கொக்கோகோலா Coca Cola என்பது ஒரு குளிர்பானம் ஆகும். இது கோடை கலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒன்றாகும். இதன் நிறம் கருப்பு. தாகம் என்றாலே கொக்கோகோலா தான் இந்த அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு குளிர்பானமாகும்.
இந்த கொக்கோகோலா நிறுவனமானது இந்த மாதிரி முறையை பின்பற்றி தான் அவர்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தினார். இது அவர்கள் நிறுவனம் வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்தது.
இந்த கோக்கோகோலாவானது எவ்வாறு உருவாக்கப்பட்டது எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டது என்பதை பின்வருமாறு காணலாம்.
Details Of Coca Cola
இந்த நிறுவனமானது சம்பாதிக்கும் பணத்தில் பத்து சதவீதம் அளவு பணம் , விளம்பரத்திற்கு மட்டுமே செலவு செய்கின்றன.
தொலைக்காட்சியில் காட்டக்கூடிய விளம்பரம் மட்டும் அல்லாமல், வாழ்க்கை முறையிலும் இந்த விளம்பரங்கள் நம்மை அறியாமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
கோக் ஸ்டூடியோ Playlist பத்தி உங்களுக்கு தெரியுமா? கொக்கோகோலா நிறுவனமானது பெரிய பெரிய பாடலாசிரியர்கள் மூலம் நல்ல நல்ல பாட்டுக்களை உருவாக்கி அந்த பாடல்களை கோக் ஸ்டூடியோ Playlist ல் பதிவேற்றம் செய்கின்றன.
மனிதர்கள் மற்றும் மக்கள்கள் நல்ல பாடலைக் கேட்க விரும்பும் பொழுது இந்த கோக் Playlist பரிந்துரை செய்யப்படுகின்றன. இவ்வாறாக பரிந்துரைக்கப்படும் பொழுது கோக் என்ற பெயர் விளம்பரப்படுத்தப்படுகிறது.
கொக்கோகோலா மூலம் விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களை எடுத்து அடுக்கிக் கொண்டே போனால் நிலா வரை செல்லலாம். அவ்வளவு கோக் பாட்டில்களை கொக்ககோலா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இந்த கொக்கோகோலா நிறுவனத்தின் ஒரு நாள் வருமானம் ஆனது 200 கோடியை தாண்டும். அந்த அளவுக்கு இந்த நிறுவனம் சம்பாதிக்கிறது.
இந்த கொக்கோகோலாவில் ஒரு அதிர்ச்சியான தகவல் என்றால் இந்த குளிர்பானம் முதன்முதலாக மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்டது.
How To Create Coca Cola
ஜான் பெப்பர்டன் என்பவர் மருந்து தயாரிப்பவர். இவர் 1886 களில் இந்த கோக்ககோலாவை கண்டுபிடிக்கிறார்.
1885 களில் கொக்கோகோலா என்ற மருந்தை கொண்டு வருகிறார். இந்த மருந்தானது தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என விளம்பரப்படுத்துகிறார். இந்த கோக்கோகோலாவானது மதுபானங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இது காலப்போக்கில் 1886களில் குளிர்பானமாக அறிவிக்கப்படுகிறது.
இந்த கோக்கோகோலாவானது எவ்வாறு குளிர்பானமாக அறிவிக்கப்படுகிறது என்றால், 1886களில் உள்ள அரசாங்கமானது மதுவிற்கு தடை போட்டு உள்ளது.
இந்த குளிர்பானத்திற்கான கலவைகளை ஜான் பெப்பர்டன் என்பவர் உருவாக்குகிறார். ஆனால் இந்த மருந்திற்கான பெயர் ஜான் பெப்பர்டன் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. மாறாக அவரின் கணக்குப்பிள்ளை ஆன பிராங்க் ராபிட்சன் என்பவர் அதற்கு கொக்கோகோலா என்ற பெயரை வைக்கிறார்.
பிராங்க் ராபிட்சன் என்பவர் பெயர் வைத்தது மட்டுமல்லாமல், அந்த பெயருக்கான வடிவத்தையும் அமைத்து தருகிறார்.
1986 மே மாதம் இந்த குளிர்பானமானது பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. யாராவது தலைவலி உடல்நிலை சரியில்லை போன்ற காரணங்களுக்காக வருபவர்களுக்கு இந்த குளிர்பானமானது பரிந்துரை செய்யப்படுகிறது.
Evaluation Of Coca Cola
ஜான் பெப்பர்டன் என்பவர் இந்த குளிர்பானமானது இந்த அளவிற்கு வளரும் என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார். இதன் காரணமாக விற்பனை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்து விடுகிறார்.
நாசா கிரிட்ச் கார்ட்லர் என்பவர் ஜான் பெப்பர்டன் இறந்த பிறகு அந்த கோக்கோகோலா பார்முலாவை 2300 அமெரிக்கன் டாலருக்கு வாங்குகிறார்.
கொக்கோகோலா ஃபார்முலாவின் இன்றைய மதிப்பு 270 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஆகும்.
நாசா கிரிப்ச் கார்ட்லர் என்பவர் இந்த பார்முலாவை பயன்படுத்தி கொக்கோகோலா நிறுவனத்தை தொடங்குகிறார். அவர் முந்தையதாகவே பல் மருத்துவமனை ஒன்றை வைத்துள்ளார். கூடுதலாக இந்த கொக்கோகோலா நிறுவனத்தையும் சேர்த்துக் கொள்கிறார்.
மக்கள் கொக்கோகோலாவை மருந்தாக பயன்படுத்தாமல் குளிர்பானமாக பயன்படுத்தும் போது அதிக லாபம் கிடைக்கிறது என்பதை கொக்கோகோலா நிர்வாணமானது கவனிக்கிறது. இதன் காரணமாக கொக்கோகோலாவை அதிக அளவு தயாரித்து மக்களுக்கு குளிர்பானமாக விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் இந்த கொக்கோகோலாவை அதிகமாக விரும்புவதால் எல்லா தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு, கொக்கோகோலா என்ற ஒற்றை நிறுவனத்தை மட்டும் பார்த்ததால், இந்த தொழில் அமோக வெற்றியை கொடுத்தது.
இதன் மூலம் கிடைத்த லாபத்தை வைத்து கொக்கோகோலா நிறுவனமானது செய்தித்தாள்களில் அவர்களது விளம்பரத்தை கொடுத்து விளம்பரப்படுத்தியது.
கொக்கோகோலாவில் போதை மருந்து இருப்பதை கண்டறிந்த மக்கள், 1990களில் இந்த குளிர் பானத்தை அருந்துவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதன் காரணமாக அந்த குளிர்பானத்தில் இருந்த மதுவை முற்றிலுமாக அகற்றி விட்டது அந்த நிறுவனம்.
கொக்கோகோலா நிறுவனம் கொக்கோகோலாவில் மதுவை நீக்கிய பிறகு, அரசாங்கம் ஆனது கொக்கோகோலாவில் உள்ள மதுவை நீக்க கட்டளையிடுகிறது.
இதை அறிந்த கொக்கோகோலா நிறுவனம், “நாங்கள் முந்தையதாகவே மதுவை நீக்கி விட்டோம்” என்ற அறிவிப்பை வெளியிடுகிறது.
ஜான் பெப்பர்டன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த கொக்கோகோலா பார்முலாவானது இன்றளவு வரை வெளிவராமல் இருக்கிறது.
1990களில் கொக்கோகோலா நிறுவனத்திற்கும் பெப்சி நிறுவனத்திற்கும் இடையே பெரிய போர் நடந்த காலம் அது.
Incident Of Coca Cola
ஒரு சமயம் கொக்கோகோலா நிறுவனத்தில் இருந்து ஊழியர் ஒருவர் பெப்சி நிறுவனத்திற்கு சென்று, என்னிடம் கொக்கோகோலா பார்முலா உள்ளது என்று தெரிவித்தார்.
இதன் காரணமாக பெப்சி நிறுவனமானது அதை பயன்படுத்திக் கொள்ளாது, கொக்கோகோலா நிறுவனத்திடம் சொல்லிவிட்டது. பார்முலாவை கொண்டு வந்த அந்த நபர் காவல்துறை மூலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெப்சி நிறுவனமானது தங்களுக்கு பார்முலா தெரிந்தும் அதை பயன்படுத்தாமல் இருப்பதன் காரணம், இரண்டு நிறுவனங்களுக்கு இடையே சண்டை இருந்தாலும் அதன் மூலம் இரண்டு பேருமே முன்னேறுவதால்தான்.
கொக்கோகோலா மற்றும் பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு இடையே நடக்கப்படும் சண்டையில் கொக்கோகோலா நிறுவனமானது தங்கள் குளிர்பானத்தின் சுவையை மாற்றுவதாக கூறிவிட்டது.
இதன் காரணமாக கொக்கோகோலா வாடிக்கையாளர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் கொக்கோகோலா நிறுவனத்தை முற்றுகையிடவும் வாய்ப்பு ஏற்பட்டது.
மீண்டும் கொக்கோகோலா நிறுவனமானது தங்களின் சுவையை மாற்றப் போவதில்லை என செய்தியை வெளியிட்டது.
இரண்டு நிறுவனத்திற்கும் போட்டி என்று இருந்த சமயங்களில் கொக்கோகோலா நிறுவனமானது அதிகப்படியான விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தது.
பெரிய பெரிய நடிகர்கள் மூலம் விளம்பரப்படுத்தினால் அதிக வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள் என்ற நோக்கத்தில், அதிகப்படியான நபர்களை பணம் கொடுத்து நடிக்க சொன்னது கொக்கோகோலா நிறுவனம்.
Problem And Solution Of Coca Cola
ஒரு நிறுவனம் அதிக வெற்றியை அடையும் பொழுது அதற்கான போலி உருவாக்கப்படுகிறது. இது காரணம்போன்ற கொக்கோகோலாவிற்கும் நடந்தது. கொக்கோகோலா போன்ற குளிர்பானங்களை மக்கள் அதிகம் விரும்புவதை தெரிந்த சில நிறுவனங்கள் கொக்கோகோலா போன்ற மாதிரியை உருவாக்க ஆரம்பித்தனர்.
இது கொக்கோகோலா நிறுவனத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் கொக்கோகோலா நிறுவனமானது அதிகப்படியான இழப்பை சந்தித்தது.
இந்த இழப்பை சரி செய்யும் விதமாக கொக்கோகோலா நிறுவனம் ஒரு முடிவு எடுத்தது, எல்லா பொலிகளும் தாங்கள் வைத்திருக்கும் பாட்டில்கள் போன்றே உள்ளது. எனவே இந்த பாட்டில்களின் நிலையை மாற்றினால் சரியாகிவிடும் என எண்ணியது அந்த நிறுவனம்.
சொன்னது போலவே பாட்டில்களின் வடிவத்தை மாற்றி புதிதாக உருவாக்கியது கொக்கோகோலா நிறுவனம்.
இந்த பாட்டிலின் வடிவத்தை யாரும் உருவாக்க கூடாது என்பதற்காக அந்த பாட்டிலின் வடிவத்திற்கு பேட்டன் வாங்கியது கொக்கோகோலா நிறுவனம். இதன் மூலம் எந்த நிறுவனமும் கொக்கோகோலாவின் பாட்டிலின் வடிவத்தை உருவாக்க முடியாமல் போனது.
இதை மீறி யாராவது அல்லது எந்த நிறுவனமானது இந்த வடிவத்தில் பாட்டிலை தயாரித்தால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
1990 களில் பெப்சி மற்றும் கொக்கோகோலா என்ற இரண்டு நிறுவனமும் இந்தியாவிற்குள் நுழைந்தது.
இந்தியாவில் இருக்கக்கூடிய பல குளிர்பானங்களின் தாக்கம் கொக்கோகோலா வை அதிகளவு பாதித்ததால் கொக்கோகோலா நிறுவனமானது பெரிய இழப்பை சந்தித்தது. இதன் காரணமாக இந்தியாவை விட்டு கொக்கோகோலா நிறுவனம் வெளியே சென்றது.
மீண்டும் கொக்கோகோலா நிறுவனம் சில தந்திரங்களை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்து பெரிய வளர்ச்சியை அடைந்தது. இதன் வெற்றிக்கு காரணம் கொக்கோகோலா என்ற அதன் வடிவம்.
Advertisement Of Coca Cola
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்கள் கூட இந்த கொக்கோகோலா விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
கொக்கோகோலா நிறுவனமானது தங்களின் குளிர்பானங்களை விற்பதை மட்டும் கொண்டிருக்காமல், மற்ற நிறுவனங்களை உளவு பார்க்கவும் ஆரம்பித்தது.
இதன் தொடர்ச்சியாக மற்ற நிறுவனங்களில் உருவாக்கப்படும் குளிர்பானங்களைப் போலவே கொக்கோகோலா நிறுவனமும் உருவாக்குகின்றது. சில சமயங்களில் அவர்கள் உருவாக்கிய அந்தக் குளிர்பானங்களை வாங்கவும் செய்கின்றது.
கொக்கோகோலா நிறுவனமானது ஒன்று அவர்களைப் போலவே உருவாக்குகிறது. மற்றொன்று அவர்கள் உருவாக்கியதை பணம் கொடுத்து வாங்குகிறது. மற்றும் மக்களின் மத்தியில் விளம்பரங்களை திணிக்கிறது. இவ்வாறாக செய்வதன் மூலம் கொக்கோகோலா பெரிய இடத்தை அடைகிறது.
எவ்வளவுதான் விளம்பரங்களை போட்டு நம்மை வாங்க வைத்தாலும் நாம் எல்லாவற்றையும் கடந்து போவதுதான் சரியாக இருக்கும்.
இந்த கோக்க கோலா நிறுவனத்திற்கு இன்னொரு முகம் இருக்கிறது . அதாவது சில தவறான உணவுப் பொருட்களை தயாரித்து அல்லது மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கெமிக்கல்களை உணவுகளில் சேர்த்து நம்மை ஈர்த்து இந்த உண்ண வைக்கிறார்கள்.
நிறைய நாடுகளில் இந்த கொக்கோகோலா நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் இவர்கள் மக்களுக்கு உணவை வியாபாரமாக ஆக்குவதால் ஆகும்.
Conclusion
என்னுடைய கருத்து என்னவென்றால், நான் நிறைய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மதுபானங்களை ருசித்து வருகிறேன். ஒவ்வொரு நாடுகளிலும் குளிர்பானமானது குளிர்பானமாகவே இருக்கிறது. ஆனால் ஒரு சில நாடுகளில் அது ஒரு வாழ்க்கை தீர்மானிக்க கடிய ஒன்றாக இருக்கிறது.
எவ்வளவு தான் மருந்தை உருவாக்கினாலும் உணவை மருந்தாக்கினாலும் வாழப் போவது என்னவோ என்பது வருடம் தான். ஒவ்வொரு மனிதரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்றால் நிறைய சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
நீங்கள் சாப்பிடுவது மட்டுமல்லாமல் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுங்கள் மற்றும் சாப்பிட கற்றுக் கொடுங்கள்.
தொலைக்காட்சி மற்றும் தொலைபேசியில் காட்டக்கூடிய விளம்பரங்கள் அவர்களின் லாபத்திற்காக மட்டுமே தானே தவிர உங்கள் நலனில் அவர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை.
ஆகவே நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு, உணவு தானா என எண்ணி சாப்பிடுங்கள். ஏனெனில் இப்பொழுது நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகள், உணவுகளை கிடையாது.
மேலும் படிக்க: How To Make Money On YouTube