வணக்கம் நண்பர்களே, நாம இன்னைக்கு என்ன பாக்க போறோம் அப்படின்னா, நம்மள சுத்தி நம்மள சார்ந்து இருக்க சூழ்நிலைகளை Community பத்தி 20 உண்மைகளை உங்ககிட்ட நானும் சொல்ல போறேன். இந்த 20 உண்மைகளையும் நீங்க பின்பற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Reels Community Are Not Real Community
சமூக வலைதளங்களில் நீங்க பார்க்கக்கூடிய அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. சமூக வலைதளங்களில் வரக்கூடிய வீடியோக்களை பார்த்து அவர்களின் வாழ்க்கையும் நம்முடைய வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள்.
படத்தில் காட்டப்படும் அனைத்தும் கற்பனை தானே தவிர அது உண்மை அல்ல. சமூக வலைதளங்களில் வரும் படங்கள் எழுத்து மற்றும் இயக்கம் என்ற இரண்டு அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்க படுவீர்.
இதில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுடைய வாழ்க்கையும் நம்முடைய வாழ்க்கையும் ஒன்றுதான். இனி அவர்கள் போடும் போஸ்டை பார்த்து நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக தேவையில்லை.
Talking Is Better Than Texting
நீங்கள் ஒருவரிடம் நேரடியாக சென்று பேச முடியும் என்றால் தயவு செய்து நேரடியாக பொய் பேசுங்கள். உங்கள் தொலைபேசியின் மூலம் நீங்கள் அனுப்பப்படும் ஒவ்வொரு எழுத்துக்களிலும் உணர்ச்சிகள் கிடையாது. நீங்கள் எந்த நிலையில் என்ன சொல்கிறீர்கள் என்று நீங்கள் அனுப்பக்கூடிய அந்த நபருக்கு தெரியாது.
நீங்கள் கோபமாக பேசுகிறீர்களா, இல்லை மௌனமாக பேசுகிறீர்களா, அல்லது வெறுப்பாக பேசுகிறீர்களா என ஒரு எழுத்தை எழுதி அனுப்புவதன் மூலம் எதிரே இருப்பவர்களுக்கு நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது தெரிய வாய்ப்பு இல்லை. ஆதலால் நேரடியாக பேச வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நேரடியாக சென்று பேசவும்.
Toxic People And Pages
உங்கள் வெறுப்புகளை தூண்டக்கூடிய நபர்களோ அல்லது வலைதள பக்கம் ஏதாவது பின்பற்றுகிறீர்கள் என்றால் உடனே இப்பொழுது அந்தப் பக்கங்களை பின்தொடர்வதை நிறுத்துங்கள். ஏனென்றால் அது உங்களுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது.
உங்கள் வெறுப்புகளை தூண்டக்கூடிய நபர்களை நீங்கள் பின்பற்றும்பொழுது அவர்களின் எண்ணமும் உங்களின் எண்ணமும் ஒரு சேர இருக்குமேயானால் அது உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உங்களைச் சுற்றி உங்கள் மனதளவில் காயப்படுத்தக்கூடிய அல்லது உங்களின் வெறுப்புகளை தூண்டக்கூடிய நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும்.
Talk To Your Parents
உங்க பெற்றோர்கள் கிட்ட கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசுங்க. தினமும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது அல்லது ஒரு மணி நேரமாவது பேசுங்க. காலையிலும், மாலையிலும் “சென்று வருகிறேன்” “நான் வீட்டுக்கு வந்து விட்டேன்” என்று மட்டும் கூறாமல் ஒரு நண்பர்கள் போல பேசுங்க.
அதேபோல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் ஒரு நண்பர்கள் போல பழகுங்கள். இந்த மாதிரி பழகும் பொழுது உங்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
Be Mindful Of Commentary
நீங்கள் சமூக வலைதளங்களில் காட்டப்படும் போஸ்டர்களுக்கு பதில் அளிப்பதற்காக எழுதக்கூடிய ஒவ்வொரு எழுத்துக்களும் உங்கள் சந்ததியினர் பிறக்கும் வரைக்கும் வலைதளங்களில் அப்படியே இருக்கும். ஆதலால் எழுத்துக்களை எழுதும் முன் உங்கள் சந்ததியினரை அது பாதிக்காத வண்ணம் எழுதுமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நீங்கள் எழுதக்கூடிய எழுத்துக்கள் சமூக வலைதளங்களில் மற்றவரை காயப்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும்.
Community Read Books
புத்தகம் படியுங்கள். ஏனென்றால் அது படிக்கும் பொழுது அதில் உள்ள விஷயங்கள் நமக்கு புரியாது. ஒரு முழு புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது அதில் கிடைக்கக்கூடிய அறிவு மகத்துவமானது.
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், புத்தகம் படித்து அதில் உள்ள அறிவுகளை வளர்க்கும் பொழுது, அது நமக்கு ஒரு வகையில் நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறது.
ஒரு கடைக்குச் சென்று உங்களுக்கு பிடித்த வகையில் ஒரு புத்தகத்தை வாங்கி அந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடியுங்கள், உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும்.
Everyone’s Fail in Community
உங்களுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியை கொண்டாட நினைக்கிறீர்கள், அதேபோல உங்களுக்கு கிடைக்கக்கூடிய தோல்வியை நினைத்து வருந்துகிறீர்கள், இது எந்த வகையில் சரியாகும்.
எல்லோருக்கும் இங்கு தோல்விகள் இருக்கிறது. ஆனால் அதை எப்படி கையாளுவது என்று இங்கு நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. ஒரு குழந்தை எழுந்து நடப்பதில் இருந்து வெற்றி தோல்வி முடிவு செய்யப்படுகிறது.
Everything Online Is True
நீங்கள் இணையதளத்தில் பார்க்கக்கூடிய அல்லது படிக்கக்கூடிய விஷயங்கள் எல்லாமே உண்மை கிடையாது. ஒரு முறைக்கு நான்கு முறை படித்து தெரிந்து கொள்ளுங்கள். நிறைய சமூக வலைதளங்களில் காசு கொடுத்து பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் போலியே.
ஆதலால் படிக்கக் கூடிய நீங்கள் எது சரி எது தவறு என்று ஒரு முறைக்கு நான்கு முறை படித்து சரியானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
Surround With Positive Peoples
உங்களைச் சுற்றியுள்ள மக்கள் நல்லதை மட்டும் பேசுவார்கள் எனில் அவர்களை நீங்கள் நண்பர் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு நண்பர் ஆக்கிக் கொள்ளும் பொழுது அவர்களோடு சேர்ந்து நீங்களும் உயர்வீர்கள். ஒரு நாள் உங்கள் வெற்றியை நீங்கள் கொண்டாடுவதற்கு காரணம் உங்களை சுற்றி உள்ள நண்பர்களாக கூட இருக்கலாம்.
முடிந்தவரை உங்களைப் பற்றி இகழ் ஓரிடம் சிறிது தூரம் தள்ளியே இருங்கள்.
It’s Okay To Different Option
நீங்கள் பார்க்கும் படத்திலிருந்து உண்ணும் உணவு வரை உங்களுடைய சொந்த தேர்வாக இருக்க வேண்டும். 10 பேர் செய்யக்கூடிய ஒரு வேலையை நீங்களும் செய்ய வேண்டும் என்று எதுவும் கிடையாது.
மக்கள் அதிக அளவு தேர்வு செய்யக்கூடிய ஒரு விஷயம் அது தவறாக கூட இருக்கலாம். எனவே, நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஒன்று உங்களுக்கு பிடித்தவாறு இருந்தால் அதிலிருந்து உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்.
Learn To Laugh At Yourself
உங்களைப் பற்றி யாராவது தவறாக பேசுகிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்தால், அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து கொண்டு இருங்கள்.
உங்களுக்கு தெரியும் நீங்கள் தவறு செய்யவில்லை என்று, உங்களைப் பற்றி புரளி பேசும் உங்களுடன் இருக்கும் அவர்களுக்கு நீங்கள் புன்னகைத்து பதில் கூறுங்கள்.
Kindness Is Cool
அன்பு காட்டுங்கள். ரோட்டோரத்தில் பசிக்காக இயங்கும் உயிரினங்களுக்கு அன்பு காட்டுங்கள்.
உதவிக்காக இயங்கும் வயதானவர்களுக்கு உங்கள் அன்பை காட்டுங்கள்.
குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள், யார் என்று தெரியாமல் இருக்கும் ஒருவருக்கு அன்பு காட்டுங்கள்.
Like Doesn’t Define Your Courage
நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஒரு கருத்தை, எவ்வளவு நபர்கள் ஆதரிக்கிறார்கள், எவ்வளவு நபர்கள் எதிர்க்கிறார்கள் என்ற நிலையை முற்றிலுமாக விடுங்கள்.
இது உங்களின் விருப்பம் சார்ந்த விஷயம் எனவே யார் உங்களை ஆதரிக்கிறார்கள் எதிர்க்கிறார்கள் இரண்டுமே உங்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Celebrate Your Wins
நீங்கள் ஒரு பெரிய வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கு இடையில் நடக்கக்கூடிய சின்ன சின்ன வெற்றிகளை கொண்டாட தவறவிடுகிறார்கள்.
எனவே பெரிய வெற்றியை கொண்டாடுவது போல சிறிய வெற்றிகளையும் கொண்டாடுங்கள். இது உங்களை விரைவாக வெற்றி அடைய தூண்டும்.
Build A Crazy Network
உங்கள் கையில் இணையதளம் இருக்கிறது. இதை நல்ல வகையில் பயன்படுத்துங்கள். உலகத்தில் உள்ள எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒருவரிடம் நம்மால் தொடர்பு கொள்ள முடிகிறது இன்றைய உலகில். எனவே நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கான ஒரு உலகத்தை உருவாக்குங்கள், அது உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும்.
Hustle Don’t Worry
உங்கள் வேலைகளை முடிவெடுத்த பிறகு செய்ய ஆரம்பிங்கள். வேண்டா வெறுப்பாக செய்யும் வேலைகள் அனைத்தும் நாசமாக போகும்.
செய்யும் வேலைகளை பிடித்து செய்யுங்கள், அது வேலை செய்யும் ஆற்றலை அதிகரிக்கும். வேண்டா வெறுப்பாக செய்யும் வேலைகள் அடிக்கடி தவறுகளை உண்டாக்கும்.
Uninstall Unwanted Apps
உங்கள் தொலைபேசியில் இருக்கும் தேவையில்லாத அமைப்புகளை உங்கள் தொலைபேசியில் இருந்து உடனடியாக நீக்குங்கள்.
இது உங்களின் நேரத்தை அதிகளவு பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றன. அடுத்த முறை இந்த அமைப்பு உங்களுக்கு தேவைப்பட்டாலும் தேவை முடிந்த பிறகு உடனடியாக நீக்கி விடுங்கள்.
உதாரணமாக உங்கள் தொலைபேசியில் நீண்ட நாள் தேவையில்லாமல் இருக்கும் அமைப்புகள் அனைத்தும் நீக்குவதே உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்த சிறந்த வழி.
Don’t Let Your Ego
உங்களுக்குள் ஏற்படும் சண்டைகளை நீங்களே சரி செய்து கொள்ளுங்கள். அடுத்தவர்கள் மூலம் உங்கள் சண்டைகளை தீர்க்க விரும்பாதீர்கள்.
சண்டை நடந்து விட்டால் யாரும் முதலில் மன்னிப்பு கேட்பது என்ற எண்ணத்தை முதலில் அழித்து விடுங்கள்.
சண்டை என்பது தேவையில்லாத ஒன்று. அது உங்கள் மூலமாக கூட வந்திருக்கலாம் அதற்காக அவர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஒன்று எதுவும் இல்லை. தவறு கேட்பதில் ஒன்றும் தவறு இல்லை ஆகவே மன்னிப்பு கேளுங்கள்.
Stop Comparing Yourself To Others
மற்றவரை பார்த்து நீங்கள் அவர்களைப் போல இல்லை என்பதை ஒப்பிட வேண்டாம். ஏனெனில் அவர்களைப் போல ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை படாதீர்கள். அது அவர்களின் வாழ்க்கை இது உங்களின் வாழ்க்கை எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்காது.
அவர்களைப் போல இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். அதற்குத்தான் அவர்களே இருக்கிறார்களே. நீங்கள் உங்கள் வழியில் பயணியுங்கள் அது வெற்றியை நோக்கி உங்களை கொண்டு செல்லும்.
Observe Little Things
உங்களைச் சுற்றி இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை கவனியுங்கள். அதனால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லாமல் இருக்கலாம், இருப்பினும் கவனியுங்கள்.
நீங்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் இதை கவனியுங்கள் அது உங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும். இந்த தெளிவு நீங்க யார், எங்கு இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தும்.
Conclusion
என் வாழ்க்கையில் நடந்த இருபது சிறப்பு அம்சங்களை தொகுத்து கூறியிருக்கிறேன். இது என் வாழ்க்கையில் மட்டுமல்லாது உங்கள் வாழ்க்கையிலும் நடந்து இருக்கலாம், நடக்காமல் கூட இருக்கலாம். நடக்காத விஷயங்களை நடத்தி அழகு பாருங்கள் நன்றி.
மேலும் படிக்க: 20 Rupees Love Story