தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சார்பில் பரந்தூர்( Paranthur ) அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இந்த அறிக்கை 4.7.2025 அன்று வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையை முழுவதுமாக படிக்கவும்.
Paranthur Intro
பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து விட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், விவசாயிகளும் ஏகனாபுரம் கிராமத்தில் வருடகணக்காக போராடி வருகின்றன.
போராடும் மக்களை தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக, நான் சந்தித்த மறுநாளே பறந்து பகுதி மக்கள் பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைக்கப்படும் என்று, தமிழக அரசு சார்பாக ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வரவே வராது என்றோ அல்லது யாருக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் வேறு இடத்தில் அமைக்கப்படும் என்றோ எத்தகைய சரியான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மாறாக, பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசிப்பதால் அங்கு விமான நிலையம் அமைந்தால் பெரிய பாதிப்பு இருக்காது என்ற அர்த்தம் தோனிக்கும் ஒரு காரணமும், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
1005 குடும்பங்கள் மட்டுமின்றி இப்போதைய விமான நிலைய திட்டத்தால் பாதிப்புக்கு ஆளாகும், ஏறத்தாழ 15 ஆயிரம் பேரும் நமது மக்கள் தானே, என்கின்ற அக்கறையும் மனிதாபிமானமும் அற்றதாகவே அந்த அறிக்கை இருந்தது.
மேலும், பரந்தோரில் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவும் தமிழ்நாடு அரசுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வந்த நிலையில் பரந்தூர் பகுதியில் தெரிவு செய்து பரிந்துரைத்ததே தமிழ்நாடு அரசுதான் என்று,
ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் 27.2.2025 அன்று அளித்த பேட்டியில் வெளிப்படையாக அறிவித்தார். இது மக்களே மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Paranthur Village
விவசாய பெருங்குடி மக்களின் வீடுகளை, விவசாய நிலங்களை, வாழ்வாதாரங்களை மற்றும் பகுதியில் இருக்கும் இயற்கை நீர்நிலைகளை அழித்து அதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பையும் விளைவித்து,
அங்கு புதிய விமான நிலையம் அமைதியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் யாரால்? எதற்காக?.
மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட முதலமைச்சராக போராட்ட களத்தில் இருக்கும் மக்களின் பிரதிநிதிகளை, தாங்கள் இதுவரை நேரில் சந்திக்காதது ஏன்?
இது போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விறைவு படுத்தப்படும் என்ற அறிவிப்பே இருந்தது.
இது பரந்தூர் பகுதி மக்களுக்கு எதிரான அறிவிப்பே ஆகும். இந்த அறிவிப்பு நிதி அமைச்சரின் தனிப்பட்ட முடிவால் வந்த அறிவிப்பா அல்லது தாங்கள் அனுமதிக்கு பிறகான அறிவிப்பா என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.
பட்ஜெட்டுக்கு முன்பே தங்களின் நேரில் சந்திக்க வேண்டும் என, விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கண்ணீர் மல்க 3.3.25 தேதியிட்ட ஒரு கோரிக்கை வெளியிடப்பட்டிருந்தனர். அது தங்களின் பார்வைக்கு வந்ததா என்பது தெரியவில்லை.
ஒருவேளை தங்கள் பார்வைக்கு வந்ததும் அது குறித்த எந்த ஒரு கனிவான அணுகுமுறையும் தங்களிடமிருந்து வெளிப்படவில்லை.
இப்படியான சூழலில் பரந்தூர் விமான நிலைய திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டுறவு நிறுவனத்தை, தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் விரைவில் செய்யப்போகிறது எனவும் செய்தி வெளியாகி உள்ளது.
DMK Government
தமிழ்நாடு அரசு சார்பான முடிவுகளும் அறிவிப்புகளும் உங்களுக்கு தெரிந்துதான் எடுக்கப்படுகின்றனவா என்று சந்தேகம் எப்பொழுது இன்னும் வலுவடைந்ததை தவிர்க்க இயலவில்லை.
ஒருவேளை உங்களுக்கு தெரிந்து தான் நடக்கிறது எனில், உங்களின் மக்கள் நலன் சார்ந்து சிந்தனை குறித்து கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
விமான நிலையம் என்ற பெயரில் மட்டுமே, 20 கிராமங்களுக்கு உட்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. பின் அதை சுற்றி தங்கும் விடுதிகள் உணவு விடுதிகள் என கட்டடங்கள் கட்டப்படும்.
அதற்காக அந்தப் பகுதியை சுற்றி உள்ள மேலும் 20 கிராமங்கள் அழிக்கப்படும் என்ற அச்சம், அந்த மக்களிடம் இருக்கிறது. அதற்கு உங்களின் பதில் என்ன?.
இது பரந்தூர் பகுதி மக்கள் மீது ஏவப்பட்டுள்ள நிர்வாக ரீதியான அரசு பயங்கரவாதம் அல்லாமல் வேறென்ன?.
விவசாயிகள் காலம் காலமாக அவர்களே அடையாளமாக இருக்கும் பூர்வீக நிலங்களை பறித்து அழித்துவிட்டு, அதற்கு பதிலாக மாற்று இடத்தை அரசு தருவதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை அப்படி தருவதாக சொல்லும் மாற்று இடமும் விவசாயம் உட்பட எவ்வித வாழ்வாதாரத்திற்கும் உதவாத வெற்றிடமாக இருந்தால் நம் விவசாயிகளின் நிலைமை என்ன ஆவது?.
சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு ஆய்வுகள் இன்னும் முடியாத நிலையில் அவசர அவசரமாக நிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
ஏதேனும் ஒரு துறையில் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்தாலும், விமான நிலையம் அமைவது சந்தேகம் எனும் போது எந்த நம்பிக்கையில் மாநில அரசு நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுகிறது?
Vijay Sir Speech
கையகப்படுத்த போகும் நிலங்களில் 26.54 % நிலம் எனப்படும், நீர் தேங்கும் பகுதிகளாகும். இந்த நீர் வழித்தடங்கள் அளிக்கப்பட்டால் சென்னை மாநகரம் முழுவதும் உள்ளத்தில் முழுதும் அபாயம் இருப்பது அரசுக்கு தெரியுமா?.
கம்பன் கால்வாய், ஏகனாபுரம் ஓடை, நெல்வாய் ஏரி என ஏராளமான நீர்நிலைகள் உள்ள நிலப்பகுதி இது. இந்த நீர்நிலைகள் அளிக்கப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பது அரசின் சிந்தனைக்கு ஏன் வரவில்லை?
பரந்தூர் விமான நிலைய பகுதிகளின் நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக அரசியல் அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் IAS தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கையை, தமிழக அரசு பொதுவெளி வெளியிட மறுப்பது ஏன்? அது திட்டத்தின் மிக மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது.
இவை அனைத்தும் பரந்தூர் விவசாய பெருங்குடி மக்கள் அண்மையில் என்னை சந்தித்தபோது மன வேதனையுடன் பகிர்ந்து கொண்டு, நான் எழுப்பும் வினாக்கள்.
இந்த வேதனைகள் தொடரும்போது தற்போது பரந்தூர் விமான நிலைய பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கடந்த 25.6.25 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் அமைவதை ஏற்காமல் வருடக்கணக்காக போராடும் மக்களின் நிலங்களையும் சேர்த்து கையகப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்குரியது.
விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு அவர்களின் கண்களில் குத்துவதாகவே இந்த அரசாணை உள்ளது.
இவ்வளவு தூரம் வந்துவிட்ட நிலையிலும் இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. தங்களுக்கு உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த அக்கறை இருக்கிறது எனில், பரந்தூர் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று,
அவர்களை கண்துடைப்பிற்காக அதிகாரிகளையோ அல்லது அமைச்சர்களையோ வைத்து சந்திக்க செய்யாமல், தாங்களே நேரில் சந்தித்து பரந்தூரில் “விமான நிலையம் அமைக்கப்படாது” என்கிற வார்த்தை அவர்களுக்கு உடனடியாக தாங்கள் அளிக்கலாம்.
Conclution
ஆனால், அதற்கு மாறாக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு என்று எதுவுமே செய்யாமல் பறந்து பகுதி மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரிக்கப்படும் பட்சத்தில் என் மக்களுக்காக களத்தில் இருக்க வேண்டிய தமிழக வெற்றி கழகத்தின் கடமை என்பதால்,
நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு வந்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், தங்களை நேரில் சந்தித்து அவர்கள் சார்பாக முறையிடும் சூழல் உருவாகும்.
அதுமட்டுமல்லாமல் பரந்தூர் பகுதி மக்களின் நலனுக்காக மிகப்பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்ட போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய சூழலும் எழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் படிக்க: Politics New Update in Tamil