No Tax Up To 12 Lakhs – 2025 Budget

உலக சதுரங்க அட்டகாரர் ஆன குகேஷ்க்கு 15% Tax என்று கூறி உள்ள நிலையில், இப்பொழுது பன்னிரெண்டு லட்சம் வரை வரி இல்லை என்பது பற்றி புதுசா ஒரு தகவல் வந்திருக்கு, யூனியன் பட்ஜெட் வேற வர போகுது, நிர்மலா சீதாராமன் வெச்சு செய்ய போகுதுனு நெனச்சேன். ஆனா டுவிஸ்ட் என்னனா, படித்து தெரிந்து கொள்ளவும்.

What is Tax?

வரி என்பது அரசாங்கத்துக்கு நாம் கொடுக்க கூடிய நன் கொடையாகும். இது ஒரு குடிமகன் விருப்பத்தில் அல்லாமல், அரசாங்கத்தின் கட்டாயத்தில் ஒவ்வொரு குடிமகன் மீதும் திணிக்க படுவதாகும்.

Black Money:

கருப்பு பணம் என்பது, அரசாங்கத்துக்கு வரி கட்டாமல் வைத்திருக்க கூடிய பணம் கருப்பு பணம் என அழைக்கப்படுகிறது. இது சட்டப்படி தவறு.

White Money:

ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட சதவீதம் வரி கூறப்பட்டு இருக்கும். அரசாங்கத்துக்கு அந்த வரி கட்டி இருப்பின், மீதம் உள்ள உங்கள் பணம் (White Money) உங்களுக்கே சொந்தம் என கூறப்படுகிறது.

Explain GST

GST அப்படினா நாம வாங்குற பொருளுக்கும், நமக்கு கிடைக்கிற சேவைக்கும் நாம கொடுக்கக்கூடிய வரிகள் ஜிஎஸ்டினு சொல்லுவாங்க. இந்த ஜிஎஸ்டிய நாம இரண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு நேரடி வரி மற்றொன்று மறைமுக வரி.

Direct Tax

நான் வந்து சம்பாதிக்கிறேன் அதுக்கான வரி நான் கட்டுறேன், அது மட்டும் இல்லாம தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது அதுக்கு தனியா வரி கட்டுறேன். இது வந்து நேரடி வரி அப்படின்னு சொல்றாங்க.

Indirect Tax

மறைமுக வரி அப்படின்னா நான் Tax கட்ட மாட்டேன் ஆனால், நான் வாங்குற பொருளுக்காக மத்தவங்க வரி கட்டுவாங்க. இது மறைமுக வரின்னு சொல்லுவாங்க. உதாரணமா CGST, SGST இதெல்லாம் சொல்லுவாங்க, இதெல்லாம் தான் மறைமுக வரி.

How To Calculate Tax

உங்களுடைய வரியை கணக்கிடுவது மிகவும் எளிது.கீழ ஒரு லிங்க் கொடுத்து இருக்கேன். இந்த லிங்கை கிளிக் பண்ணி உங்களுடைய ஆண்டு வருமானத்தை சுலபமா கணக்கிடலாம். எப்படி கணக்கிடுவது அப்படின்னா,

முதலில் உங்களுடைய ஆண்டு வருமானம் எவ்வளவு என்று குறிப்பிடவும்.

இரண்டாவது எந்த வருடத்தில் இருந்து எந்த வருடத்திற்குள் என்ற ஆண்டை குறிப்பிடவும்.

மூன்றாவதாக உங்களுடைய செலவுகளை குறிப்பிடவும், பிறகு கணக்கீடு பொத்தானை அழுத்தவும்.
Click Here

Nirmala Seetha Raman Details

வயது: 18 August 1959 (65),

ஊர் : மதுரை,

படிப்பு: ஜவர்ஹலால் நேரு யூனிவெர்சிட்டி (1984),

வேலை: Minister of Finance of India since 2019,

கட்சி: பாரதிய ஜனதா கட்சி.

New Tax Regime

மேல இருக்க அட்டவணையை தெளிவா கீழ எழுதி இருக்கேன், முழுவதுமா படிச்சு பாருங்க.

  • ஒரு வருடத்தின், ஆண்டு வருமானம் நான்கு லட்சங்களை விட குறைவாக இருந்தால் அவர் வரி செலுத்த தேவை இல்லை.
  • அவரின் ஆண்டு வருமானம், நான்கு லட்சத்துக்கு மேலாகவும், எட்டு லட்சத்துக்கு கீழாகவும் இருந்தால், அவர் ஐந்து சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
  • அவரின் ஆண்டு வருமானம் எட்டு லட்சத்துக்கு மேலாகவும், பன்னிரெண்டு லட்சத்துக்கு கீழாகவும் இருந்தால், அவர் பத்து சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
  • அவரின் ஆண்டு வருமானம் பன்னிரெண்டு லட்சத்துக்கு மேலாகவும் பதினாறு லட்சத்துக்கு கீழாகவும் இருந்தால், அவர் பதினைந்து சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
  • அவரின் ஆண்டு வருமானம் பதினாறு லட்சத்துக்கு மேலாகவும் இருபது லட்சத்துக்கு கீழாகவும் இருந்தால் அவர் இருபது சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
  • அவரின் ஆண்டு வருமானம் இருபது லட்சத்துக்கு மேலாகவும் இருபத்தினான்கு லட்சத்துக்கு கீழாகவும் இருந்தால் அவர் இருபத்தி ஐந்து சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
  • அவரின் ஆண்டு வருமானம் இருபத்தி நான்கு லட்சத்துக்கு மேலாக இருக்கு பட்சத்தில், அவர் முப்பது சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.

Black hole Of  New Regime

அரசாங்கம் வந்து எல்லாரையும் புதிய regimeக்கு தள்ளுகிறது. எந்த மாதிரியெல்லாம் நமக்கு பாதிப்பு அப்படினா, அதிக ஆஃபர் கொடுத்து எல்லாரையும் புதிய Regimeக்கு கொண்டு வந்துட்டு பழைய Regime வந்து இல்லாம பண்ற மாதிரி.

நீங்க இப்ப வந்திருக்க புதிய Regimeமையும், பழைய Regimeமையும் ஒப்பிட்டு பாருங்க.

பழைய Regimeல Standard Deduction போக மீதமுள்ள பணத்தின் மதிப்பும், புதிய Regimeல் உள்ள Standard Detection போக மீதமுள்ள பணத்தின் மதிப்பையும் ஒப்பிட்டு பார்க்கும்போது பழைய Regime சிறந்தது.

அதிக ஆஃபர் கொடுக்கப்படும் போது மக்கள் New Regimeக்கு மாற்றப்படுவீர்கள். அதிக அளவு வாடிக்கையாளர்கள் புதிய Regimeல் இருக்கப்படும் பொழுது பழைய Regime ஆனது முற்றிலும் அகற்றப்படும்.

ஒருவர் அவருக்கு இன்ஷூரன்ஸ் தேவைப்படவில்லை என்றாலும் இன்சூரன்ஸ் எடுப்பதற்கான காரணம் Income Tax ல் Deduction செய்வதற்காக கூட இருக்கலாம்.

இதன் மூலம் தேவைப்படாத ஒன்று தேவைப்படுகிறது. அதாவது நமக்கு தேவைப்படாத சேவையை நம்மை அறியாமலே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

Tax Losses And Profit

Profit

சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய Regime 2025, ஒரு வர பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Capital Gain வரி செலுத்துபவர்கள் தனியாக கணக்கிட வேண்டும்.

இது லாங் டேர்ம் மற்றும் ஷார்ட் டேர்ம் இரண்டுக்கும் பொருந்தும்.

Losses

தோராயமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்கு இழப்பு என்றாலும், இந்த இழப்பை ஈடு செய்ய ஒரு வழி உண்டு. நடுத்தர மக்கள் அதிக பணப்புழக்கம் இருப்பின், அதன் மூலம் கிடைக்கும் பண வருவாயை அரசாங்கம் எடுத்து கொள்ளும்.

அதாவது மறைமுகமாக வருவாய் ஈட்டுகிறது.

Updated IT Return

வருமான வரி செலுத்தும் போது ஏற்படும் தவறுகளை சரி செய்ய இரண்டு ஆண்டுகள் ஆகும். ஆனால், புதிய Regime பொறுத்த வரையில் இது நான்கு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் அதிக அளவில் நேரம் மற்றும் ஓய்வு எடுக்க வாய்ப்பு என்ற நெகிழ்ச்சி கிடைத்துள்ளது.

Reason Of Tax Decrease

அரசாங்கத்துக்கு இழப்பு இருப்பின் ஏன் இதை அரசாங்கம் செய்ய நினைக்கிறது?…

முதலாவதாக நாடு வளர்ச்சி அடைய ஒரு காரணியாக அமைகி்றது.

இரண்டாதாக வலைதளங்களில் தேடி வாங்கும் பொருட்கள் மூலமாகவும் வருவாய் பெருக்குகிறது.

Reject Of Tax

ஒரு சில சமயங்களில் மனிதன் மறதியில் வரி செலுத்தாமல் இருப்பது உண்டு. ஆனால், வரி கட்ட முடிந்தும் கட்டாமல் வைத்திருக்க என்ன காரணம் இருக்க முடியும்,

தனிப்பட்ட ஒருவரின் ஆசை,

நான் உழைக்கும் பணம் நான் மட்டுமே செலவு செய்யும் எண்ணம்,

அரசாங்கத்தின் மீது உள்ள வெறுப்பு,

சூழ்நிலை காரணமாக கூட இருக்கலாம். அதாவது அவர் வரி கட்டவில்லை என்றால், நானும் வரி கட்ட மாட்டேன் என்ற காரணமாக கூட இருக்கலாம்.

Top 20 Update

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 20 தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. ஆண்டு வருமானம் 12 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி செலுத்து தேவையில்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் இன்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  3. வீட்டு வாடகைக்காண வரிக்கழிவு 2.4 லட்சத்திலிருந்து 6 இலட்சம் ஆக உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  4. மூத்த குடிமக்களுக்கு வட்டி வங்கி வருவாயில் ஒரு லட்சம் வரை இருந்தால் வருமான வரி கிடையாது என்று மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  5. அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
  6. விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் அட்டைகளுக்கான உச்சவரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பானது இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
  7. புற்றுநோய் உள்ளிட 36 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கானது அழிக்கப்பட்டு இருப்பதாக அந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  8. லித்தியம் பேட்டரி கோபால்ட் சிங்க் உள்ளிட்ட 12 அரிய வகை கனிமங்களுக்கு வரிவிலக்கானது அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  9. லித்தியம் பேட்டரிக்கு முழு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் எலக்ட்ரிக் வாகனங்கள், செல்போன்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
  10. டிவி பேனல்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  11. நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் 40000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது.
  12. நாட்டில் உள்ள 50 முக்கிய சுற்றுலா தளங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளது.
  13. உதான் 2.0 திட்டத்தின் மூலம் 120 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்று வெளியிடப்பட்டிருக்கிறது.
  14. அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  15. Swiggy, Zomato பணியாளர்கள் ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டையானது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  16. பட்டியலின பெண்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு கோடி கடன் உதவியானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  17. உலகளவில் பொம்மை உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற தற்போது புதிய திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
  18. மாநிலங்களுக்கு ஒன்று புள்ளி ஐந்து சூழியம் லட்சம் கோடி வட்டி இல்லா கடனானது வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  19. பீகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய நிறுவனம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  20. பதிவு செய்யப்பட்ட சிறு தொழில்துறையினருக்கு 5 லட்சம் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் அவர்கள் 2025 பட்ஜெட்டில், இந்த 20 அப்டேட்களை தெரிவித்துள்ளார்.

Conclusion

பொதுவா நான் என்ன சொல்ல வரேன் அப்படின்னா, காசு அதிகமா இருக்கவங்க, இந்த நியூ Regime சரி இல்லன்னு சொல்றாங்க. காசு இல்லாதவங்க, இது அவங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு தகவலா பாக்குறாங்க.

சரி, பொதுவா நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், வரி செலுத்தும் போது அரசாங்கம் வளர நாடும் வளரும். ஒரு நாடு நல்லாருக்கும் பட்சத்தில் நீங்களும் நன்றாக இருப்பீர்கள். ஆதலால் வரி கட்டுங்க. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

மேலும் படிக்க: Tax Calculator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *