ரொம்ப நாள் கழிச்சு ஒரு ட்ரிப் போயிருந்தோம். அது எங்க அப்படின்னா, எங்க ஊரு பக்கத்துல இருக்க ஒரு பெரிய மலை. இந்த மழையில ஒரு அற்புதமான விஷயம் என்னன்னா, அந்த மலைக்கு படிக்கட்டுகளே கிடையாது.
மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்.
Morel Of Story
மாமன் மச்சான் இரண்டு பெயர், படிக்கட்டுகளே இல்லாத மலையில் ஏறி இறங்கிய அனுபவம் பற்றி இந்த கதை தொகுப்பு கூறுகிறது.
Equipment of Mountain Trip
நாங்க எங்களோட பாதுகாப்புக்காக ஒரு கத்தி எடுத்துட்டு போயிருந்தோம், ஒரு குச்சி எடுத்துட்டு போயிருந்தோம், குடிக்கிறதுக்கு தண்ணி எடுத்துட்டு போயிருந்தோம்.
மலையேற போறோம் அப்படின்றதுனால தண்ணி கொஞ்சம் அதிகமாகவே எடுத்துட்டு போயிருந்தோம். வேற எதுவும் எடுத்துட்டு போகலையா அப்படி நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது.
நாங்க ஒரு கடையில சாப்பாடு வாங்கிட்டு போகிறதா இருந்தோம். ஆனா சாப்பாடு வாங்கல. அதுக்கு பதிலா நாங்க சின்ன சின்ன சிறு பண்டம் (தீனி) வாங்கிட்டு போயிருந்தோம்.
அதுலையும் முக்கியமாக குச்சி, நாங்க மலைக்கு கீழே போய் ஒரு மரத்துல தான் உடைச்சோம். குச்சி எதற்காக நான் மலையேறும் போது நம்மள அச்சுறுத்த கூடிய பாம்பு இருக்கலாம்.
அந்த ஊர்வலம் கிட்ட இருந்து நம்மள பாதுகாக்குறதுக்காகவும், முள் புதர்களாக அகற்றுவதற்காகவும் நாங்க அந்த குச்சியை உடைக்க வேண்டியதா இருந்தது.
ஒரு பாட்டில்ல டீ வாங்கிட்டு போயிருந்தோம், அப்புறம் ஒரு தயிர் பாக்கெட்டும் வாங்கிட்டு போயிருந்தோம். தயிர் எதற்காக வெயிலோடு தாக்கத்தை குறைப்பதற்காக மோர் போட்டு குடிக்கலாம் அப்படிங்கறதுக்காக வாங்கிட்டு போயிருந்தோம்.
ஏன் சாப்பாடு வாங்கல அப்படின்னா நாங்க வாங்குன தின்பண்டுமே போதுமானது அப்படின்னு நாங்க நினைச்சோம். ஆனா என்ன நடந்துச்சுன்னா நாங்க ஏறி முடிகிறதுகுள்ளயே தீனி காலி ஆயிடுச்சு.
What Did We See There?
குளம்
முள் மற்றும் கல்
நரி இலந்தைப்பழம்
மலையின் ஒட்டுமொத்த பார்வை
சிக்கல்
How Was The Pool?
மலையில் ஏறுவதற்கு முன் நாங்கள் ஒரு குலத்தை கண்டோம். அது மிகவும் பெரிய குலமாக காணப்பட்டது. அது மிகவும் சுத்தமாக இருந்தது, அந்தக் குளத்தில் தலை பிரட்டை (தவலை) அதிகமாக காணப்பட்டது.
நாங்கள் அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொண்டோம். எவ்வாறு என்றால், முகம் கை கால்களை நன்றாக கழுவி அங்கு இருந்து தண்ணீர் வரக்கூடிய திசையை நோக்கி புறப்பட்டோம்.
தண்ணீர் மொத்தமாக ஓரிடத்தில் கூடியது. அந்த இடமானது ஏறி போன்ற ஒரு அமைப்பை கொண்டுள்ளது. மலையில் இருந்து வருகின்ற ஒட்டுமொத்த தண்ணீரும் அந்த ஏரியில் சேமிக்கப்படுகிறது.
ஒருவேளை ஊற்றாக கூட இருக்கலாம் என்ற கோணத்தில் ஊற்றி எங்கயும் இருக்கிறதா என தேடிப் பார்த்தோம். தேடியபோது அங்கு ஒரு விஷயத்தை கவனித்தோம்.
மலையானது கல்வர்களால் சுரண்டப்பட்டு கொண்டிருப்பதை நாங்கள் அங்கு பார்த்தோம். அரசாங்கத்தின் கவனக்குறைவால் இந்த மலையை சுரண்டும் இந்த திருடர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.
The Thorn And The Stone In Mountain
மலை ஏற ஆரம்பித்த சில நிமிடங்களில் பெரிய பெரிய பாறை தென்பட்டது, நாங்கள் அதை கடந்து சென்றோம். ஒரு சிறிய அச்சம் ஏற்பட்டது காரணம் என்றால், கல்லானது நம் மீது விழுந்து விடுமோ என்ற ஒரு சின்ன பயம்.
நான்தான் பயந்தவன் என்றால், என் கூட வந்தவர் அதைவிட ரொம்ப பயந்தவர் என்பதால் அவரை கவனமாக கூட்டி சென்றேன். பாறைகளின் அடியில் ஏதாவது கூடு அல்லது வளை ஏதாவது இருக்கிறதா என பார்த்துக் கொண்டே சென்றோம்.
நாங்கள் நினைத்தது போலவே பாறைகளின் அடியில் மழை இருந்தது, அந்த வலை பாம்புடையதா அல்லது முயலுடையதா என்று எங்களுக்கு தெரியவில்லை.
ஒரு சில புதர்களுக்கு இடையில் பறவைகளின் கூடுகளை கவனித்தோம் ஆனால், அதில் முட்டை எதுவும் இல்லை. சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு பேருமே கலைப்படைந்து விட்டோம்.
புத்துணர்ச்சிக்காக தேநீர் அருந்த தொடங்கினோம். சில நிமிடங்களில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். சிறிது தூரம் செல்ல செல்ல மீண்டும் மீண்டும் களைப்படைந்து, அங்குள்ள கல் மற்றும் மரங்களின் நிழல்களில் உட்கார ஆரம்பித்தோம்.
ஒரு கட்டத்தில் ஏறவே முடியவில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. மீண்டும் கீழே சென்றுவிடலாம் என்ற ஒரு எண்ணம் இரண்டு பேருக்குமே வந்து விட்டது. காரணம் மலையுடைய உயரமே ஆகும்.
என்ன செய்வதென்று தெரியாமல் தண்ணீரை அதிகளவு உட்கொண்டு மரத்தின் அடியில் படுத்து விட்டோம். ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின்,
How Was The Jackal Jujube Fruit In Mountain?
நரி இலந்தை பழம் மிகவும் சுவையான ஒரு இயற்கை பழம். இது கருப்பு நிறத்தில் காணப்படும் ஒரு மிகச் சிறிய பழம். இது மலை மற்றும் காடுகள் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.
நாங்கள் ஓய்வு எடுத்து செல்லும்போது, நிறைய இடங்களில் இந்த நரி இலந்தை பழம் மரம் தென்பட்டது. நாங்கள் போதும் என்ற அளவுக்கு இந்தப் பழங்களை பறித்து ருசித்தோம்.
பழங்களைப் பறித்து சாப்பிடும் பொழுது சிறிய வயதில் சாப்பிட்ட அனுபவம் ஞாபகம் வந்தது. சிறிய வயதில் சாப்பிட்டதால் சிறு பிள்ளையாகவே மாறிவிட்டேன்.
மேலே ஏறும்போது மீண்டும் பசிக்க துவங்கும், அதனால் நாங்கள் கொஞ்சம் நரியிழந்த பழங்களை பறித்து சட்டை பையில் போட்டுக் கொண்டோம். பழங்களை சாப்பிடும் போது பற்களின் இடையில் ஒட்டிக்கொண்ட பழத்தின் தோல், கண்களுக்கு மிகவும் அழகாக தெரிந்தது.
நாங்கள் கொஞ்சம் பழங்களை வீட்டுக்கு பறித்து செல்லலாம் என்ற எண்ணத்தில் கொஞ்சம் அதிகமாகவே பறித்து விட்டோம். மீண்டும் நடக்கத் துவங்கினோம். நடக்கும் போது, நான் படித்த எல்லா பழங்களையும் நானே சாப்பிட்டு விட்டேன். ஆனால், அவரிடம் இருக்கும் பழங்களை நான் கேட்டேன், ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.
ஒருவழியாக எல்லாம் தண்ணீரையும் குடித்து தீர்த்து விட்டோம், எல்லாப் பழங்கள் மற்றும் உணவுகள் அனைத்தையும் சாப்பிட்டு விட்டோம், இப்பொழுது எங்களுக்கு பசி மற்றும் தாகும் இரண்டும் இருந்த நிலையில் மலையையும் ஏறி விட்டோம்.
Overview Of Mountain
படிக்கட்டுகள் இல்லாத மலையில் ஒரு வழியாக ஏறி விட்டோம், மேலிருந்து எல்லாவற்றையும் கவனித்தோம்.
கழுகுகளுக்கு ஈடாக எல்லாவற்றையும் கவனிக்கும்.
பச்சை பசுமையாக விவசாயம் செய்து கொண்டு இருந்தனர் விவசாயிகள்.
மேலிருந்து பார்க்கும் போது சின்னஞ்சிறிய அளவுக்கு எல்லாம் சின்னதாக தெரிந்தது.
ஏறும்போது முகம் கால்களை கழுவியக் குளம் சின்ன தொட்டி போன்ற அமைப்புடன் காணப்பட்டது.
கீழிருந்த பாறைகளை விட மேலிருந்த பாறைகள் மிகவும் பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்பட்டது.
இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். அதிலும் என் மச்சான் புகைப்படங்களை எடுக்கச் சொல்லி ஒரு வழி ஆக்கிவிட்டார்.
புகைப்படங்களை எடுத்து முடித்த பின்னர் இருவரும் இயற்கையை மீண்டும் ரசிக்க தொடங்கி விட்டோம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மலையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம்.
அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது, என்னவென்றால் ஏறிய பாதை மறந்து விட்டது. வேறொரு வழியில் இறங்க முற்பட்டோம்.
Problem Of Mountain
ஏரியா பாதையை விட இறங்கும் பாதை மிகவும் செங்குத்தாக உள்ளது. செங்குத்தாக இருந்தாலும் பரவாயில்லை முள் புதர்களாக காட்சி அளிக்கிறது.
நாங்கள் கொண்டு வந்த குச்சியை பயன்படுத்தி புதர்களை அகற்றி, செங்குத்தாக இறங்கத் தொடங்கினோம்.
சிறுசிறு பாறைகள் எங்களை கீழ விழ செய்தன. நாங்கள் அந்த குறுகலான பாதையில் சென்றோம். ஒரு கட்டத்தில் பாதையே இல்லை, முழுவதும் முள் புதர்களாக இருந்தது.
வேறு வழி இல்லாமல் பின் சென்று, வேறு வழியில் மலையை சுற்றி சென்றோம். மழை மிகவும் பெரியதாக இருந்ததால் கால்கள் நடக்க முடியாமல், நடுங்க தொடங்கின.
இருவரும் ஒரு கட்டத்தில் கால்களின் வலியில் நடக்க முடியாமல் உட்கார்ந்து விட்டோம். மலையில் ஏறி இறங்க பொழுதாகி விட்டது அதனால், சூரியனின் வெளிச்சம் மறைய தொடங்கின.
இப்படியே சென்றால் இரவாகிவிடும். இருளில் எதுவும் தெரியாது நாம் இங்கே மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் மறுபடியும் எழுந்து நடக்க தொடங்கினோம்.
ஒருவழியாக ஏறிய பாதையை கண்டுபிடித்து விட்டோம், இனி வந்த பாதையிலேயே செல்லலாம் என்று எண்ணிய போது கால்களின் வலி அதிகரித்துக் கொண்டே போனது.
சூரியன் மறைந்து கொண்டே போனதால் வலியை பொருட்படுத்தாமல் நடந்து கொண்டே இருந்தோம். படிக்கட்டு இல்லாத பாதை என்பதால், அங்காங்கே பாதம் தரை புரண்டது.
அரை மணி நேரத்தில் முழு இரவு வந்துவிடும், இந்த நேரத்தில் தரையை வந்து அடைந்தோம்.
Conclusion
இந்த மழையை ஏறிய அனுபவம் மிகவும் புதியதாக இருந்தது. அதுவும் படிக்கட்டே இல்லாத மழை என்பதால் ஒரு புத்துணர்ச்சியின் கூடிய சந்தோஷம் கிடைத்தது. ஏறி முடித்தவுடன் இறங்க முடியாமல் தவித்த இந்த அனுபவத்தை நினைக்கும் பொழுது புன்னகைத்துப் போகிறேன். எல்லா மக்களாலயும் இந்த விஷயத்தை செய்து விட முடியாது காரணம், அது ஒவ்வொருவரின் எண்ணத்தை பொறுத்தது. உங்கள் எண்ணம் எவ்வாறு இருக்கிறதோ உங்கள் செயல்களும் அதுபோலத்தான் இருக்கும். இந்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தேன், பகிர்ந்து விட்டேன். நன்றி.
மேலும் படிக்க : No Tax Up To 12 Lakhs – 2025 Budget