Hair Fall அதாவது முடி உதிர்வு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றியமையாத பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வு. இந்த முடி உதிர்வானது உடல் சூட்டின் காரணமாக இருக்கலாம்.
பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய முடி உதிர்வாக இருக்கலாம். முடி உதிர்வு எவ்வாறு வருகிறது ஏன் வருகிறது எப்படி வருகிறது என்ற காரணங்களை பின்வருமாறு காணலாம்.

Problem Of Hair Fall
முடி உதிர்வு என்பது ஒரு தீர்வாற்ற பிரச்சினையாகும். இது பொதுவாக எல்லோரிடத்திலும் காணப்படும்.
ஆனால் ஒரு சிலருக்கு இது அதிகமாக இருப்பதால் அவர் மற்றவர்களுடன் ஒரு பிணைப்பு இல்லா மனிதராக கருதப்படுகிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், முடி உதிர்வின் காரணமாக சிலருக்கு திருமணம் கேள்விக்குறியாகி விடுகிறது. திருமணம் என்பது ஒரு ஆயிரம் காலத்து பயிர்.
முடி உதிர்வது என்பது ஒரு தீர்வற்ற பிரச்சனை. இக்காலத்து பெண்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
நிறைய மனிதர்களுக்கு இந்த முடி உதிர்வு பிரச்சனை இருப்பதால் அவர்கள் ஒரு நோயாளி போன்று மன உளைச்சலுக்கு ஆளாகின்றன, ஆளாக்கப்படுகின்றன.
முடி அதிகமாக இருந்தால் அழகு இருக்கும். ஆனால், அழகு இருக்கின்ற எல்லோரும் அறிவாக இருப்பார்களா என எந்தப் பெண்ணும் யோசிக்க தவறுகிறார்கள்.
திருமணம் ஆக வில்லை என ஏங்கும் பெண்கள் ஒரு முடி இல்லாத ஆணை திருமணம் செய்ய யோசிக்கின்றன. அழகு இல்லாத பெண்கள் நீங்களே இவ்வளவு யோசித்தீர்கள் என்றால் அழகு இருக்கின்ற பெண்கள் யோசிக்க மாட்டார்களா என்ன.
எல்லோரும் புகைப்படம் எடுக்கும் பொழுது இவர் மட்டும் தனித்து காணப்படுவார் காரணம் முடி உதிர்வு. முடி உதிர்வு ஒரு குறை இல்லை என எல்லோரும் நம்பப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது ஒருவரின் வாழ்க்கையை மாற்றும்.
எல்லா மனிதர்களும் இவரின் முடி உதிர்வை பற்றி கேட்கும் பொழுது அது அவருக்கு இன்னமும் மன உளைச்சலைத் தரும். முடி உதிர்வுக்கு தீர்வு தராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதை குத்திக் காட்ட வேண்டாம்.
முடி உதிர்வு என்பது உடல் சூட்டின் காரணமாக கூட வரலாம், அது அவருக்கு ஒரு குறை கிடையாது இதை எல்லா மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது அவரின் அப்பா வழி மூலம் கூட வந்திருக்கலாம்.
அதை சுட்டிக்காட்டி அவரை மட்டம் தட்டுவது அவரை இழிவாக பேசுவது என்ற காரியங்களில் ஈடுபடுவது உங்களின் மரியாதையை குறைக்க கூடியதாகும்.
அடுத்ததாக இளநரை. இது அக்காலத்தில் முதியவர்களை வரக்கூடிய ஒன்றாக பார்க்கப்பட்டது. இப்பொழுது இளம் தலைமுறைகளுக்கு வந்துவிட்டது.
இது பொதுவாக பேசப்படவில்லை என்றாலும் இதுவும் ஒரு குறைவாகத்தான் பார்க்கப்படுகிறது.
பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து கருப்பு சாயம் போன்ற பல வண்ண நிறங்களில் வந்து விட்டன எனவே இது ஒரு குறையாக பார்க்கப்படவில்லை.
Hair Fall Reason
ஒரு மன உளைச்சலுக்கு ஆளாகும் பொழுது உங்களுக்கு முடி கொட்ட வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிகமாக மூளையை யோசித்தீர்கள் என்றால் உங்களுக்கு முடி கொட்ட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் அதிகமாக யோசித்தீர்கள் அல்லது மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் பொழுது உங்கள் முடி உதிரத் தொடங்கும்.
ஒரு சிலருக்கு அவரின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது அவரின் முடி கொட்டும். அதிகப்படியான மக்களுக்கு உடல் சூட்டின் காரணமாக மட்டுமே முடி கொட்டும்
மீதமுள்ள சிலருக்கு அவர்களின் அப்பா அல்லது தாத்தா வழி மூலமாக அவருக்கும் முடி கொட்டும். இந்த சந்ததி வழி முடி உதிர்வு என்பது ஒரு இயற்கை பிரச்சனையாகும்.
எல்லா முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. எனிலும் இயற்கை வழி முடி உதிர்வுக்கு தீர்வு கிடையாது. முடியை அதிகளவு சீவும் பொழுது முடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொடுகு அதிகமாக இருக்கும் பொழுது முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது. பொடுகு ஏற்பட்டால் முடிந்த அளவு தலையை நீரால் கழுவும்.
இவ்வாறு நீரினால் கழுவும் முழுதும் முடி உதிர்வு ஏற்படும். பொடுகை சுத்தம் செய்யாவிட்டால் அது தலை முழுவதும் பரவ ஆரம்பித்து விடும். மக்கள் சில வழிகளை குறிப்பிடுகின்றன.
Solution Of Hair Fall
ஒரு தடவை முடி உதிர்ந்து விட்டால் மீண்டும் முளைக்கும். ஆனால் ஒரு முடி உதிர்ந்து விட்டு மீண்டும் முளைக்காவிட்டால் அது வழுக்கை அல்லது சொட்டை என கூறப்படுகிறது.
இந்த முடி உதிர்வுக்கு விடை இருக்கா இல்லையா என்பதற்கு, ஒவ்வொருவரின் உடல் மற்றும் உங்களின் சந்ததியைப் பொறுத்தது.
ஒருவருக்கு பொடுகின் மூலம் முடி கொட்டுகிறது என்றால், அவர் முதலில் பொடுகை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், கொட்டப்பட்ட முடி மீண்டும் வளர ஆரம்பிக்கும் பொழுது, அந்தப் பொடுகானது வளரும் ஓட்டையை அடைத்து விடும்.
இது அந்த முடியின் வளர்ச்சியை முற்றிலுமாக தடுக்கிறது. இதன் மூலம் அந்த முடியின் ஆயுட்காலம் அன்றே முடிவடைகிறது. எனவே பொடுகு வந்தால் உடனடியாக தலையை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
உடல் சூட்டின் மூலம் ஏற்படும் முடி உதிர்வுக்கு தீர்வு உண்டு. உங்கள் உடல் சூட்டை தணிக்க அதிக அளவு தண்ணீரை உட்கொள்ளுங்கள்.
உங்களின் உடல் சூட்டை தணிக்க தலையில் எண்ணெய் வையுங்கள் மற்றும் அதிகளவு தண்ணீர் நிறைந்த பழங்களை உட்கொள்ளுங்கள். இது உங்களின் உடல் சூட்டை தணிப்பது மட்டுமல்லாமல் உங்கள் முடி உதிர்வையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.
பரம்பரையாக வரும் முடி உதிர்வுக்கு தீர்வு கிடையாது. நீங்கள் கேட்கப்படும் அல்லது பார்க்கப்படும் விளம்பரங்கள் அனைத்தும் முற்றிலும் தவறாக கூட இருக்கலாம்.
எனவே அதை நம்பி உங்கள் பணத்தை செலவு செய்யாதீர்கள். பரம்பரை முடி உதிர்வுக்கு தீர்வு உண்டு என ஏமாற்றும் விளம்பரதாரர்களை நம்ப வேண்டாம்.
இந்த மாதிரியான விளம்பரதாரர்கள் உங்களின் சூழ்நிலையை பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக நடக்கும் இந்த முடி உதிர்வானது உங்களின் தவறு அல்ல எனவே இதை நினைத்து நீங்கள் வருந்த வேண்டாம்.
முடிந்த அளவு முடி உதிர்வை உங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுங்கள்.
மருத்துவமனை சென்று உங்கள் பிரச்சனை தீரவில்லை என்றால் மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். ஏனெனில், இது உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற அதிகப்படியான மக்களுக்கு இந்த முடி உதிர்வானது இருக்கிறது.
How To Control Dandruff
பொடுகு என்பது ஒரு நுண்ணுயிராகும். இது உடல் சூட்டின் காரணமாக அதிக அளவு பரவக்கூடிய ஒரு உயிரி வகையை சார்ந்தது.
இது ஒருவர் பயன்படுத்திய சீப்பு அல்லது தொடுதல் மூலமாக ஒரு வருடத்தில் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.
முடிந்தவரை இந்த பொடுகு வராமல் பார்த்துக் கொள்ளவும் இல்லை என்றால் இது முடி உதிர்வுக்கு ஒரு காரணமாக அமைந்து விடும்.
இந்தப் பொடுக்கானது தங்களை காப்பாற்றிக் கொள்ள பள்ளம் குழி போன்ற இடங்களில் படிந்து விடுகிறது.
நீங்கள் ஷாம்பூ, சோப்பு போன்றவைகளை பயன்படுத்தும் பொழுது இந்தப் பொடுகானது தடுக்கப்படுகிறது.
பொடுகானது தடுக்கப்படுகிறது தவிர முற்றிலுமாக தடுக்கப்படவில்லை எனவே, சோப்பு போட்டு குளிக்கும் பொழுது நன்றாக தேய்த்து குளிக்கவும்.
முடிந்தவரை உடல் சூட்டை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் ஏனெனில் இது உடல் சூட்டின் மூலமாக அதிகமாக பரவும்.
How To Control Hair Fall
முடி உதிர்வை முற்றிலும் தடுக்க முடியாமல் போனால் எல்லாம் முடியும் கொட்டிவிடும் எனவே, முடி கொட்டுவதை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
முதலில் எண்ணெய் தேய்க்கவும், மேலோட்டமாக அல்ல தலையின் ஆணிவேர் வரை என்னை இறங்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில், தேங்காய் எண்ணெயை விட நல்ல எண்ணெய் அதிகம் குளிர்ச்சியை தரும்.
சில சமயங்களில் குளிர்ச்சி அதிகமாகி சளி பிடிக்க கூட வாய்ப்பு உள்ளது.
தலைக்கவசம் அணியும் பொழுது பார்த்து வாங்குங்கள் ஏனெனில், முடி கொட்டுவதற்கு தலைக்கபசமும் ஒரு காரணம். எனவே, காற்று அதிகம் போகும் தலைக்கவசம் வாங்குவது சிறந்தது.
அதேபோல் மற்றவர் பயன்படுத்திய தலைக்கவசம் மற்றும் சீப்பு போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
Advice Of Relatives
நான் உங்களுக்கு சில அறிவுரைகளை கூற விரும்புகிறேன். முதலில் ஒருவர் முடி இல்லாமல் இருந்தால் அவர்களைப் பற்றி குறை கூற நினைக்காதீர்கள். ஏனெனில், அது அவரின் குறையாக இல்லாமல் கூட இருக்கலாம்.
முடி இல்லாத ஒருவருக்கு அறிவுரை கூற விரும்பினால் அது அவர்களிடம் எந்த அளவுக்கு அவரை பாதிக்கும் என்பதை தெரிந்து கூறுங்கள். ஏனென்றால் அது அவரின் மனநிலையை பொறுத்தது.
அறிவுரை கூற நினைக்கும் அந்த முடி இல்லாத நபர் ஏற்கனவே இருக்கக்கூடிய அந்த மன உளைச்சலில் இருப்பார் எனில் நீங்கள் கூறும் அறிவுரையை அவர் கேட்க வாய்ப்பு இல்லை.
எவருக்கும் அறிவுரை கூற வேண்டாம். ஏனெனில், அது உங்களின் கடமை அல்ல அது அவரின் விருப்பமே ஆகும்.
அவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது அவரின் உரிமை அதில் நீங்கள் எப்பொழுதும் தலையிட வேண்டாம்.
முடி இல்லாத ஒருவரை பார்த்து நீங்கள் நல்ல எண்ணத்தில் கோரும் அந்த அறிவுரை அவரை மென்மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.
முடிந்தவரை உங்களின் அறிவுரையை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள்.
Conclusion
அனைவரையும் சமமாக பார்க்கும் இந்த காலத்தில் இத்தகைய மனிதர்கள் மட்டும் உங்களிலிருந்து வேறுபடுகின்றன. அதை “நீங்கள் பொருட்படுத்தா விட்டாலும் பரவாயில்லை குத்தி காட்ட வேண்டாம்”.
எல்லோரிடத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கும் எனவே மற்றவரின் இந்த நிலையை பார்த்து குறை கூற உங்களுக்கு எந்தவித தகுதியும் இல்லை.
ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் சாதிக்க நினைக்கும் அந்த ஒரு தருணத்தில் நீங்கள் இவ்வாறு பேசுவது முறையாக இருக்காது.
எனவே, உங்களிடத்தில் இந்த மாதிரி யாராவது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இருந்தால் அவர்களிடத்தில் நீங்கள் சென்று அவருக்கு நம்பிக்கை தாருங்கள். அதுவே அவர்களுக்கு போதுமானது. நன்றி.
மேலும் படிக்க: Twenty Community Truths