மிகவும் அழகிய நாட்கள் அது( Without Social Media ). ஒவ்வொருவரின் குணமும் வெளிப்படையாக தெரிந்த காலம் அது. ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை அவர் பேசும் விதத்தில் கண்டு கொள்ளலாம்.
இதை ஏன் உங்களிடம் கூறுவதற்கான காரணம் என்றால் இப்பொழுது உள்ள சூழ்நிலை, முன்பு உள்ள சூழ்நிலை போல் இல்லை.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒவ்வொருவரும் முன்னோக்கி சென்று உள்ளனர். ஆனால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி யாரும் கவனிப்பதில்லை.
Social Media
அந்த காலத்தில் உள்ள கலை மற்றும் கூத்து போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டவை. அது அவர்களின் வாழ்க்கை முறையாகும்.
ஒரு குறிப்பிட்ட நபர்கள் நடிப்பார்கள் அதற்கு சுற்றியுள்ள அனைவரும் அதை ரசிப்பார்கள். இது தொண்டு தொட்டு வந்த ஒரு கலாச்சாரமாகும்.
இப்பொழுது இருக்கக்கூடிய சிறுபிள்ளைகள் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் செய்யக்கூடியவை சரியாக படவில்லை. பணம் சம்பாதிப்பதற்கு அதிக வழிகள் இருந்தாலும் இந்தப் பெண்கள் அதிக அளவு கவர்ச்சியை காட்டி மட்டுமே பணம் சம்பாதிக்க நினைக்கின்றன.
நீங்கள் கவர்ச்சியை காட்டுவது தவறு என்று நான் கூறவில்லை. மாறாக, அது உங்களின் வாழ்க்கை முறையாக கூட இருக்கலாம். Social Media நீங்கள் சரி என்று நினைக்கக்கூடிய அந்த ஒரு விஷயம் தவறாக கூட இருக்கலாம்.
யார் என்ன நினைத்தாலும் சரி நான் இப்படித்தான் என்று கூற நினைக்கும் உங்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. உங்களால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் அவரைப் பற்றி தான் எங்களுடைய கவலை.
பெண்களாகிய நீங்கள் உங்கள் ஆடை சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறீர்கள் என நாங்கள் நம்புகிறோம். பெண்களே நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா அன்று உடுத்திய உடைக்கும் இப்பொழுது நீங்கள் அணிந்திருக்கும் உடைக்கும் எவ்வளவு வேறுபாடு என்று.
ஆடை சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான், அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அடுத்து வரக்கூடிய தலை முறையினர் அதை அப்படியே பின்பற்றுவார்கள்.
அடுத்து வர தலையினருக்கு நீங்கள் செய்வது பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து அப்படியே மாறுபவர்களை தவிர இறந்த கால சம்பிரதாயத்திற்கு மாற மாட்டார்கள்.
உங்களிடம் ஒன்று கேட்கிறேன், நீங்கள் உண்மையாகவே உங்களுக்கு பிடித்தவாறு உடைய அணிகிரீர்களா அல்லது மற்றவர்கள் உடை அணிவதை பார்த்து நீங்கள் உடை அணிகிறீர்களா? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
Social Media Feminism
பெமினிசம் என்றால் பெண் சுதந்திரத்திற்காக போராடுபவர்களாக கூட இருக்கலாம் அல்லது பெண் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களாக இருக்கலாம்.
ஆணும் பெண்ணும் சமம் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . ஆனால் ஒரு சில விஷயங்களை ஆண்களால் செய்ய முடியும் பெண்களால் செய்ய முடியாது. அதேபோல பெண்கள் செய்யக்கூடிய ஒரு சில விஷயங்களை ஆண்களாலும் செய்ய முடியாது.
சரி இப்பொழுது ஆண்கள் பெரியவர்களா அல்லது பெண்கள் பெரியவர்களா என்று கேட்டீர்கள் என்றால் ஆண்கள் தான் பெரியவர்கள் என நாங்கள் கூறுவோம். இப்பொழுது யானை, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு எவ்வாறு மதம் பிடிக்குமோ அதேபோல ஆண்களுக்கும் மதம் பிடிக்கும்.
ஆண்கள் சட்டத்தின் அடிப்படையில் தான் அமைதியாக இருக்கின்றார்களே தவிர அவர்கள் அடங்கிப் போகவில்லை. தமிழ்நாட்டில் உள்ள சட்டமானது பெண்களுக்கு ஒரு அரணாக செயல்படுகிறது.
ஒருவேளை இந்த சட்டம் இல்லாவிட்டால் பெண்களின் நிலை என்ன கேள்விக்குறி தானே. பெண்கள் நம் நாட்டின் கண்கள் என பேச்சுக்கு தான் சரியாக இருக்குமே தவிர நடைமுறைக்கு அது ஒத்து வராது.
குறிப்பாக கிராமத்தில் உள்ள பெண்கள் அவர்களுக்கு தெரியும் ஆண்கள் எவ்வாறு குணம் உள்ளவர்கள் என. கிராமப்புறங்களில் அதிக அளவு மக்கள் தொகை இருக்காது.
எனவே, பெண்கள் எது சொல்ல நினைத்தாலும் அவ்வளவு எளிதாக வெளியே வராது எனவே கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் அமைதியாக தான் இருப்பார்கள்.
Village Vs City
நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்த பின்னர், ஆண்களுக்கு எதிராக திரும்புகிறார்கள் அதாவது ஆண்களை வேலை வாங்கும் அளவிற்கு.
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் பெண்களே பெண்களாகிய நீங்கள் எங்களுக்கு அடிமை இல்லை நாங்கள் உங்களை அடிமைப்படுத்த நினைக்க விரும்பவில்லை மாறாக எங்களுக்கு எதிராக மாறிவிடாதீர்கள் என்பதே எங்களின் நிலைப்பாடு.
நாங்கள் உங்களை அடிமைப்படுத்தவில்லை உங்களை நீங்களே அடிமைப்படுத்துகிறோம் என எண்ணி எண்ணி நினைத்துக் கொள்கிறீர்கள்.
அதுவும் இப்பொழுது உள்ள சமூக வலைத்தளங்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்க கொண்டு சட்டத்தின் பிடியில் ஆண்களை சிக்க வைக்கிறீர்கள் இது எவ்வாறு சரியாக இருக்கும்.
பெண்களே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், சட்டம் ஒரு இருட்டறை என உங்களுக்கு தெரியும் அப்படி என்றால் என்னவென்று தெரியுமா? சட்டம் எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்காது பெண்களே!
நீங்கள் ஒரு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள் என்றால், அது வெளியே தெரிய வேண்டும் என்றால் நீங்கள் முதலில் வெளியே தெரிய வேண்டும், நீங்கள் வெளியே தெரியவில்லை என்றால் உங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வெளியே தெரியாமலே போய்விடும்.
ஆண்களை நீங்கள் எப்பொழுதும் பகைத்துக் கொள்வது என்பது சரியாக இருக்காது. அதேபோல, நீங்கள் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. பெண்களாகிய நீங்கள் உங்களின் நிலைப்பாடு என்னவென்றால் ஆண்களுக்கு நாங்கள் நிகரானவர்கள் தான் என கூறுவது.
ஆண்களாகிய நாங்கள் சமம் என்று கூற மாட்டோம் அதற்கு மாறாக பெண்களாகிய உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே இருப்போம் இதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். சரி இப்பொழுது ஒரு முடிவுக்கு வருவோம்.
Gender equality
ஆணும் பெண்ணும் சமமா இல்லையா.
ஆணும் பெண்ணும் சமமில்லை. காரணம் என்னவென்றால் அது ஒவ்வொரு சூழ்நிலை பொருத்து அமையும். கிராமப்புறங்களில் அதிக அளவு வீட்டு வேலையை செய்பவர்கள் அதிகமாக பெண்களாக தான் இருக்க முடியும்.
ஏனெனில், அங்கு விவசாயம் சார்ந்த தொழில்கள் தவிர வேறு எதுவும் இருக்காது. பெண்கள் உடல் வருத்திக் கொள்ளும் வேலையை செய்ய மாட்டார்கள்.
ஆதலால், வீட்டு வேலை அதைவிட எளிது என்பதால் அதிகமாக பெண்கள் வீட்டு வேலையை செய்வார்கள்.
நகர்ப்புறங்களில் உழைத்து செய்யக்கூடிய வேலை சமைக்கும் வேலை தானே தவிர வேறு எதுவும் இருக்காது. ஆதலால் நகர்புறங்களில் உள்ள பெண்கள் மட்டுமே பெண் சுதந்திரத்தை பற்றி பேசுவார்கள்.
வெளியே சென்று வேலை பார்ப்பது என்பது பெண்களுக்கு சந்தோசமாக இருக்கும். ஆதலால், பெண்கள் வீட்டு வேலையை விட வெளியில் சென்று வேலை பார்ப்பதை பெருமையாக பேசுவார்கள் அதே போல பெண் சுதந்திரத்தையும் பேசுவதற்கும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது.
இப்பொழுது ஆண்களின் நிலைமையை பாருங்கள். கிராமப்புறங்களில் உழைத்து செய்யக்கூடிய வேலையை நகர் புறங்களிலும் உழைத்தே செய்வதுதான் ஆண்களின் சாபக்கேடு.
பெண்கள் நகரப்புறங்களுக்கு தகுந்தார் போல மாறும் பொழுது ஆண்களாகிய நீங்களும் அதற்கு தகுந்தாற்போல், அதைவிட மேலே செல்வது தன் சரியாக இருக்கும்.
ஆனால், நகர்புறங்களில் உள்ள ஆண்கள், பெண்கள் செய்யக்கூடிய வேலையை செய்வ தன் விளைவு ஆண்கள் அடக்கி ஆளலாம் என பெண்கள் எண்ணுவதே ஆகும்.
90’s Memories
90களில் பிறந்த அனைவருக்கும் தெரியும் காதல் எவ்வளவு அற்புதமானது என்று. அப்படிப்பட்ட காதல் இப்பொழுது உள்ள காதலுக்கு நிகராய் என கேட்டால், கண்டிப்பாக நிகர் இல்லை என கூறுவேன்.
அப்பொழுது, ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு ஆணிடமோ காதலை கூறுவது என்பது அவ்வளவு எளிதல்ல காரணம் எங்களிடம் தொலைபேசி என்ற ஒன்று இல்லவே இல்லை.
ஒரு பெண்ணிடமும் அல்லது ஒரு ஆணிடமோ நம்மளுடைய காதலி கூற நினைக்கும் பொழுது அங்கு ஒளிவு மறைவு என்பது கிடையாது.
அனைத்தும் வெளிப்படையாக இருக்கும், என்ன நடந்தாலும் எல்லோருக்கும் தெரியவரும், காதல் அவ்வளவு அழகாக இருந்தது 90களில்.
இப்பொழுது தொலைபேசி வந்து விட்ட காரணத்தால், காலை வணக்கம், இரவு வணக்கம் போன்று ஆகிவிட்டது காதலை சொல்வது. இப்பொழுது உள்ள காதல் என்பது வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே பழகுகின்றன, அதற்கும் காரணம் தொலைபேசி தான்.
சமூக வலைத்தளம் இல்லாத அந்த காலம், ஒரு அழகிய நாட்கள் தான். யார் யாரிடம் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது அந்த காலத்தில்.
ஆனால், இப்பொழுது உள்ள காலத்தில் அவ்வாறு புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொருவர் கையிலும் தொலைபேசி வந்துவிட்டது.
நீங்கள் இந்த சமுதாயத்தை மாற்ற விரும்பினால் தொலைபேசியை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகள் கேட்பதை கண்டியுங்கள்.
நீங்கள் தொலைபேசி வந்து விட்டது என நினைக்கும் தருவாயில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி நினைக்க தவறுகிறீர்கள். தவறுகளை நான் கூறுகிறேன் தவறா இல்லையா என நீங்கள் கூறுங்கள்.
முகத்தைப் பார்த்தும் பேசாமல் செல்கின்றீர்களே, ஏன்? தொலைபேசி வந்துவிட்டது தொலைபேசியில் பேசி விடலாம் என்றா?
தொலைபேசி இருந்தும் பேசாமல் இருக்கிறீர்களே, ஏன்? பேசிவிட்டால் கடன் கேட்பார்கள் என்றா? அல்லது எல்லோரும் வைத்து இருக்கிறார்கள் நானும் வைத்திருக்கிறேன் என பந்தா காட்டுவதற்காக வா
தொலைபேசியில் 200க்கும் மேற்பட்ட நண்பர்களை வைத்துள்ளீர்கள் ஆனால், எதற்கு வைத்து உள்ளீர்கள் எனக் கேட்டால் Whatsapp ஸ்டேட்டஸ் பார்ப்பதற்கு என கூறுகிறீர்களே, நியாயமா?.
Conclusion
பொதுவாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் காலம் மாறிவிட்டது அது காலத்தின் நிலை நீங்கள் ஏன் மாறுகிறீர்கள் என்பது எங்களின் கவலை.
நிறைய ஆண்கள் வெளிநாடு அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கக் கூடிய நிலை வந்ததன் காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா
எல்லோரும் பணம் சம்பாதிக்க நினைப்பது தவறல்ல ஆனால் பணத்தை சம்பாதித்தால் தான் உங்களுக்கு மரியாதை கிடைக்கும் என கூறுவது எவ்வாறு சரியாக இருக்க முடியும்.
பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற எண்ணம் தான், இதற்கு காரணம். மொத்தத்தில் அனைத்து செயல்களுக்கும் பின்னாடியில் ஒளிந்து இருப்பது, இந்த பணம் மட்டுமே.
இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் மனிதர்களே. “பணம் பத்தும் செய்யும்” என சும்மாவா சொன்னார்கள். பணம்தான் வாழ்க்கை ஆகிவிட்டது சரி அதை சரியாக பயன்படுத்துங்கள்.
நன்றி வணக்கம்….
மேலும் படிக்க: The Premier Accessories For YouTube Influencers