மனிதர்கள் அதிகமாக பார்த்து நடுங்கக் கூடிய ஒன்றாக இருப்பது இந்த நல்ல பாம்பு( Cobra ) தான். இது பேர் மட்டும்தான் நல்லது இருக்கே தவிர, இந்த பாம்பு அதிக அளவு விஷத்தன்மை வாய்ந்தது.
இந்தப் பாம்புகளைப் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவலை தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.
தமிழ் திரையுலக திரைப்படங்களை உருவாக்கிய இயக்குனர்களை விட, இந்த நல்ல பாம்பானது அதிக படங்களை எடுத்துள்ளது என கூறலாம்.
ஏனெனில் இந்தப் பாம்பு அனைத்து படங்களிலும் நடித்துள்ளது. இந்தப் பாம்பு படம் எடுக்கும் வகையை சார்ந்தது.
Information Of Cobra
பாம்புகளுக்கே அரசனாக இருப்பது இந்த நல்ல பாம்பு தான். ஆனால், இந்த நல்ல பாம்புகளுக்கு அரசனாக இருக்கக்கூடிய ஒரு பாம்பு என்றால் அது ராஜ நாகம் தான்.
இந்தப் பாம்பு 10 முதல் 15 அடி வரை வளரக்கூடியது. இந்த ராஜநாகம் அதிக விஷத்தன்மை வாய்ந்த ஒரு ஊர்வன இனமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் அதிக அளவு பாம்பு கடியினால் பாதிக்கப்படுபவர்கள் கூறுவது என்னவென்றால் இந்த நல்ல பாம்பு தான் அதிக அளவு மனிதர்கள் வாழும் இடங்களில் இருப்பதனால் இது மக்களை அதிக அளவு கடிக்கக் கூடிய ஒரு உயிரினமாக இருக்கிறது.
இந்த பாம்பானது மனிதர்களை கடிப்பதனால் அவர்கள் இந்த பாம்பின் உணவா என்று கேட்டால் கிடையாது. மனிதர்கள் தவறுதலாக மிதிப்பதனால் இந்த பாம்பு தன்னை தாக்க வருபவர்கள் என புரிந்து கொண்டு கடித்து விடுகிறது.
பொதுவாக இந்த வகை பாம்புகளின் உணவு என்னவென்றால் எலி மற்றும் சிறு சிறு உயிரினம் மற்றும் பறவைகள் போன்றவை இது உணவாக எடுத்துக் கொள்கிறது.
பாம்புகள் பொதுவாகவே முட்டைகளை அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும் மற்றும் இறை இல்லாத பொழுது தன்னுடைய இனங்களைக் கூட வேட்டையாடி தின்னும் வகையை சார்ந்தது.
இந்த நல்ல பாம்பானது ஒரு இறையை குறி வைத்து விட்டது என்றால், அந்த இறையை குறி வத்து கொள்ளும் அளவுக்கு திறன் கொண்டது இந்த பாம்பு.
ஒரு இறையை கொல்வதற்கு முன் அது எவ்வாறு செல்லும், எந்த வழியாக வரும், எப்படி கொள்வது போன்ற எல்லா வழிகளையும் ஆராய்ந்த பிறகு வேட்டையாட ஆரம்பிக்கும்.
ஒருவேளை இறை மாட்டிக் கொண்டது என்றால் எல்லா விஷங்களையும் அது உடலில் செலுத்தாது, மாறாக அதன் எடை நிறைய பொறுத்து அந்த இறைக்கு தேவையான விஷத்தை மட்டும் செலுத்தி அதை உண்ணுமாம்.
ஒருவேளை இறை கடி வாங்கி தப்பித்து விட்டது என்றால், அதை விட்டு வேறொரு இறையை தேடாமல் கடிப்பட்ட இறை எங்காவது இறந்து கிடக்கும் என்பதை அறிந்து, அதன் வாசனையை பின்தொடர்ந்து சென்று அதனை உண்ணுமாம்.
Attacking
இந்தப் பாம்பு இனங்களில் ஆண் வகை சற்று பெரிதளமாகவும், பெண் இனம் சற்று சிறிதளமாகவும் இருக்கும். ஒரு சில பாம்பு இனங்கள் தங்கள் இறையை கடிக்காமல் எதிரியின் பார்வையை குறிவைத்து விஷயத்தை கக்கும்.
இந்த விஷம் கண்ணில் பட்டால் பார்வை பறிபோகும். சும்மாவா சொன்னாங்க “பாம்பை கண்டால் படையை நடுங்கும்” என்று.
இந்த வகை நல்ல பாம்புகள் எதிரிகளைக் கண்டவுடன் கடிக்காது. மாறாக,
முதலில் படம் எடுக்குமாம் இரண்டாவதாக சத்தமிட்டு எதிரியை துரத்த நினைக்குமாம், மூன்றாவதாக தான் கடிக்குமா அதிலும் சாதாரணமாக தான் கடிக்குமாம், விஷத்தை செலுத்தாதாம், மீறி எதிரி பாம்பை துன்புறுத்தினால் கடித்து விஷத்தை செலுத்துமாம்.
இதன் காரணமாகத்தான் இதற்கு நல்ல பாம்பு என்ற பெயர் வழங்கப்பட்டது என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இந்த நல்ல பாம்புகள் பொதுவாக வளையும் தன்மை கொண்டதாக இருக்கும். அதாவது, கழுத்து பகுதி மற்ற பகுதிகளை காட்டிலும் நன்கு வளையக் கூடியதாக இருக்கும் இதனால் தான் இந்த வளைவு பகுதி படம் எடுப்பது போன்ற அமைப்புடன் காணப்படுகிறது.
இந்தப் பாம்பு சாதாரண நிலையில் இருக்கும் போது இவ்வாறாக வளையாது, தனக்கு ஏதாவது ஒரு அச்சுறுத்தும் நிலை வரும் பொழுது மட்டுமே இது படம் எடுக்க துவங்கும்.
பாம்புகள் பொதுவாக வீடு கட்டாது. அது கரையான் புற்றுகளில் சென்று தனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
கரையான்களால் கட்டப்பட்ட இந்தப் புற்றை பாம்பானது கரையான்களை விரட்டிவிட்டு அந்தப் பாம்பு அந்த புற்றை எடுத்துக் கொள்ளுமாம்.
எதற்காக இந்த புற்றை தனக்கு சொந்தம் ஆக்கிக் கொள்கிறது என்றால் பாம்புகளின் முட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள ஒரு இடம் தேவைப்படுகிறது அது கரையான் புற்று சரியாக இருக்கும் என எடுத்துக் கொள்கிறது.
Cobra Relationship
சாரைப்பாம்புகளுடன் நல்ல பாம்பு இணை சேராது. இந்த இரண்டு பாம்புகளுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், இவை என்றும் ஒன்று சேராது.
இந்த நல்ல பாம்பின் இணை சேரும் காலம் வரும் பொழுது இந்த பாம்பானது பெண் பாம்பிடம் தனது செய்கைகளை வெளிப்படுத்துமாம்.
இந்த செய்கைகள் பெண் பாம்பிற்கு பிடிக்கும் பொழுது இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு இணை சேரும். அதிலும் பெண் பாம்பு, ஆண் பாம்பிடம் இருந்து வரும் விந்துவை சேகரித்துக் கொள்ளும்.
கால சூழல் மற்றும் இருப்பிடத்தை பொறுத்து இதை பயன்படுத்திக் கொண்டு பெண் பாம்பு கருத்தரிக்கும்.
இந்த நல்ல பாம்பு 10 முதல் 30 முட்டை வரை இடும். இடப்பட்ட முட்டைகளை பெண் பாம்பு அடைகாக்காது. மாறாக, அந்த முட்டைகளை பாதுகாக்கும்.
இந்த முட்டைகள் பொதுவாக தானாகவே பொறிக்கக்கூடிய திறன் கொண்டது. இந்த பாம்பு அந்த முட்டைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு எந்த உயிரினமும் கிட்ட நெருங்காதவாறு பாதுகாக்கும்.
இதற்காகத்தான் பாம்பு புற்றுகளை தேர்ந்தெடுக்கிறது. எந்த பாம்புகளுக்கும் நுகரக்கூடிய தன்மை கிடையாது. மாறாக, அது நீட்டக்கூடிய நாக்கை பயன்படுத்தி சுற்றுப்புற சூழல் மற்றும் புற சூழலில் உள்ள வாசனைகளை அறிந்து கொள்கிறது.
இந்தப் பாம்புகள் தனது தோலை உரித்து கொள்ளும் தன்மை கொண்டது.
இது தனது தோல்களை ஒழிக்காவிட்டால் நோய் தொற்று ஏற்படும் மற்றும் வேகமாக ஊர்வது போன்ற செயல்களில் ஈடுபட முடியாது, போன்ற காரணங்களுக்காக இது தனது தோலை உரித்து கொள்ளும்.
இந்த தோல்களை உரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல மிகவும் சிரமப்பட்டு தான் இந்த தோலை உரிக்கிறது அந்த பாம்பு.
Interesting Fact
பாம்பு பழிவாங்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு என்றாவது எழுந்ததுண்டா உங்களுக்கு?..
பாம்பு பழிவாங்காது மாறாக அது கடித்த இறையை பின் தொடர்ந்து வரும் எதற்காக என்றால் கடித்த இறை இறந்து விட்டதா, அதை உண்ணலாமா போன்ற காரணங்களுக்காக வாசனையை பின் தொடர்ந்து வரும்.
இது அதிக அளவு ஞாபக சக்தி கொண்ட ஒரு ஊர்வனையாக இருக்கிறது மற்றும் இது பழிவாங்குமா என்ற கேள்விக்கு அந்த அளவுக்கு ஞாபகம் வைத்து பழி வாங்கும் அளவிற்கு இதற்கு ஞாபக சக்தி கிடையாது.
பாம்புகளுக்கு பொதுவாகவே வேட்டையாடுவதற்கு பல் ஒரு காரணியாக பயன்படுகிறது மற்றும் இந்த பல் உடைந்து விட்டால் ஒன்று, இரண்டு வாரங்களில் தானாகவே சரியாகிவிடுமாம்.
இளம் பாம்புகளுக்கும் சரி அல்லது வயதான பாம்பாக இருந்தாலும் சரி பல் ஒன்று இரண்டு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.
Cobra Worker
இந்தியாவின் அந்தக் கால தொழில்களிள் ஒன்றான பாம்பாட்டிகள்.
இப்பொழுது இது அழிந்து கொண்டு வந்தாலும் அந்த காலத்தில் இந்தியாவை குறிப்பிடுவதற்காக இந்த பாம்பாட்டிகளை நிறைய படங்களில் பயன்படுத்தி உள்ளனர்.
பாம்பாட்டிகள் இந்த பாம்புகளின் பல்லை பிடுங்கி விட்டு அந்தப் பல் மீண்டும் வளர இரண்டு வாரங்கள் எடுக்கும் நிலையில் அந்தப் பாம்பை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.
பல் பிடுங்கப்பட்ட பாம்பு மிகவும் வலியுடன் இருக்கும் மற்றும் இந்த பல்லை பிடுங்குவதனால் அது இறந்து போக கூடவும் வாய்ப்பு உள்ளது.
1960 இலங்கைக்கு சென்ற ஒருவர் அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதைக் கண்டு அதிர்ச்சடைகிறார்.
நாய்கள் எவ்வாறாக காவலுக்கு பயன்படுத்துகின்றனரோ அதே போல பாம்புகளையும் வீட்டின் காவலாக அந்த பழங்குடியின மக்கள் வளர்த்து வருகின்றனர். இதை அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகை நல்ல பாம்புகள் வயது முதிர்ந்த காலங்களில் தனது விஷயங்களை சேர்த்து வைத்து நாகமணியாக மாற்றி தருவதாக சில கிராமங்களில் கூறப்பட்டுள்ளது.
இது முற்றிலும் தவறான ஒரு செய்தி. பாம்புகளால் அவ்வாறு ஒரு நாகரத்தினத்தை உருவாக்க முடியாது.
நீங்கள் கேள்விப்பட்டிருந்த அந்த செய்தி குறிப்பு அது பாம்பினுடைய எலும்பாக கூட இருக்கலாம், அது எல்லா பாம்புகள் இடத்திலும் இருக்காது ஒன்றாக இருக்கிறது.
இந்த செய்தி கிராமங்களில் அதிக அளவு பகிரப்பட்ட நிலையில் அந்த வகை பாம்புகள் அதிகளவு வேட்டையாடப்பட்டு அதன் இனங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
இலங்கை மற்றும் தமிழ்நாடு போன்ற பழங்குடியின மக்கள் பாம்புகளை தெய்வமாக வழிபட்டு கொண்டு வருகின்றன.
அக்காலத்தில் நாகர்கள் என்ற ஒரு இனத்தவர்கள் இருந்தனர் இவர்கள் நாகங்களை சிலைகள் மற்றும் கிரீடங்களில் பயன்படுத்தி வந்தனர்.
இதன் காரணமாக இந்த நாகங்கள் பழங்குடியினர் மக்களால் இன்று வரை தெய்வமாக வழிபட்டு வரப்படுகிறது.
Conclusion
நல்ல பாம்புகளைப் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் உண்மை தகவல்களை அறிந்து உள்ளீர்கள் என நாங்கள் நம்புகிறோம். இது போன்ற உண்மை சம்பவங்களை தெரிந்து கொள்ள மற்றவர்களிடத்தில் பகிரவும். நன்றி.
மேலும் படிக்க: The Life Of Middle Class