers பாதிக்கப்படுகின்றன.

Youtube-ல் உங்களுக்கான கடையை திறந்து கொள்ளலாம். அதாவது மக்களுக்கு பிடித்த பொருட்களை உங்கள் வீடியோக்கள் மூலம் விற்கலாம்.

Monotization

யூடியூபில் பணம் சம்பாதிக்க Monetization-ஐ ஆன் செய்யவும். இந்த Monetizatio-னை ஆன் செய்வதற்கு சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

முதலில் நீங்கள் ஆயிரம் சந்தாதாரர்களை உங்கள் சேனலுக்கு கொண்டு வரவும். 

இரண்டாவதாக உங்கள் வீடியோவை சந்ததாரர்கள் 4000 மணி நேரம் பார்த்து இருக்க வேண்டும். அல்லது, உங்கள் Shorts வீடியோ 3 மில்லியன் பார்வையாளர்களை அடைந்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு விதிமுறையை Youtubers அடைந்திருந்தால் மட்டுமே Monetization ஆன் செய்யப்படும். Monetization ஆன் செய்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். 

உங்கள் சேனல் ஆனது 4000 மணி நேரம் பார்வை மற்றும் ஆயிரம் சந்ததாரர்களை கொண்டிருந்தால் பணம் சம்பாதிக்க பதிவு செய்யுங்கள்.

Super chat 

Adsense மட்டுமல்லாமல் சூப்பர் சாட் மூலமும் பணம் சம்பாதிக்கலாம். அதாவது நீங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களில் கீழ் இந்த சூப்பர் சாட் பட்டனானது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்கள் சொந்தக்காரர்கள் நினைத்தால் உங்களுக்கு பணம் செலுத்த முடியும். ஆரம்ப விலை 20 ரூபாய் முதல் பணம் அனுப்ப முடியும்.

Join Button 

இந்த Join Button ஆனது பெரிய Youtube சேனலை நடத்துபவர்களுக்கு வழங்கப்படும் ஒன்றாகும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சொந்தக்காரர்களுக்கு மட்டும் உங்கள் வீடியோ காட்டும்படி செய்யலாம். 

இந்த ஜாயின் பட்டனை பெறுவதற்கு சந்ததரர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த ஜாயின் பட்டன் வாங்குவதற்கான தொகை யூடியூப் சேனல் நடத்துபவர்கள் தீர்மானிக்க முடியும்.

Benefits Of Going Live

நீங்கள் லைவ் ஆரம்பிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட மணி நேரம் சென்றவுடன் உங்கள் லைவானது Shortfeed மூலம் அதிக பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லப்படும். இது Vertical லைவ் போடுபவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது.

Don’t Try This YouTube Channel 

முதலில் தேர்ந்தெடுத்த அந்த நீச்சானது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு நீச்சுக்கு மாற்றுவதற்காக உங்கள் வீடியோக்களை முற்றிலுமாக நீக்குவதால் உங்கள் சேனல் அதிகப்படியான நபர்களுக்கு யூடியூப் கொண்டு செல்லாது. 

Copyright வீடியோக்களை அதிகமாக பயன்படுத்தும் பொழுது Youtube அதை கண்டறிந்து நீக்குவதால் உங்கள் சேனல் அதன் தரத்தை இழந்து படிப்படியாக குறைந்து கொண்டே போகும். 

முகம் காட்டாமல் வீடியோ போடுவதை தவிர்க்கவும். முடிந்தவரை உங்கள் முகத்தை காட்டி வீடியோ போடுங்கள் அது உங்களுக்கும் உங்கள் சந்ததாரர்களுக்கும் இடையே ஒரு நட்பை உருவாக்கும். 

வீடியோவானது மற்றவர்களுக்கு அறிவை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். மக்களை தவறான வழியில் கொண்டு செல்லாதவாறு இருக்க வேண்டும்.

How To Connect Adsence And Youtube 

 உங்களுடைய கூகுள் அக்கவுண்ட்டை அதாவது Youtube சேனல் உருவாக்கப்பட்ட அந்த ஈமெயில் ஐடியை Adsense-ல் லாகின் செய்யவும்

இரண்டாவதாக உங்கள் சேனலின் URL-ஐ காப்பி செய்து கொள்ளவும். லாகின் செய்யப்பட்ட Adsense அக்கவுண்டில் காப்பி செய்யப்பட்ட URL-ஐ கொடுத்து Add Site செய்து கொள்ளவும்.

இவ்வாறாக Add Site கொடுக்கப்படும் பொழுது கூகுள் ஆனது உங்கள் அக்கவுண்ட்டை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருப்பின் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வழியை காட்டுவார்கள். 

யூடியூப் சேனல் ஆனது கனெக்ட் செய்து விட்டால் உங்கள் ஈமெயில் ஐடிக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கும்.

How Much Money Can I Earn?

உங்கள் சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை, பார்வையாளர்கள் பார்க்கும் நேரம் மற்றும் ஒவ்வொரு வீடியோவிற்கும் நீங்கள் எத்தனை விளம்பரம் கொடுக்கப்பட்டீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கான வருமானம் வழங்கப்படும்.

 விளையாட்டுத் துறையை சார்ந்து இருந்தால் 150 பார்வையாளர்களுக்கு 11 ரூபாய் வீதம் வழங்கப்படும். 

 தொழில் மற்றும் அறிவியல் துறையை சார்ந்து இருந்தால் 130 பார்வையாளர்களுக்கு ஒன்பது ரூபாய் வீதம் வழங்கப்படும். 

படம் துறையை சார்ந்து இருந்தால் 140 பார்வையாளர்களுக்கு மேல் இருந்தால் நான்கு ரூபாய் வீதம் வழங்கப்படும்.

ஒவ்வொரு துறையை பொருத்தும் உங்களுக்கான பணம் வழங்கப்படும். எனவே நீங்கள் சேனல் ஆரம்பிப்பதற்கு முன் உங்கள் துறையை தேர்வு செய்யவும்.

ஷார்ட்ஸ் வீடியோ அப்லோடு செய்பவர்களாக இருந்தால் முற்றிலுமாக இந்த பணமதிப்பு வேறுபடும். ஆயிரம் பார்வையாளர்களுக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும். 

அதேபோல மற்றவர் சேனலில் காட்டப்படும் வருமானமும், உங்கள் சேனலில் காட்டப்படும் வருமானமும் ஒரே மாதிரியாக இருக்காது. அது ஒவ்வொருவரின் வீடியோ தரத்தை பொறுத்து பணம் வழங்கப்படும்.

Disadvantage Of YouTube 

சேனல் ஆரம்பித்து சில மாதங்களில் உங்கள் சேனல் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. இதன் காரணமாக நீங்களே உங்கள் சேனலை இழுத்து மூடி விடவும் வாய்ப்பு உள்ளது. 

உங்கள் சேனலின் பெயரை இன்னொருத்தர் வைத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் சேனலின் பெயரை வைப்பதற்கு முன் அந்தப் பெயரில் வேறு ஒருவர் இருக்கிறாரா என்பதை பார்த்துவிட்டு வைக்கவும். 

இந்தப் பணம் சம்பாதிக்க உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று வருடம் கூட ஆகலாம். ஒரு சிலருக்கு உடனே கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது ஒரு சிலருக்கு கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது .

Youtube மூலம் அனுப்பப்படும் செய்திகளை மட்டும் நம்பவும். Youtube மாதிரி நிறைய ஊடகங்கள் இருக்கின்றன அதை நம்ப வேண்டாம். 

Conclusion

மேலே குறிப்பிட்டது போல எல்லோருக்கும் பணம் சம்பாதிக்க கடிய எண்ணம் இருக்கிறது. ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் திறமை இருந்தும் முட்டாளாகவே இருக்கின்றன. சமூக வலைதளங்களில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் எளிது. அதேபோன்று அதை கைவிடாமல் சரியாக கொண்டு செல்வது என்பது மிகவும் கடினம். உங்களுக்கு பணம் சம்பாதிக்க youtube ஒரு பாதை தானே தவிர அதே போன்று நிறைய பாதை இருக்கிறது கவலை வேண்டாம். நன்றி. 

மேலும் படிக்க: How To Control Hair Fall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *