Fevicol Story In Tamil

கடைசியா நீங்க கடைக்கு போய் எப்போ, கம் வாங்கிருக்கீங்க? ஞாபகம் இல்லையா.. அதற்கு என்ன காரணம் என்று இப்போ நான் உங்ககிட்ட சொல்றேன்.

பொதுவாகவே நாம் நோட்டுப் புத்தகங்கள் கிழிந்து விட்டால் அதை சரி செய்வதற்கு பசை Fevicol என்ற ஒன்றை பயன்படுத்துவோம். இது மக்கள் மத்தியில் கம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பெவிகால் என்ற நிறுவனம் ஆனது கம் என்ற பெயரை மாற்றி ஃபெவிகால் என்ற பெயரை மாற்றுச் சொல்லாக பயன்படுத்த ஆரம்பித்தது. காலப்போக்கில் இந்த கம் என்ற பெயர் முற்றிலுமாக மறைந்து ஃபெவிகால் என்ற பெயர் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இது எவ்வாறு மாற்றப்பட்டது இந்தச் சொல்லை மாற்ற நிறுவனம் எவ்வாறு உழைத்தது என்று பின்வருமாறு காணலாம்.

Introduction Of Fevicol

ஃபெவிகால் என்ற பெயர் கேட்டாலே நமது சிறு வயது ஞாபகத்திற்கு வருகிறது. ஏனென்றால், சிறுவயதில் நாம் சிறு சிறு வேலையை செய்வதற்கு இந்த பெவிகால் பெரிதும் பயன்பட்டது.

பள்ளிகளில் நடத்தக்கூடிய பாடங்கள் அனைத்தும் ஃபெவிகால் பயன்படுத்தி செய்யக்கூடிய வேலையாகவே இருந்தது. இந்த ஃபெவிகால் பள்ளிகளில் மட்டுமல்லாமல் பொது இடத்தில் அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகின்றன.

மரத்தினை ஒட்ட வைப்பதற்கும், கட்டைகளை ஒட்டுவதற்கும் மற்றும் உடைந்த பொருட்களை ஒட்ட வைப்பதற்கு இந்த ஃபெவிகால் ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடைகளில் பெரிதும் கேட்டு வாங்கப்படக்கூடிய இந்த ஃபெவிகால் ஆனது நாம் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இருந்தாலும், முதலில் இது எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்றால், விளம்பரம்.

முதன் முதலில் இது விளம்பரத்தின் வாயிலாக நம்மை வந்து அடைகிறது.

பிறகு மக்கள் இதை ஓட்டுவதற்கு பரிந்துரைக்க ஆரம்பித்தனர். காலப்போக்கில் மக்கள் இதை விளம்பரப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு ஃபெவிகால் நிறுவனமானது ஃபெவிகால் விளம்பரங்களை நிறுத்திவிட்டது.

எல்லா நிறுவனங்களைப் போல ஃபெவிகாலும் விளம்பரப்படுத்தியது. ஆனால் ஃ பெவிகால் வெற்றியடைய காரணம் என்னவென்றால் அவர்கள் விளம்பரப்படுத்திய விதம்.

இவர்கள் விளம்பரமானது எளிமையாகவும் சாமானிய மக்களுக்கு புரியும் விதத்திலும் அமைக்கப்பட்டு இருக்கும். எனவேதான் அதிகப்படியான மக்களுக்கு இந்த ஃபெவிகால் ஆனது கொண்டு சேர்க்கப்பட்டது.

History Of Fevicol

1950 களில் பல்வக் பரேக் மற்றும் அவரது சகோதரரான சுசில் பிரேக் என்பவரும் மரக்கடைகளில் வேலை பார்த்து வந்து இருந்தன. இதில் பல்வக் பரேக் என்பவர் எப்பொழுதும் போல வேலை செய்து கொண்டு வந்தார்.

அவர் ஒரு கணம் மரக்கடைகளில் வேலை பார்க்கும் போது ஒன்றை கவனிக்கிறார். என்னவென்றால், இரண்டு மரத்தை ஒட்ட வைப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பசையானது திடநிலையில் இருந்தது.

இதனை திரவ நிலைக்கு மாற்றுவது என்பது கடினமான வேலையாகும். திரவ நிலைக்கு மாற்ற அதிகப்படியான வெப்பத்தில் சூடு படுத்த வேண்டும். இதனை சூடு படுத்தும் பொழுது அதிகப்படியான துருநாற்றம் வீசும்.

இவ்வாறாக பயன்படுத்தப்பட்ட பசையானது குறுகிய காலம் மட்டுமே பயன்படுகிறது. மாற்றாக, நீண்ட காலம் உழைக்கும் தன்மையை இழந்து இருப்பதை கவனித்தார்.

மரவேலையில் ஈடுபடுபவருக்கு இந்த பசையானது அதிகம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தார். எனவே, அதை தயாரிக்கவும் ஆரம்பித்தார். இந்தப் பசையை தயாரிப்பது என்பது மிகவும் எளிது. ஆனால்,

இந்த பசையை எங்கிருந்து உருவாக்கப்படுகிறது என்றால், விலங்குகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. விலங்குகளிலிருந்து எடுக்காமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசைகள் மூலம் மரவேலையை நன்றாக செய்யலாம்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசையை பயன்படுத்தும் பொழுது வேலை எளிதாக உள்ளது என்ற போதிலும், செலவும் அதற்கு தகுந்தவாறு அதிகமாகவே உள்ளது.

அதாவது, அதிக பணக்காரராக இருப்பவர் மட்டுமே அதை பயன்படுத்த முடியும் என்ற கட்டாயத்தில் மரவேலை செய்யக்கூடிய ஏழை மக்கள் இருந்தனர். ஆதலால் ஏழை மரவேலை செய்பவர்கள் இதை பெரிதும் வாங்குவதில்லை.

இதைக் கவனித்த பல்வக் பரேக் என்பவர், இயற்கை மூலம் உருவாக்கப்பட்ட வெள்ளை நிற பசை ஒன்றை உருவாக்கினார். இதற்கு ஃபெவிகால் என்ற பெயரை அவர் வைக்கிறார்.

இந்த ஃபெவிகால் என்ற பெயர் எப்படி வைக்கிறார் என்றால், இலத்தீன் மொழியில் கால் என்றால் கம் என்று பொருள். எனவே இதற்கு ஃபெவிகால் என்ற பெயர் வைக்கப்பட்டது என்று சிலர் கூறுகின்றன.

ஒரு வழியாக பெயர் வந்துவிட்டது, இந்த ஃபெவிகால் சந்தைப்படுத்துவதற்கு இரண்டு பேருக்கும் சில சிக்கல் ஏற்பட்டது.

முதலில் இந்த பசையானது இயற்கை முறையில் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்த தச்சர்கள் மற்றும் மரவேலை ஆட்கள் இதை வாங்க மறுத்தனர். ஏனெனில், இதன் விலை அதிகம் என்பதனால்.

மற்றொன்று இது அதிகப்படியான மக்களுக்கு இன்னும் கொண்டு சேரவில்லை. எனவே இதன் விளம்பரத்தன்மை மிகவும் குறைவு என்பதனால் இதை மக்கள் வாங்க மறுத்தனர்.

ஃபெவிகால் மக்களுக்கு கொண்டு செல்ல ஒரு நடுவர் இருக்க வேண்டும். அவர் இதன் விலையை முடிவு செய்வார் மற்றும் மக்களுக்கு இந்த ஃபெவிகால் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்.

அவர் மூலமாக மட்டுமே இந்த ஃபெவிகால் மக்களுக்கு கொண்டு சேர வைக்க முடியும். இந்தப் பிரச்சினையை சமாளிக்க சகோதரர்கள் இருவரும் ஒரு முடிவு எடுத்தனர்.

Problem Of Fevicol

நேரடியாக விற்பனையாளர்களை அல்லது நடுவர்களை நம்பவில்லை. மாற்றாக தச்சர் மற்றும் மர வேலை ஆட்களை நம்ப வைக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு இடமாக சென்று மரவேலை ஆட்களுக்கு பயன்படுத்த கோரி இதனை விளம்பரப்படுத்தினர்.

இந்த ஃபெவிகால் பயன்படுத்திய மரவேலை ஆட்கள் இதன் தன்மை நிலையை அறிந்து இதை வாங்க ஆரம்பித்தனர். வாங்கிய பொதுமக்கள் இந்த ஃபெவிகால் அவர்களின் நண்பர்களுக்கு பரிந்துரை செய்ய ஆரம்பித்தனர்.

ஃபெவிகால் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக ஃபெவிகால் நிறுவனமானது Fevicol Champions Club  என்ற ஒன்றை ஆரம்பித்தது. இதன் மூலம் மரத்தொழிலை மக்களுக்கு கொண்டு சேர விரும்பியது.

அதன் வாயிலாக பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் அனைத்து மர வேளையிலும், ஃபெவிக்கால் பயன்படுத்தி பயிற்சி நடத்தியது அந்த நிறுவனம்.

பயிற்சியில் கலந்து கொண்ட மர தொழிலாளர்கள் தொழிலை கற்றவுடன், வெளியில் வேலைக்குச் செல்லும் பொழுது ஃபெவிக்காலை பயன்படுத்தினர். இந்தப் பயிற்சியில் பயின்ற அனைவரும் ஃபெவிகால் பயன்படுத்தி மர வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.

இவ்வாறாக மர தொழிலாளர்கள் மூலம் ஃபெவிக்கால் பசையின் மூலமாக முதல் பயணத்தை தொடங்குகிறது.

ஃபெவிகால் நிறுவனமானது முதன் முதலில் மகாராஷ்டிராவில் தொடங்கப்படுகிறது. இது உற்பத்தி அடைந்த அடைந்து அதிகப்படியான வளர்ச்சியை அடைகிறது. இதன் தலைமையகமானது அது முதலில் தொடங்கப்பட்ட இடத்திலேயே இன்றும் இருக்கிறது.

இப்படி உருவான இந்த ஃபெவிகால் ஆனது மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சென்றடைய அந்த நிறுவனம் விரும்பியது. அதற்கு ஃபெவிகால் நிறுவனம் விளம்பரத்தை கையில் எடுத்தது.

Advertisement Of Fevicol

இந்த ஃபெவிகால் பசியை விளம்பரப்படுத்துவதற்கு ஒரு பெரிய நிறுவனத்தை சந்திக்கிறது. அவர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட அந்த புகைப்படம் தான் இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது.

ஒரு பசையின் மூலம் ஒட்டப்பட்ட மரக்கட்டையை இரண்டு யானை சேர்ந்து இழுத்தும் இழுக்க முடியவில்லை என்பதை குறிப்பதே இந்த படம் ஆகும்.

இந்த படத்திற்கு அர்த்தம் என்னவென்றால்,  யானையுடைய பலத்திற்கு ஈடு கொடுக்கக் கூடியது இந்த பசை என்பதாகும். இதன் படமானது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்பட்டது.

1997 களில் தொலைக்காட்சியின் மூலம் விளம்பரப்படுத்த ஆரம்பித்தனர் இந்த ஃபெவிகால் நிறுவனம்.

மர வேலையாட்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வேலை இருக்கிறது மற்றும் வேலைக்கு தகுந்தவாறு பசையின் அளவு மாறுபடும் என்பதால் பல்வக் பரேக் என்பவர் விலைக்குத் தகுந்தவாறு பசையின் அளவை குறைத்தார்.

இதன் மூலம் வேலையாட்கள் அவரவர் தேவைக்கு தகுந்தவாறு அளவை மாற்றி வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தனர்.

பள்ளி மாணவர்கள் இதை அவர்களுக்கு தகுந்தவாறு பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் மூலம் ஃபெவிகால் என்ற பெயர் வேகமாக வளர தொடங்கியது.

ஃபெவிகால் பசையின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் பேப்பரில் கீழ் இந்த பசை மற்றும் இதன் பயன்பாடு குறித்து எழுதப்பட்டிருக்கும். இதை மக்கள் வெகுவாக கவனிக்க தவறுகின்றனர். எனவே,

ஒவ்வொரு வேலைக்கு தகுந்தவாறு பசை மற்றும் அதன் திறன் மற்றும் அதன் வடிவம் போன்றவற்றை தனித்தனியாக உருவாக்கியது பெவிகால் நிறுவனம்.

இதன் மூலம் ஃபெவிகால் நிறுவனமானது ஒவ்வொரு தனி தனி துறைக்கும் தகுந்தவாறு ஃபெவிகால் பசையை பயன்படுத்தி வந்தது.

இந்த நிறுவனமானது இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட விளம்பரத்தின் வாயிலாக ஒன்று கூறியது. என்னவென்றால், 400 ஆண்டுகளைக் கடந்தும் இந்த பசையானது உழைக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் அந்த விளம்பரமானது அமைக்கப்பட்டிருக்கும்.

இதைப் பார்க்கின்ற பொது மக்கள் ஃபெவிக்கால் இவ்வளவு நீடித்து உழைக்கும் என்பதை நினைவூட்டும் வகையில் அமைகிறது.

Success Of Fevicol

ஒவ்வொரு நிறுவனமும் வளர்வதற்கு ஏதாவது ஒரு தந்திரம் ஒழிந்திருக்கும். அதேபோல இந்த ஃபெவிகால் நிறுவனமும் வளர்வதற்கு பல்வப் பறை என்பவர் காரணமாக இருந்திருக்கிறார்.

பல்வக் பரேக் என்பவர் தனது ஃபெவிகால் நிறுவனம் வளர்ந்து வருவதை பற்றி யோசிக்காமல், மேலும் இந்த நிறுவனத்தை எவ்வாறு மேலே கொண்டு போவது என்பதை பற்றி யோசிப்பதே இந்த ஃபெவிகால் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம்.

Conclusion

ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி தேவை இருக்கும்.

இந்தத் தேவையை எவன் ஒருவன் சரியாகப் புரிந்து அதற்கு தகுந்தவாறு ஒரு பொருளை உருவாக்குகிறானோ அது மிகப் பெரிய வெற்றியை அடையும்.

வெற்றியை அடையும் இந்த கருத்துக்கு உதாரணமாக ஃபெவிகால் நிறுவனத்தின் ஓனரான பல்வக் பரேக் என்பவரை கூறலாம். இரண்டாவது நீங்கள் உருவாக்கிய அந்த பொருள் அல்லது ஒரு மூலப்பொருள் மக்களுக்கு எந்த அளவு பயன்படுகிறது என்பதை அடிக்கடி கவனிக்கவும்.

இது அவர்களின் நிறை குறைகளை ஆராய உதவுகிறது. குறைகளை அவ்வப்போது நிவர்த்தி செய்ய வேண்டும் இல்லை என்றால் அது மிகப் பெரிய தோல்வியை அடையவும் வாய்ப்பு உள்ளது.

நீங்கள் உருவாக்கக்கூடிய அந்த பொருளானது மக்களுக்கு எந்த வகையில் பயன்படும் எந்த வகையில் அவர்களை பயன்படுத்த வைக்கலாம் என்பதை பற்றி உங்கள் நோக்கமானது இருக்க வேண்டும்.

புதிது புதிதாக உங்களது திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு நீங்கள் யோசிக்கும் பொழுது நீங்கள் மட்டுமல்லாமல் உங்களை சார்ந்தவர்களும் உங்களுடன் சேர்ந்து வளருவார்கள்.

மேலும் படிக்க: Coca Cola Story In Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *