20 Rupees Love Story

 

     என் பேரு சந்தோஷ். இது என் வாழ்க்கையில நடந்த ஒரு Love கதை, கதைதான் கதையாகவே நினைச்சுக்கோங்க, அதுதான் நம்ம எல்லாருக்கும் நல்லது.

இந்த கதையில நடந்த சந்தோஷம், தூக்கம், ஆச்சரியப்பட வைக்கக்கூடிய சில சம்பவங்களும் நடந்துச்சு.  இந்த கதையை முழுசா படிச்சு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கோங்க…

Introduction

என் பேரு சந்தோஷ், நான் இருங்களூர் அப்படிங்கிற ஒரு ஊர்ல ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். என்னோட பெற்றோர் நான் சரியா படிக்கல அப்படின்னு, என்னை ஒரு விடுதியில் தங்கி படிக்க வச்சாங்க.

விடுதியில் தங்கி படிக்கிறதுனால நான் கொஞ்சம் நல்லாவே படிச்சேன். நான் இப்ப வரைக்கும் 90 சதவீதம் வருகைக்கு காரணம் அவதான்.

அவள் பெயர் அழகேஸ்வரி, பெயரில மட்டும் இல்ல நிஜத்திலும். ஒன்பதாம் வகுப்பு முடியும் வரை எனக்கு தெரியவில்லை அது காதல் என்று.

கோடை விடுமுறை எல்லாம் அவளை நினைக்காத நாட்களே இல்லை. கனவில் அவள் வரவேண்டும் என்பதற்காகவே நினைத்துக் கொண்டே இருந்தேன்.

நாட்கள் கழிந்தன, ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறையும் முடிந்து விட்டது. பள்ளிக்குச் செல்லாத நான் முதல்முறையாக பள்ளிக்கு முதல் ஆளாகச் சென்றேன், அவளின் வருகைக்காக. 

அவளைக் கண்ட அத்தருணம், என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக காதல் மலர்ந்தது.

அன்று பத்தாம் வகுப்பு ஒவ்வொரு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒரே பள்ளி ஒரே வகுப்பாக இருந்தாலும், பிரிவு வெவ்வேறு ஆகிவிட்டது. பக்கத்து அறை என்பதால் அடிக்கடி செல்வேன், அழகேஸ்வரியை காண. நாட்கள் நகர்ந்தன.

How To Find Love Number

ஒரு நாள் காலை வேளையில், மாணவர்கள் அனைவரும் அவரவர் பள்ளி அறைக்குச் சென்று கொண்டிருந்தனர். நான் தலைமை ஆசிரியர் அழைக்க சென்று வருகை பதிவேடு எடுக்கச் சென்றேன்.

அப்போது, அங்கிருந்த அழகேஸ்வரியின் வருகை பதிவேட்டை உற்று நோக்கினேன். வருகை பதிவேட்டில் இருந்த அவளின் தொலைபேசி எண்ணையும், அவளின் பிறந்த தேதியையும் பார்த்து விட்டேன்.

முதன் முதலில் அதிர்ச்சி அடைந்த நாள் அது. தொலைபேசி எண்ணை குறித்துக் கொண்ட அடுத்த தருணம் அவளின் பிறந்த தேதியை பார்க்கும் போது தான் எனக்குத் தெரிய வந்தது, அவளும் நானும் ஒரே தேதிகளில் பிறந்தோம் என்று.

உடம்பெல்லாம் புல்லரித்து போனதென்று ஏனெனில், நான் பிறந்த தேதியில் அவள் பிறந்ததை கண்டு அதிர்ந்து போனேன். அவளின் மேல் இருந்த ஈர்ப்பு அன்று சிறிது அதிகமாகிவிட்டது.

அவளிடம் என் மனதில் உள்ள காதலை கூற விரும்பினேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால், அவளுக்கு என்னை விட படிப்பு தான் முக்கியம் என்று இருந்து விட்டால்.

எல்லாம் வெறும் பார்வையிலே போய் கொண்டிருந்தது. அவள் என்னை பார்க்கும் பார்வை, ஒரு வேண்டாததை பார்ப்பது போல பார்ப்பால். காரணம், நான் அவளின் அளவுக்கு அழகில்லை.

How To Propose In Girl

First Attempt Of Love

எண்ணிலடங்கா காதல் இருப்பினும், அவளிடம் என் காதலை கூற நினைக்கும் போதெல்லாம், அவளின் ஏளனமான பார்வை என்னை நெருங்க விடவில்லை.

விடுதியில் நான் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் பெற்றோர் எனக்கு கொடுத்த 20 ரூபாய் நோட்டை எடுத்து, என் பெயரையும் அவளின் பெயரையும் எழுதி வைத்தேன்.

அந்த இருபது ரூபாய் நோட்டை, அவளிடம் எப்படியாவது கொடுத்து என் காதலை கூற நினைத்தேன். ஆனால் எனக்குள் இருந்த பயம் அவளிடம் கொடுக்க முடியாமல் போனது.

அந்த இருபது ரூபாய் நோட்டை விடுதியில் பத்திரப்படுத்தி வைத்து விட்டேன். நாட்கள் சென்று கொண்டே இருந்தன. காலாண்டு தேர்வு முடிந்து, பத்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Second attempt Of Love

நான் அவளை விரும்புகிறேன் என்று எப்படி சொல்வது என்று தெரியாமல், அவளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள நினைத்தேன்.

பள்ளிக்கு வெளியில் உள்ள ஒரு கடையில், ரூபாய் நாணயத்தைக் கொண்டு பேசக்கூடிய அந்த டெலிபோனில் அவளை அழைத்தேன்.

ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அவர்களிடம் “அழகேஸ்வரி இல்லையா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அழகேஸ்வரி தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள்.

பயத்தில் தொடர்பை துண்டித்து விட்டேன். இரண்டாவது வாய்ப்பையும் தவற விட்டு விட்டேன்.

Problem Of Hostel

ஒரு நாள் காலை வேளையில் விடுதி காப்பாளர் அவர்களின் தொலைபேசி திருடு போய்விட்டது. அந்த சமயம் நான் அந்த வழியாக சென்றதால், விடுதியில் உள்ள நபர்கள் என்னை கை காட்டி விட்டார்கள்.

இதன் மூலம் மன உளைச்சலுக்கு ஆளான நான் விடுதியில் இருந்து விடை பெற்று, இருங்கலூரில் உள்ள என் சித்தி வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது, அழகேஸ்வரி என் சித்து வீட்டுக்கு பக்கத்து வீடு என்று.

பள்ளியில் மட்டும் பார்த்த அவளை, இப்பொழுது வீட்டில் இருந்தபடியே நான் பார்க்கிறேன். நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்.

ஆனால், அவள் என்னை வெறுத்துக் கொண்டே தான் இருக்கிறார். ஏன் வெறுக்கிறாய் என்ற காரணம் எனக்கு அப்போது தெரியவில்லை. நானும் எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் அவளை நினைத்துக் கொண்டு இருந்தேன்.

அடுத்த நாள் காலையில் இரண்டு பேரும் பள்ளிக்குச் செல்ல புறப்பட்டோம். அவள் முன்னே செல்ல நான் பின்னே போக, நான் அவளை ரசித்துக் கொண்டே தான் இருந்தேன்.

என்ன காரணம் என்று எனக்குப் புரியவே இல்லை. காலம் பதில் சொல்லும் என்று காத்திருந்தேன்.

Sighting With Love

தினமும் காலை மாலை இரு வேளையும் அவள் தண்ணீர் எடுக்க வருவாள். நான் வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு அவளை ரசித்து கொண்டே இருந்தேன். ஒரு கணம் என் சித்தி நான் அவளை பார்ப்பதை பார்த்து விட்டாள்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த சித்தி என்னிடம் கண்டித்தார், அவளை தொந்தரவு செய்யாதே அது நல்ல ஆண் மகனுக்கு அழகில்லை என்று. ஏன் சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.

ஒருவேளை அவள் எதுவும் என் சித்தியிடம் சொல்லி இருப்பாலோ என்ற அச்சத்தில் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். மார்ச் பத்தாம் நாள், என் வாழ்க்கையின் ஒரு இன்ப நாள் என்றால் அது மார்ச் 10 ஆம் நாள் தான்.

Birthday Celebration

எனக்கு பிறந்தநாள் வந்தது, அவளுக்கும் தான். கடைக்குச் சென்று மிட்டாய் வாங்கி கொண்டு பள்ளிக்குச் சென்றேன். கவரைப் பிரித்து முதல் மிட்டாயை அவளுக்கு கொடுக்க சென்றேன். மிட்டாயை அவளுக்கு கொடுத்தேன், எடுத்துக்கொண்டால்.

ஒவ்வொரு வகுப்பாக சென்று ஆசிரியர்களுக்கு மிட்டாயை கொடுத்துவிட்டு வகுப்பறையில் சென்று அமர்ந்தேன். அவள் எதுவும் மிட்டாய் வாங்கவில்லை, குடும்ப சூழ்நிலை காரணமாக.

பள்ளி முடிந்தது இருவரும் வீட்டுக்குச் சென்றோம். திருவிளக்கு வழியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது அழகிஸ்வரி நான் படிக்கும் இடத்திற்கு வந்து மிட்டாய் கொடுத்தால்.

மிட்டாய் எடுப்பதற்கு முன் அவளுக்கு கை கொடுத்து வாழ்த்து சொன்னேன். பிறகு மிட்டாய் எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் ஏளனமாக பார்த்த முகத்தில், புதிதாக ஒரு புன்னகை தோன்றியது.

20 ரூபாய் நோட்டை புத்தகத்தின் இடையில் வைத்து மூடிவிட்டேன். அவள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எல்லோரும் தயாராகி கொண்டிருந்தனர்.

கேக் வெட்ட என்னை அழைத்தால், நானும் சென்றேன் இருவருக்கும் பிறந்த நாள் என்பதால், ஒன்றாக கேக் வெட்ட கூறுவார்கள் என்று நினைத்தேன். அது தவறாகி போனது. அவள் கேக் வெட்டும்போது என்னை பார்த்துக் கொண்டே வெட்டினால்.

என் முகத்தில் கவலையுடன் கூடிய புன்னகை மட்டுமே இருந்தது.

Third Attempt Of Love

பக்கத்து வீட்டின் வெளியில் அவள் நின்று கொண்டு இருக்க, நான் என் சித்தி வீட்டில் இருந்து மறைமுகமாக அவளைப் பார்த்து பாடத் தொடங்கினேன்.

பாட்டு பாடிக்கொண்டே இருக்கும் போது இடையில் அவள் வீட்டிற்குள் நுழைந்தாள். மறுபடியும் வாசப்படியில் நின்று கொண்டு நான் பாடுவதை கவனித்தால்.

அவள் கவனிப்பதை கண்டு நான் பாடுவதை நிறுத்தாமல் பாடிக் கொண்டே இருந்தேன். சட்டென்று அவளுக்கு பதில் அவள் அக்கா அங்கு நின்று கொண்டிருந்தாள்.

பாடும் பாட்டின் சத்தத்தை மெதுவாக குறைத்து அங்கிருந்து ஓடி விட்டேன். மூன்றாவது முறையும் தோல்வியடைந்து விட்டேன்

மூன்று முறை தோல்வி அடைந்தாலும் அவள் மனதில் ஏதோ ஒரு இடத்தில் நான் அவளை விரும்புகிறேன் என்று அவளுக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன்.

எல்லாம் வெறும் பார்வையிலேயே சென்று கொண்டிருந்தன. இப்படியே வருடம் கழிந்தன. நான் என் சொந்த ஊரான எதுமலைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது.

End Of Twenty Rupees

நோட்டுக்கு இடையில் இருந்த அந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்து எங்கள் சித்தி வீட்டு கதவில் ஒட்டி விட்டு அங்கிருந்து என் சொந்த ஊருக்கு புறப்பட்டேன். கண்களின் ஓரங்களில் கண்ணீர் தேங்கி நின்று கொண்டது.

அவள் வீட்டைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றேன். வீட்டிற்கு வந்தவுடன் சித்தி தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டேன், நான் நல்லபடியாக ஊருக்கு வந்து விட்டேன் என்று கூற.

சித்தி என்னிடம் ஒன்று கேட்டார் என்னவென்றால், ஏன் இருபது ரூபாய் நோட்டை கதவில் ஒட்டினாய் என்று, நான் காதலை மறைத்து, என் ஞாபகமாய் இருக்கட்டும் என்று ஒட்டினேன் என்று கூறிவிட்டேன்.

சித்திரம் பேசிக் கொண்டிருக்கும்போது அழகேஸ்வரியை பற்றிய ஒன்று கூறினார். என்னவென்றால், அழகேஸ்வரி உனக்கு தங்கச்சி முறை என்று சொன்னார்.

இவ்வளவு நாள் ஒரு தங்கச்சியின் பின்னாடியா நான் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன் என்று யோசித்தேன்.

Conclusion

எல்லோருக்கும் காதல் அழகானது. ஆனால், என் வாழ்க்கையில் அது அரிதானது. நான் எதிர்பார்க்கவே இல்லை அவள் என் தங்கை முறை என்று. அவள் ஏன் என்னை மறுத்தால் என்று இப்போதுதான் எனக்கு தெரிகிறது. இதில் ஒரு நல்லது என்றால், நான் அவளிடம் என் காதலை கூறவில்லை என்பதை. இரண்டு பேருக்கும் சம்மதம் என்ற போதிலும் இந்த அண்ணன் தங்கை முறை எங்களை சேரவே விடவில்லை.  ஆரம்பத்தில் கூறியது போல காதல் இருவருக்கும் வந்தால் தான் காதலா என்ன, ஒருவருக்கு மட்டும் வருவது கூட காதல் தான், அது ஒரு தலை காதலாக கூட இருக்கலாம். நன்றி…

மேலும் படிக்க: Explain Mountain Trip Without Steps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *